சென்னையில் நைட் ஆனாலே பெண்ணோடு கும்மாளம் போட்ட தாத்தா.. நள்ளிரவில் மிரண்ட ஹவுஸ் ஓனர்
சென்னை கீழ்பாக்கம் டிபி சத்திரம் கால்வாய் சாலை ஒன்றாம் தெருவில் வசித்து வந்த வினோத் என்பவர் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இவரது இருசக்கர வாகனம் தீ பற்றி எரிந்தது. இதுபற்றி பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறிய தகவலால் உடனே சென்று பார்த்துள்ளார் வினோத். அங்கு வினோத்தின் வாகனம் உள்பட ஐந்து வாகனம் தீயில் கருகி இருந்தது.
இதுபற்றி வினோத் அளித்த தகவலின் பேரில் டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்த 65 வயதான நட்ராஜ் என்ற முதியவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதை சிசிடிவி காட்சியை வைத்து கண்டுபிடித்தனர்.

ஆனால் அவரை விசாரிக்க முடிவு செய்தபோது, சம்பவம் நடந்த அன்று இரவு மாயமானார். காலையில் அப்படி சம்பவம் எதுவுமே தனக்கு தெரியாது என்பது போலும், எந்த சம்பவமும் நடக்காதது போலவும் இயல்பாக இருப்பது போல் நடித்தபடி வந்துள்ளார். பின்னர் வீட்டின் உரிமையாளர் தனது இருசக்கர வாகனம் காணாமல் போய்விட்டது என்று கூறினார். ஆனால் போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து இருசக்கர வாகனத்தை கொளுத்திய நடராஜை கைது செய்தனர்.
போலீசார் முதியவர் நடராஜை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நடராஜ் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆறு லட்சம் ரூபாய் கொடுத்து வினோத் வீட்டிற்கு மனைவியுடன் லீஸ் மூலம் குடிவந்துள்ளார். இதனிடையே ஓராண்டிற்கு முன்பு நடராஜின் மனைவி இறந்துவிட்டார். அதன் பின்னர் அடிக்கடி மது அருந்திவிட்டு வருவாராம்.. அப்படி வரும் போது, பல பெண்களை வீட்டுக்கு அழைத்து வருவாராம்..
ஒரு கட்டத்தில் இவரது கும்மாளத்தை பொறுக்க முடியாத வீட்டின் உரிமையாளர் வினோத் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இதை கண்ட முதியவர் நட்ராஜ், பலமுறை அதனை உடைக்க பார்த்துள்ளார் என்பது அங்கிருந்த கேமராவிலேயே பதிவாகி உள்ளது. ஒரு நாள் பெண் ஒருவரை முதியவர் நட்ராஜ் அழைத்து வந்தாராம். அந்த பெண் மது போதையில் வீட்டை விட்டு வெளியேற மறுத்துவிட்டாராம்.
இதனால் அந்த பெண்ணை முதியவர் நட்ராஜ் தரத்தரவென பிடித்து இழுத்து வெளியில் சென்றாராம்.. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது.. இதனை பார்த்த வினோத், நடராஜை வீட்டை காலி செய்ய சொல்லியிருக்கிறார். ஆனால் நடராஜ் லீஸ் தொகையை கொடுத்தால் தான் காலி செய்வேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், வினோத் 3 மாதங்களில் பணத்தை தர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜ் பழிவாங்கும் நடவடிக்கையாக வினோத்தின் வாகனம் உள்பட அந்த பகுதியில் உள்ள வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் வினோத் தெரிவித்துள்ளார். இதனிடையே தலைமறைவாக இருந்த முதியவர் நடராஜனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications