சூப்பர் நியூஸ்! இது டிரையல்! "இந்த" 6 மாவட்ட ரேஷன் கடைகளில் இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்
சென்னை: தமிழகத்தில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பருப்பு, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுகின்றன. இங்கு இலவச ரேஷன் அரிசியும் 20 கிலோ வழங்கப்படுகிறது.

அது போல் பொங்கல் சமயத்தில் அரசு அறிவிக்கும் பரிசு பொருட்கள் கிடைக்கின்றன. அத்துடன் அரசு அறிவிக்கும் சலுகைகளும் இந்த ரேஷன் கார்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் விற்கப்படும் பாமாயிலை பலர் வாங்குவதில்லை, இந்த நிலையில் அதை காசுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள். மேலும் பாமாயில் உடல் நலனிற்கு கேடு விளைவிக்கக் கூடியது என பலர் கருதுகிறார்கள். இதனால் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது போல் தேங்காய் எண்ணெய் வழங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை உடலில் வெளிப்புறத்தில், தலையில் பூசுவதால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. எல்லாவிற்றையும்விட தென்னை விவசாயிகளும் பயனடைவார்கள் என விவசாய சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் விவசாயிகள் குழுவினர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழகத்தில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் தேங்காய் எண்ணெய் விற்பனை தொடங்கப்படும். பொதுமக்கள் எப்படி வரவேற்பு அளிக்கிறார்களே அதை பொருத்து மற்ற மாவட்டங்களுக்கும் விரிவடையும். இதை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி அறிவித்துள்ளார்.
மேலும் 6 மாவட்டங்களில் விரைவில் தேங்காய் எண்ணெய் விற்பனை விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது. இது வெற்றி அடைந்தால் அழைத்து ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அநேகமாக சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், நீலகிரி என திசைக்கு ஒரு மாவட்டமாக தேங்காய் எண்ணெய் வழங்க வாய்ப்பிருக்கிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications