இந்தியாவின் மிக மெதுவான ரயில் எது தெரியுமா? 46 கி.மீ போக 5 மணி நேரம் ட்ராவல் பண்ணனும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய ரயிலாகவும், பயணிகள் விரும்பும் ஒரு ரயிலாகவும் ஒரு ரயில் உள்ளது. அதுவும் தமிழகத்தில் தான் இந்த ரயில் ஒடுகிறது. மொத்தமே 46 கிலோ மீட்டர் உள்ள தூரத்தை அடையை இந்த ரயிலில் 5 மணி நேரம் ட்ரவல் செய்ய வேண்டும். இந்த ரயிலை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில்வேக்கு பெரிய பங்கு உள்ளது. தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் சரி.. உள்ளூர் பயணம் என்றாலும் சரி.. ரயில் இருக்கிறது என்றால் முதலில் ரயிலில் பயணம் செய்யவே விரும்புவார்கள்.

Train Nilgiri Hill Train Travel

ரயில் பயணம்: கட்டணம் குறைவு.. பாதுகாப்பான பயணம்.. பேருந்துடன் ஒப்பிடும் போது அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.. இப்போது இந்தியாவில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்ட ரயில்களை இயக்குவதில் ரயில்வே கவனம் செலுத்துகிறது. பயணிகளின் பயண நேரம் மிச்சமாகும் என்பதால் அதிவேகத்தில் செல்லும் ரயில்களையே அதிகம் நாடுகிறார்கள்..

மெதுவாக செல்லும் ரயில்: அதேவேளையில் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக இயங்கக் கூடிய ரயிலாகவும் பயணிகள் விரும்பும் ஒரு ரயிலாகவும் ஒரு ரயில் உள்ளது. அதுவும் தமிழகத்தில் தான் அந்த ரயில் ஒடுகிறது. அது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். தமிழகத்தின் நீலகிரியில் ஓடும் மலை ரயில் தான் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லும் ரயில் ஆகும். ஆனால், சுற்றிலும் இயற்கை காட்சிகளுக்கு நடுவே ரம்மியமான சூழலில் இந்த ரயில் பயணிப்பதால் இந்த ரயிலில் பயணம் செய்வதற்காகவே சுற்றுலா பயணிகள் படையெடுக்கிறார்கள்.

சென்னை பீச் - எழும்பூர் 4வது வழித்தடம்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது? ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்


5 மணி நேரம் டிரவல்: யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாகவும் இந்த ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டி வரை இந்த ரயில் செல்கிறது. வெறும் 46 கிலோ மீட்டர் தூரத்தை பயணிக்க 5 மணி நேரம் ஆகிறது. நீலகிரி மலை ரயில் திட்டம் 1854 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், மலைப்பாதையில் ரயிலை இயக்குவதில் பல சிரமங்கள் இருந்ததால் 1891 ஆம் ஆண்டுதான் ரயில் சேவை தொடங்கியிருக்கிறது.

இன்டெர்நெட்டே தேவையில்லை.. வாட்ஸ் அப்பில் வீடியோ, போட்டோக்களை அனுப்பலாம்.. வரப்போகும் அசத்தல் வசதி


பல சுரங்கங்கள் வழியாக: 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பணி 1908 ஆம் ஆண்டில் தான் முடிந்துள்ளது. இந்த ரயில் பல சுரங்கங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மேமபாலங்கள் வழியாக பயணிக்கிறது. மலைகள், தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் என கண்ணுக்கு விருந்தளிக்கும் பசுமையான பாதையில் இந்த ரயில் பயணிக்கிறது.

மேட்டுப்பாளையம் - குன்னூர் வரையில் செல்லும் பாதைதான் இதில் ஹைலைட் ஆனது. 4 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் மலை ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யலாம். விடுமுறை நாட்களில் இங்கு எப்போதும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+