நயன்தாரா சர்ச்சை.. வாடகைத் தாய் முறை யாருக்கெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது? முழு விவரம்!
சென்னை: வாடகைத் தாய் மூலம் யாரெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள் தெரியுமா?
நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்துள்ளனர். இதிலிருந்து சர்ச்சை கிளம்பியது. 4 மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும் என கேள்வி எழுந்தது.
மேலும் கர்ப்பிணிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மருத்துவர்களே அறிவுறுத்தும் Picme எனும் எண் நயன்தாரா பெயரில் இல்லை என கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா இயற்கை முறையில் குழந்தை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

வாடகைத் தாய்
இதனால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இருவரில் ஒருவருக்கு இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற சான்றிதழை மருத்துவர் வழங்க வேண்டும்.

வாடகைத் தாயாக வரும் பெண்
வாடகைத் தாயாக வரும் பெண் வணிக ரீதியில் இந்த செயலை செய்யக் கூடாது. இதனால் கூடுமானவரை குழந்தையில்லாத தம்பதியின் உறவினரே வாடகைத்தாயாக வரலாம். இவர்களுக்கு 16 மாதங்களுக்கான காப்பீடு, மருத்துவ செலவுகளை மட்டுமே அந்த தம்பதி ஏற்க வேண்டும். இதை தவிர்த்து ஒற்றை ரூபாய் கூட அந்த வாடகைத்தாய்க்கு கொடுக்கக் கூடாது உள்ளிட்ட சட்டவிதிகள் உள்ளன.

திருமணமாகி 5 ஆண்டுகள்
ஆனால் முதல்விதியான திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்ற விதியையே நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்தரிப்பு சிகிச்சை வல்லுநர் முல்லை வேலுத்தம்பி தமிழ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் குழந்தையின்மைக்கான Medical Indication certificateஐ வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்வோர் வாங்க வேண்டும்.

கர்ப்பப்பை இல்லாதவர்கள்
இந்த முறையில் யாரெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றால் கர்ப்பப்பை இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாதவர்கள், நிறைய முறை டெஸ்ட் டியூப் பேபிக்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட போதிலும் கரு வளர முடியாமல் போதல், கர்ப்பம் ஆகிறார்கள், ஆனால் குழந்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக அபார்ஷன் ஆகிறது, உடல் ரீதியாக நோய் இருக்கும் பட்சத்தில் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த தாயின் உயிருக்கே ஆபத்து எனும் பட்சத்தில் வாடகைத் தாய் முறையை அணுகுகிறார்கள் என அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications