திருவள்ளூர் டூ சென்னை அம்பத்தூர்.. மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன்.. ஜொலிக்கும் ரயில்வே ஸ்டேஷன்
சென்னை: சென்னை அம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷன்களின் தரம், வேற லெவலுக்கு உயர போகிறது. அதுகுறித்த புத்தம் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அம்ரித் பாரத் நிலையம் - அம்ரித் பாரத் ஸ்டேஷன் என்ற திட்டமானது, ரயில் நிலையத்தின் தேவையை கருத்தில்கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.. மொத்தம் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார்..
தெற்கு ரயில்வே: இந்த திட்டத்தின்கீழ் மொத்தம், 25 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டவை. இந்த நிலையங்கள் ரூ.616 கோடி மதிப்பில், நாடு முழுவதும் உள்ள 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, தெற்கு ரயில்வேயில் உள்ள 25 ரயில் நிலையங்கள், ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் 18 நிலையங்களும், கேரள மாநிலத்தில் 5, கர்நாடகா, புதுச்சேரியில் தலா ஒரு நிலையமும் மேம்படுத்தப்பட உள்ளன.
ரயில் நிலையங்கள்: இதைத்தவிர, இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எஸ்கலேட்டர் வசதி கொண்டு வரப்படும், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்படும். நடைமேடைகள் மேம்படுத்தப்படும், 5ஜி இணையச் சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். காத்திருக்கும் அறைகள் அமைக்கப்படும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உட்பட 6 கோட்டங்களில் 92 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் 15 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு, இவற்றில் 8 நிலையங்களில் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
அம்பத்தூர், திருவள்ளூர்: சென்னையில் அம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.. ரூ.21.67 கோடியில் அம்பத்தூர் ரயில் நிலையமும், ரூ.28.82 கோடியில் திருவள்ளூர் ரயில் நிலையமும் மறுசீரமைப்புக்கு தயாராகி வருகிறதாம்.
சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் இதுகுறித்து சொல்லும்போது, "அம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலைய நடைமேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைக்கப்படுவதுடன், ரயில் நிலையம் அருகே 2 சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் சீரமைக்கப்பட உள்ளது.. இதைத்தவிர, ரூ.8 கோடி செலவில் இரு மின்தூக்கி வசதியுடன், 12மீ அகலம் கொண்ட பயணிகள் நடைமேம்பாலம், தகவல் திரைகள், சிசிடிவி கேமரா போன்ற வசதிகளும் இடம்பெற உள்ளன.
2 ரயில்வே ஸ்டேஷன்: இந்த 2 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications