2050ல் வர வேண்டியது இப்போதே வந்துவிட்டது.. wet bulb temperature ஆபத்தானது ஏன்? நிபுணர்கள் வார்னிங்!
சென்னை: 2050 ஆம் ஆண்டு வரும் என எதிர்பார்த்த வெட் பல்ப் டெம்ப்ரேச்சர் தற்போது வந்துவிட்டது, இது ஏன் இத்தனை ஆபத்து என்பனை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் தகித்து வருகிறது. இதனால் சென்னை உள்பட்ட பல்வேறு நகர்ப்புறங்களில் வெப்பநிலை செஞ்சுரி அடித்தது.

இனி வரும் காலங்களில் இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வெப்பம் இருப்பதாகவே பலர் கூறுகிறார்கள்.
சாதாரணமாகவே மழை குறைந்து தகிக்கும் வெப்பம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த ஆண்டு வெப்பம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தை சேர்ந்த சுந்தரராஜன் ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் இன்று சென்னையின் "வெட்-பல்பு" வெப்பநிலை 31,3 டிகிரியை எட்டிவிட்டது. பொதுவாக இது "வெப்ப அளவு" (Temperature) மற்றும் வீத ஈரப்பதம் (humidity) கொண்டு "வெட்-பல்பு" வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. "வெட்-பல்பு" வெப்பநிலை 30 டிகிரியை தாண்டினால் மிகவும் சிக்கலாகும்.
32 டிகிரிக்கு மேல் சென்றால் சிக்கல் கூடுதலாகும், 35 டிகிரியை தொட்டுவிட்டால் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். இந்த பின்னணியில் "வெட்-பல்பு" நிலை 2050 வாக்கில் வரும் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் இப்போதே அந்த நிலையை நெருங்குவது கவலை அளிக்கக்கூடிய அம்சம் என சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, காற்றின் ஈரப்பதமும் அதிகமாக இருந்தால் அதை வெட் பல்பு டெம்பரேச்சர் (wet-bulb temperature) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மனிதர்களுக்கு வியர்வை மூலமே அவர்களின் வெப்பம் தணிகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது வியர்வை ஆவியாகும் போது மனிதர்களின் வெப்பத்தை எடுத்துச் செல்கிறது. இதனால் மனிதர்களின் வெப்பநிலை குறைகிறது. ஆனால் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இந்த செயல்முறை மந்தமாக இருக்கும். அதாவது காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வியர்வை மெதுவான வேகத்தில்தான் ஆவியாகும்.
எனவே நமது உடலின் வெப்பமும் குறையாமல் இருக்கும். இதனால் வெப்பமும் அதிகரித்துவிடும். வியர்வை வராமல் இருக்கக் கூடாது. அதன் மூலம் உடல் வெப்பமாவதுடன் உடலில் உள்ள கழிவுகளும் வெளியேறும். ஆய்வுகளின் படி, 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெட் பல்பு டெம்பரேச்சர் இருந்தால், மனித உடலில் வியர்வை வெளியேறாது. இந்த வெப்பமான சூழலில் குளிர்சாதன வசதி இல்லை எனில் மனிதர்களுக்கு இறக்கும் நிலை சூழல் ஏற்படும்.
நமக்கு உடலில் காய்ச்சல் இருக்கும் போது வியர்வையே வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன், அதிக நீர்ச்சத்துடன், நிழலில் கனமான ஆடைகள் அணியாத ஓய்வில் இருக்கும் நபருக்கும் இந்த வெப்பநிலை ஆபத்தானது தான். பொதுவாக வெப்பநிலையை காட்டிலும் இந்த வெட் பல்ப் டெம்பரேச்சர் நிலை குறைவாகவே இருக்கும். இது அதிகரிக்கும் போது மனிதர்களுக்கு ஆபத்தானது தான்.
காற்று வெப்பம் அதிகமாக இருந்தால், அதில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். எனவே உலக அளவில் வெப்பநிலை அதிகரித்தால் ஈரப்பதமும் அதிகமாகும். இதனால் வெட் பல்பு டெம்ப்ரேச்சரும் அதிகமாகும். தெற்காசியா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இந்த வெட் பல்பு டெம்பரேச்சர் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். புவி வெப்பமயமாதலை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இந்த சிக்கலை நீண்டகாலம் எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications