சத்தமேயில்லையே.. "ஹைவேஸில்" விரைவில் வருது மாற்றம்.. 35 நெடுஞ்சாலைகளில் அதிரடி.. சபாஷ் தமிழக அரசு
சென்னை: நெடுஞ்சாலையில் நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது, உங்கள் பயணம் பாதுகாப்பாக அமைய தமிழக அரசு அடுத்தக்கட்ட அதிரடியை கையில் எடுத்துள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்க மத்திய அரசு எத்தனையோ விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது.. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், சாலை விபத்துகளில் அநியாயமாக உயிர்கள் பறிபோய் கொண்டிருக்கின்றன.

புள்ளி விவரங்கள்: தேசிய குற்ற ஆவண ஆணையம் விபத்துகளை பதிவு செய்து, அதற்கான காரணிகள் மற்றும் புள்ளி விவரங்களை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 2021ம் ஆண்டு, இந்தியாவில் எத்தனை சாலை விபத்துக்கள் நடைபெற்றது என்ற விவரத்தை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
அதில், பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்றதாக கூறியிருந்தது.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் 14,416 விபத்துக்கள் நடைபெற்று இருக்கின்றன. அதுமட்டுமல்ல, 2011 ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிக அளவு உயிரிழப்பு விபத்துக்களால் ஏற்பட்டது 2021ம் ஆண்டில் தானாம்..
சாயங்காலம்: அதாவது ஒருநாளைக்கு மட்டும் 422 உயிரிழப்புகள் சராசரியாக ஏற்பட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு என கணக்கிட்டால் 18 உயிரிழப்புகள் நடப்பதாகவும், அந்த ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், கடந்தமாதம், மத்திய அரசு மீண்டும் ஒரு ரிப்போர்ட் வெளியிட்டிருந்தது.. அதில், இந்த ஒரு வருடத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 4ல் 1 பங்கு விபத்துகள், சாயங்காலம் 6 முதல் இரவு 9 மணிக்குள் நடந்திருப்பதாக கூறி, இன்னொரு அதிர்ச்சியை தந்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே 90,663 விபத்துக்கள் நடந்துள்ளதாம்.
நிறைய விபத்துகள்: காரணம், வேலை நேரம் முடிந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வாகனங்களும், மாலையில் வெளியே செல்பவர்களின் வாகனங்களும் ஏற்படுத்தும் நெரிசல் காரணமாக இந்த விபத்துக்கள் ஏற்பட்டதாம். அதனால், இந்த குறிப்பிட்ட நேரத்தில் கவனமாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது.
இந்நிலையில், நம்முடைய தமிழகத்தில், சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.900 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன... அதாவது, விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் ரூ.900 கோடியில் அமைக்கபட உள்ளது.
விபத்து பகுதிகள்: இதில், தமிழகத்தை பொறுத்தவரை, அதிக விபத்து பகுதியாக கண்டறிந்த 35 இடங்களில் சீரமைப்பு, மேம்படுத்தும் பணிகளை செய்வதுடன், மேம்பாட்டு பணிக்கான டெண்டர் மார்ச் மாதத்துக்கு முன்பே வழங்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "அதிக விபத்து நடக்கும் இடங்களாக 23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாம்.. இந்த சாலைகள்தான் முதலில் மேம்படுத்தப்பட உள்ளன. 23 இடங்களில் சுமார் ரூ.390 கோடியில் விபத்து தடுப்பு பணிகள் நடைபெறவுள்ளது. குறிப்பாக, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மட்டும் 10 இடங்கள் அதிக விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதன்காரணமாக சாலை விரிவாக்கத்தின் மூலம் சென்னை - திருப்பதி சாலையில் விபத்துகள் நடைபெறுவது தடுக்கப்படும்..
கோயம்பேடு: செங்குன்றம் முதல் இரும்புலியூர் வரையிலான புறவழிச் சாலையில் மட்டும் 5 இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளது.. கோயம்பேடு - மதுரவாயல் இடையேயும் தீண்டிவனம் நெடுஞ்சாலையிலும் தலா 3 இடங்களில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன" என்று அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கைகளினால் சாலைவிபத்துக்கள் வெகுவாக குறையும் என்றும் நம்பப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications