ரயிலில் ஏன் இந்த மஞ்சள், வெள்ளைக் கோடுகள் இருக்கு தெரியுமா? பயணிகளுக்கு அவசியம் தெரிய வேண்டிய தகவல்
சென்னை: ரயில்களில் செல்லும் போது சில பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிறத்திலான கோடுகள் இருப்பதை பயணிகள் கவனித்து இருக்க கூடும். அல்லது இதுவரை கவனிக்காமல் இருந்தால் இனி ரயில் பயணம் மேற்கொள்ளும் போது இதை கவனித்து பாருங்கள்.. வெறும் டிசைன்களுக்காக இந்த கோடுகள் போடப்படவில்லை. இதற்கு பின்னால் பயணிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இருக்கிறது இது குறித்து பார்க்கலாம்.
ரயில் பயணங்களுக்கு பயணிகள் மத்தியில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. சொகுசு, மலிவான கட்டணம், பாதுகாப்பான பயணம் ஆகியவற்றால் பயணிகள் அதிகமாக ரயில் பயணத்தை தான் நாடுவார்கள். இந்திய ரயில்வேயை பொறுத்தவரை உலக அளவில் இரண்டாவது பெரிய நெட்வொர்க் கொண்டது ஆகும். பல லட்ச கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

மஞ்சள், வெள்ளைக்கோடுகள்: ரயில்களை பொறுத்தவரை பயணிகள் அதிகம் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்களும் உள்ளன. அவற்றில் ஒன்றைத்தான் இங்கே பார்க்க போகிறோம். சொந்த ஊருக்கோ அல்லது தொலைதூரங்களுக்கு ரயிலில் முன்பதிவு செய்து பலரும் பயணம் செய்து இருப்போம். அப்படி பயணம் செய்யும் போது ரயில் பெட்டிகளில் படிக்கட்டுகளை ஒட்டி வெள்ளை, பச்சை, மஞ்சள் நிறத்தில் கோடுகள் இருக்கும்.
பலரும் இதை கவனித்தாலும் ரயில் பெட்டியின் டிசைன் என நினைத்து இருக்க கூடும். ஆனால், இது ரயில் பெட்டியின் டிசைன் கிடையாது.. இந்த வெள்ளை, மஞ்சள் கோடுகளுக்கு பின்னால் இருக்கும் காணம் என்ன தெரியுமா? அது பற்றிய விவரம் வருமாறு:-
நீல நிறத்தில் இருந்தால்: இந்தியாவில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பெட்டிகள் நீல நிறத்தில் இருக்கும். இந்த நீல நிற பெட்டியில் வெள்ளைக் கோடுகள் இருந்தால் அது முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டி என்று அர்த்தம். அதே போல மஞ்சள் கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி என்று பொருள்.
பச்சை நிற கோடுகளை கூட சில பெட்டிகளில் பார்த்து இருக்கலாம். அப்படி பச்சை நிறத்தில் இருந்தால் அந்த பெட்டி பெண்களுக்கான சிறப்பு பெட்டியாகும். பயணிகள் எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கும் விதமாக இந்த குறியீடுகள் ரயில் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. ரயிலில் எத்தனையோ முறை பயணம் செய்து இருக்கிறோம்.. இதை கவனிக்காமல் விட்டு விட்டோம் என பலரும் நினைப்பது புரிகிறது..
கவனித்து பாருங்கள்: இனி ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் பெட்டிகளில் கோடுகள் உள்ளதா என கவனித்து பாருங்கள்... இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். உள்ளூர் பயணம் முதல் தொலை தூர பயணம் வரை பயணிகளின் முதல் சாய்ஸ் ஆக ரயில்கள்தான் இருக்கின்றன.
வந்தே பாரத் ரயில்: இதனால் ரயில்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகளின் வசதியை மேம்படுத்த ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி, புதிய ரயில்கள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கூட சென்னை- நெல்லை, சென்னை - கோவை, சென்னை- மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், ரயில்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போதிய அக்கறையை ரயில்வே நிர்வாகம் காட்டுவது இல்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications