சென்னை கல்லுரி மாணவியை வீடியோவை காட்டி மிரட்டி மிரட்டியே.. அத்துமீறிய இளம் பெண்.. கோர்டில் ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படிக்கும் 20 வயதான மாணவியிடம் குளிக்கும் வீடியோவை காட்டி மிரட்டி மிரட்டி அத்துமீறிய இளம் பெண் கைது செய்யப்ட்டுள்ளார்.
இப்படியும் நடக்குமா என்பது போல் சம்பவங்கள் சென்னையில் நடக்கிறது. சென்னையில் கல்லுரி மாணவியை வீடியோவை காட்டி மிரட்டி மிரட்டி ஓரினச்சேர்க்கைக்காக அத்துமீற முயன்றுள்ளார் 26 வயது இளம் பெண். இது தொடர்பான புகார் சென்னை திருமங்கலத்தில் வந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார் மாணவி ஒருவர். அவருக்கு 20 வயது ஆகிறது. சென்னை திருமங்கலத்தில் தங்கியிருந்தபடி கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். அந்த மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் மாணவி கூறுகையில், நான், சென்னை திருமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி, பிஇ நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். எனது வீட்டுக்கு எதிரே 26 வயது இளம் பெண் குடியிருக்கிறார். அந்த பெண் எதிர்வீட்டில் குடியிருக்கும் பெண் என்பதால் எனக்கு நட்பு ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகி வந்தோம். அவர் அவசர உதவி என கேட்டதின் பேரில் ரூ1,00,000 மற்றும் ஒரு பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன்.
அவருடன் பழகியதால் எனக்கும் மதுபானம் அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள், நாங்கள் இருவரும் சேர்ந்து மதுபானம் அருந்தினோம். திடீரென அந்த இளம் பெண், எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததுடன், தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்படி வற்புறுத்தினார்.
ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி அவருடன் பழகுவதை ஒரு கட்டத்டிதல் நிறுத்தி விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், எனக்கு தெரியாமல் நான் குளிக்கும் போது எடுத்த வீடியோவை எனக்கு அனுப்பி, என்னை மீண்டும் ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைத்தார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் எல்லை மீறி போவதால் நான் வீட்டை காலி செய்ய முயற்சி செய்தேன். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த பெண், நான் குளிக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டினார் என்னுடன் பழகுவதை தவிர்க்கக்கூடாது. இல்லை எனில் நீ விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்ட தொடங்கினார்.
என்னை அவமானப்படுத்துவதுடன், என் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துவதாக கொலை மிரட்டல் விடுத்த அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கல்லூரி மாணவி அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இன்ஜினியரிங் மாணவி அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 26 வயது இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கைதான இளம்பெண்ணை அம்பத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதியிடம் அவர், "எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என்ன செய்கிறேன் என்றும் புரியவில்லை. என்னை மன நலமருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்" என்று கூறி நீதிபதி முன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அந்த பெண், அயனாவரம் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications