Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிளம்பி" டக்குனு போயிட்டாரே அங்கே.. அடுத்த அதிரடியில் சசிகலா.. கூடவே இளவரசி வேற.. "இலை" என்னாகும்?

கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை கோயிலுக்கு இளவரசியுடன் கிளம்பி சென்றுள்ளார் சசிகலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயிரே போனாலும் இரட்டை இலையை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன் என்று தொடர்ந்து சொல்லி வரும் விகே சசிகலா தன்னுடைய அடுத்தக்கட்ட பயணத்தை துவங்கி உள்ளார்..!!

ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே விகே சசிகலா கருத்து கூறியிருந்தார்..

அதுமட்டுமல்லாமல், "27ம் தேதி பிறகு வேட்பாளரை அறிவிப்பேன்" என்று செய்தியாளர்களிடமே சசிகலா கூறியிருந்ததால், அது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது..

 சபதம் சசிகலா

சபதம் சசிகலா

காரணம், பிரிந்தவர்களையும், கட்சியையும் ஒன்றிணைப்பேன், அனைவரும் ஒன்றாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்று ஒரு வருட காலத்துக்கும் மேலாகவே சபதம் போட்டு வருகிறார் சசிகலா.. எனவே, இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி, எடப்பாடி + ஓபிஎஸ் தரப்பை இணைக்க முயற்சி மேற்கொள்வார் என்றும் அதிமுகவில் நம்பினார்கள். அதனால்தான், வேட்பாளரை அறிவிக்க போவதாக சொல்லவும், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.. இப்போது விரைவில் தன்னுடைய முடிவை சசிகலா அறிவிக்க போகிறாராம்.. அநேகமாக ஓரிரு நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என்கிறார்கள்...

முடிவுகள்

முடிவுகள்

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. சசிகலாவை பொறுத்தவரை இடைத்தேர்தல் தொடர்பாக எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தார்.. அதேசமயம், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க போவதாகவும் செய்தியாளர்களிடமே சொல்லியிருந்தார்.. சசிகலாவும் - ஓபிஎஸ்ஸும் சந்தித்து பேசபோவதாக, கடந்த 2 வருட காலமாகவே தகவல்கள் வட்டமடித்து வந்ததால், இந்த முறை இவர்கள் சந்திப்பு எப்படியும் நடந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவை தந்தால், வேட்பாளரை சசிகலா அறிவிக்க வாய்ப்பிருக்காது என்றும் தகவல்கள் கசிந்தன. இறுதியில் ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்துவிட்டார்.

முடிவுகள்

முடிவுகள்

ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. சசிகலாவை பொறுத்தவரை இடைத்தேர்தல் தொடர்பாக எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்தார்.. அதேசமயம், ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்திருந்த நிலையில், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க போவதாகவும் செய்தியாளர்களிடமே சொல்லியிருந்தார்.. சசிகலாவும் - ஓபிஎஸ்ஸும் சந்தித்து பேசபோவதாக, கடந்த 2 வருட காலமாகவே தகவல்கள் வட்டமடித்து வந்ததால், இந்த முறை இவர்கள் சந்திப்பு எப்படியும் நடந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஒருவேளை ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவை தந்தால், வேட்பாளரை சசிகலா அறிவிக்க வாய்ப்பிருக்காது என்றும் தகவல்கள் கசிந்தன. இறுதியில் ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவித்துவிட்டார்.

 ஷாக் தினகரன்

ஷாக் தினகரன்

இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜ தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்து விட்டது என்றே சொல்கிறார்கள்.. அதனால்தான், தேர்தலில் போட்டியிடாமல் அமமுக டிடிவி தினகரன் வேட்பாளரை வாபஸ் பெற்று விலகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.. எனினும், சசிகலா இடைத்தேர்தல் பற்றி பெரிதாக பேசவில்லை..

 விடமாட்டேன்

விடமாட்டேன்

செய்தியாளர்களிடம் சமீபத்தில் பேசும்போதுகூட, "என்னை எல்லாம் யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியாது. இரட்டை இலை சின்னத்தை எந்த காலத்திலும் யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விட மாட்டேன். சில பேரை இப்போது எடை போட்டுக் கொண்டிருக்கிறேன்.. வரும் எம்பி தேர்தலுக்குள் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.. அதிமுகவை உங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனக்கு வலுவான நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

 சோட்டாணிக்கரை

சோட்டாணிக்கரை

ஆனால், இப்போது திடீரென ஆன்மீக டூர் கிளம்பிவிட்டார் சசிகலா.. ஜெயிலில் இருந்து வெளிவந்திருந்த நிலையில், ஆன்மீக சுற்றுப்பயணங்களை அவர் மேற்கொண்டு வந்தாலும், வெளி மாநில பயணம் எதுவும் மேற்கொள்ளாமல் இருந்தார்.. இப்போது முதல்முறையாக கேரளா புறப்பட்டு சென்றிருக்கிறார்... அங்குள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் வழிபட போகிறார்.. பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் இந்த சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு. மனம் சார்ந்த கோளாறுகள் இருப்பவர்களை, இங்கே அழைத்து வந்து, வழிபட்டால் பூரண குணமடையும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்..

 சூனியம் ஏவல்

சூனியம் ஏவல்

அந்த காலத்தில் இங்கு உயிர் பலி கொடுக்கப்பட்டு வந்ததாம்.. ஆனால், அதற்கு பிறகு, அந்த நடைமுறை கைவிடப்பட்டு, சைவ வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது.. குறிப்பாக, பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து நலம் பெற்று செல்கிறார்கள் என்கிறார்கள்... இந்த கோயிலுக்குதான் சசிகலா போயுள்ளார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அவருடன் இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்றிருக்கிறாராம் சசிகலா.

 பில்லி, சூனியம்

பில்லி, சூனியம்

அவரது இறப்புக்குப் பிறகு முதல்முறையாக அங்கு செல்கிறார் சசிகலா... அவருடன் இளவரசியும் சென்றுள்ளதாக தெரிகிறது.. எதிர்ப்புகளை வீழ்த்தவும், பில்லி, சூனியம் உள்ளிட்ட தாக்குதல்களில் இருந்து மீளவும் சோட்டாணிக்கரைக்கு பலரும் விஜயம் செய்துவரும் நிலையில், சசிகலாவிடம் சோட்டாணிக்கரையில் வழிபட போவது, பலரது கவனத்தையும் திருப்பி உள்ளது.. இந்த வழிபாட்டை முடித்துக்கொண்டு அப்படியே குருவாயூரப்பன் கோயிலுக்கும் செல்லும் திட்டத்தில் இருக்கிறாராம் விகே சசிகலா..!

கலர்ஃபுல் டீம்

கலர்ஃபுல் டீம்

ஆனால், இந்த இடைத்தேர்தல் விவகாரத்திலேயே, எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட யுக்திகளை பாஜக கவனிக்காமல் இல்லை.. ஒருபக்கம் பாஜகவுக்கு கட்டுப்படாமல், மறுபக்கம் ஓபிஎஸுக்கு செக் வைத்தது, மிகப்பெரிய சாணக்கியத்தனமாக பார்க்கப்பட்டது.. எடப்பாடி பழனிசாமியின் துணிச்சலுடன் சேர்த்து, ஓபிஎஸ்ஸின் பலத்தையும் எடைபோட்டே வருகிறது பாஜக.. அதேசமயம், தனக்கு இன்றுவரை ஆதரவாக ஓபிஎஸ் இருப்பதாலேயே, வரப்போகும் தேர்தலில் அவரை இணைத்தே கூட்டணி விஷயத்தையும் முடிவு செய்யும் என்கிறார்கள்.. சுருக்கமாக சொல்லப்போனால், பாஜகவின் முடிவுக்கு கட்டுப்பட்டே ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் இந்த மூவருமே, இடைத்தேர்தலில் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துள்ளநிலையில், எம்பி தேர்தலில் இவர்களுக்கான முக்கியத்துவம் கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+