சொத்து பத்திரங்கள் தொலைந்து போயிடுச்சா? உடனே இதை பண்ணுங்க.. பத்திர ஆபீஸில் இதை மட்டும் மறக்கக்கூடாது
சென்னை: சொத்து சம்பந்தமான முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால் அவைகளை மறுபடியும் பெற முடியுமா? அந்த பத்திரங்களை மீட்க என்ன செய்ய வேண்டும்.
சொத்து சம்பந்தமான ஆவணங்கள், பத்திரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்... ஒருவேளை அவை திடீரென தொலைந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டால், சொத்து தொடர்பான ஆவணங்களின் நகலை எளிதாகவே பெறலாம்.

எப்ஐஆர்: இதற்கு முதலில், நீங்கள் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.. பத்திரங்கள் தொலைந்துவிட்டதாக சொல்லி, முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்ஐஆர்-யை பதிவு செய்ய வேண்டும்.. அந்த எப்ஐஆரில் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக குறிப்பிட வேண்டும்... காரணம், இந்த எப்ஐஆரின் நகல் உரிமையாளரால் எதிர்கால பயன்பாட்டிற்காக பயன்படுத்த உதவும்.
இந்த புகாருக்குரிய ரசீதை கையில் வைத்திருக்க வேண்டும்.. அதேபோல, இன்னவிதமான பத்திரம், இந்த இடத்தில் தொலைந்து விட்டது என்ற தகவலை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
சொத்து விவரங்கள்: குறிப்பாக ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி செய்தித்தாள்களில் சொத்தின் விவரங்களை தரவேண்டும்.. இழந்த ஆவணங்ளை யாராவது கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் பற்றிய அறிவிப்பை தெளிவாக வெளியிட வேண்டும்.
அதேபோல, ஹவுசிங் சொசைட்டியால் ஒதுக்கப்பட்ட பங்குச் சான்றிதழ் தொலைந்து போனால், அதை மறுபடியும் வெளியிடுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது எஃப்ஐஆர் நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்...
உறுதிமொழி: குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும், உங்களது தொலைந்த பத்திரம் கிடைக்காத பட்சத்தில், காவல் துறையிலிருந்து பத்திரம் கிடைக்கவில்லை (NOT TRACEBLE )என்ற கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.. பிறகு தொலைந்த பத்திரம் பற்றிய ஆட்சேபம் ஏதுமில்லை என்று நோட்டரி பப்ளிக் ஒருவரிடமிருந்து உறுதி மொழியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவல்களோடு பத்திரிக்கையில் வந்த விளம்பத்தின் நகல், தொலைந்து விட்ட பத்திரத்தில் உள்ள சர்வே எண் விபரங்கள் உள்ளிட்ட இதர தகவல்கள் ஆகியவற்றோடு சார்பதிவாளரை அணுகி விண்ணப்பம் செய்து கொள்ளவேண்டும்... இதற்கு பிறகு ஓரிரு வாரங்களில் தொலைந்த பத்திரத்தின் பிரதி உங்களுக்கு கிடைத்துவிடும்.
தொலைந்த பத்திரங்கள்: பிரதி பத்திரங்களை பெற்றுக்கொண்ட பிறகு, தொலைந்த பத்திரம் கிடைக்கும்பட்சத்தில், சார்பதிவாளரிடம் அதை முறையாக தெரிவித்து 2 பத்திரங்களில் சட்டப்படி எது செல்லுபடியாகும் என்பதையும் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து கொள்வது அவசியம்.
இதுபோன்ற புகார்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து, எஃப்ஐஆர் பெறும் நடைமுறை வழக்கத்தில் உள்ளதால், போலீசில் புகார் அளிப்பதற்கு முன்பு உங்கள் பகுதியில் இதுபோன்ற வசதி உள்ளதா? என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.
பத்திர ஆபீஸ்: எப்போதுமே நீங்கள் பத்திரம் செய்யும்போதே இரண்டாம் பிரதி ( SECOND COPY) என்று குறைவான முத்திரைத்தாளில் பத்திரத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கிறோமோ, அதுபோலவே எழுதி, பத்திர ஆபீசிலும் அதே எண்ணில் பதிவு செய்து கொள்வது நல்லது.
எல்லா இடங்களிலும் இந்த SECOND COPY யையே ஒரிஜினலுக்கு பதிலாக காட்டலாம். இதனால், ஒரிஜினல் நம்மிடம் பத்திரமாக எடுக்கும. அதேபோல, எல்லா பத்திரங்களையும் முறையாகவே ஸ்கேன் செய்து, GOOGLE DRIVE ல் SOFT COPY ஆக வைத்து கொள்வது இன்னும் நல்லது.. தேவைப்படும்போது SOFT COPY கள் மூலம் ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications