பிரதமரின் Eco ஜாக்கெட்டை தயாரித்தது தமிழக நிறுவனம்.. வடிவமைத்தவர் யார் தெரியுமா? 2வது லட்டு!
பிரதமர் மோடி அணிந்திருந்த பிளாஸ்டிக் ஜாக்கெட்டை வடிவமைத்தவர் யார்?
சென்னை: பிரதமர் மோடி அணிந்திருந்த பிளாஸ்டிக் ஜாக்கெட்டை வடிவமைத்தவர் யார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
பிளாஸ்டிக் எனும் அரக்கனை ஒழிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு கெடுதலை விளைவிக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக்கை மட்டும் பயன்படுத்துங்கள். அந்த பிளாஸ்டிக்கையும் நிலத்தில் போட வேண்டும். அப்படி போட்டால் மண் வளமும், நிலத்தடி நீர் வளமும் கடுமையாக பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

பிளாஸ்டிக் ஒழிப்பு
எனவே பிளாஸ்டிக்கை ஒழிக்க அதற்கான மாற்றுகள் எத்தனையோ வந்துவிட்டன. மந்தார இலை, அலுமினியம் பேப்பர்கள், தொண்ணைகள், பாக்குமட்டை உள்ளிட்டவை வந்துவிட்டன. ஆனாலும் மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக்கால் நெய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார். மோடி அணிந்த அந்த ஜாக்கெட் மிகவும் பிரபலமடைந்தது. இந்திய எரிசக்தி வார தொடக்கவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பெங்களூருவுக்கு வந்த பிரதமருக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த ஜாக்கெட்டை பரிசாக அளித்தது.

கரூர் மாவட்டம்
இந்த ஜாக்கெட்டை தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கா என்ற ஆடை தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இது தமிழர்களுக்கு பெருமையை தருகிறது. அதைவிட அந்த ஜாக்கெட்டை ஒரு தமிழக இளைஞர்தான் வடிவமைத்தார் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது. மேற்கண்ட ஆடை நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் செந்தில்.

35 வயதாகும் செந்தில்
35 வயதாகும் செந்தில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார். சென்னையில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் அந்த வேலையை விட்டுவிட்டார். பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து ஆடை தயாரிக்கும் ஸ்ரீரங்கா நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டு கரூரில் தொடங்கினார். இந்த பிளாஸ்டிக் ஜாக்கெட் குறித்து செந்தில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

ரூ2000 விலை
அதில் அவர் கூறுகையில் பிரதமர் மோடி அணிந்திருந்த ஜாக்கெட் ரூ. 2000த்திற்கு விற்கப்படுகிறது. ஒரு ஜாக்கெட் தயாரிக்க 20 முதல் 28 பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகள் மேற்கத்திய நாடுகளில் பிரபலமடைந்துள்ளது. ஆனால் இந்திய சந்தையில் அதற்கான வரவேற்பும் விழிப்புணர்வும் இப்போது மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டே வருகிறது. நாங்கள் நிறைய கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்தியன் ஆயில், ஜோஹோ போன்ற நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவ்வாறு செந்தில் தெரிவித்தார்.

ரோல்மாடல்
முதலாளித்துவத்தை மையமாக கொண்டு 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட குரு திரைப்படம்தான் தனது ரோல்மாடல் என செந்தில் தெரிவித்துள்ளார். இந்த படம்தான் தனது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தை பார்த்த பிறகுதான் தான் ஒரு தொழிலதிபராக வேண்டும் என முடிவு செய்தார் என தெரிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடியின் ஜாக்கெட்டை போல கரூர் நிறுவனம் பிரபலமடைந்து வருகிறது. மோடியின் ஜாக்கெட்டை தயாரித்தது தமிழகத்தின் கரூர் நிறுவனம் என்ற பெருமை இருக்கும் நிலையில் அதை வடிவமைத்தவரும் தமிழர் என்பதை கேட்க கண்ணா 2வது லட்டு தின்ன ஆசையா என்பதை போல் உள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications