தாம்பரம் மேம்பாலத்திற்கு விறுவிறுன்னு போன மாதவன்.. 2கே கிட்ஸ் செயலால் அப்படியே அரண்ட வாகன ஓட்டிகள்
சென்னை : மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததை பெற்றோர் கண்டித்ததால் சென்னை தாம்பரத்தில் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து பட்டதாரி வாலிபர் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைக்கு 2000க்கு பிறகு பிறந்த இளைஞர்களில் சிலர் குடிக்கு அடிமையாகி வாழ்க்கையையே தொலைத்து வருகிறார்கள். குடிப்பழக்கம், கஞ்சா பழக்கம் பலருக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. இதேபோல் மலைப்பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று தங்குவது, அங்கு மது அருந்துவிட்டு ஊர் சுற்றுவது, கடற்கரைகளுக்கு சென்று தங்கி மது அருந்துவிட்டு ஊர் சுற்றுவது, நண்பர்களுடன் உட்கார்ந்து சரக்கு அடித்துவிட்டு புலம்புவதும், ஊர்சுற்றுவதும் தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள்.

குடிப்பதற்காகவே வேலைக்கு செல்வதும், குடிக்க பணம் கிடைத்து விட்டால் அன்றைக்கு வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் ஜாலியாக இருப்பதுமே வாழ்க்கை என்று பலர் நினைக்கிறார்கள். இவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பெற்றோர், சிறுவயது முதல் கஷ்டம் தெரியாமல் வளர்த்துவிட்டு, கேட்கும் போது எல்லாம் பணம் கொடுப்பதும், ரேஸ் பைக், கார் என கேட்பதை எல்லாம் வாங்கி தருவதுமே அவர்கள் கெட்டுப்போக காரணம் என்று கூறப்படுகிறது.
2கே கிட்ஸில் இப்படி வளரும் சில குழந்தைகள் ஏதாவது பெற்றோர்,உறவினர்கள் நண்பர்கள் திட்டினால், தங்களை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார்கள். அத்துடன் வாழ்க்கையில் அதைவிட பெரிய அவமானம் தங்களுக்கு நடந்ததே இல்லை என்று நினைத்து உயிரையே விட்டுவிடுகிறார்கள்.. அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் தாம்பரத்தில் நடந்துள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் பட்டேல் நகரை சேர்ந்த 23 வயதாகும் மாதவன் என்பவர் பி காம் பட்டதாரி ஆவார். இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தினமும் மது அருந்திவிட்டு வீ்ட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த மாதவன், பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது பெற்றோர், "வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து எங்களுடன் தகராறு செய்கிறாயே?" என மகனை கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மாதவன், வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.
இதன்பின்னர் மாதவன் தாம்பரம் மேம்பாலத்துக்கு நடந்தே வந்தார். பின்னர் திடீரென சுமார் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மாதவன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்துபோனார். இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், பாலத்தில் இருந்து குதித்து உயிரைவிட்ட மாதவன் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications