நம்ம விஜயகாந்த்தா இது.. கண்ணாடி கூட போட முடியலை.. பாவம் அவரை விட்ருங்களேன் ப்ளீஸ்.. கண்ணீர் கோரிக்கை
விஜயகாந்த் உடல்நிலையை கண்டு பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்
சென்னை: விஜயகாந்த்தை நேற்று பார்த்ததில் இருந்தே, தமிழக மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.. மேலும் சிலர், வீடியோவை பார்த்து கோபத்தில் கொந்தளித்து போயுள்ளனர்.. விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை..
Recommended Video
இதனால் கடந்த சில தினங்களாகவே சிகிச்சையில் இருந்து வருகிறார்.. அடிக்கடி சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு செல்வதும், அல்லது சென்னையிலேயே மருத்துவமனைகளில் அட்மிட் ஆவதுமாக இருக்கிறார்.
விஜயகாந்த் பேசுகிறார் என்றால், முன்பெல்லாம் கூட்டம் கூட்டமாக பொதுமக்களும், தொண்டர்களும் திரண்டு வருவார்கள்..
ஆனால், சமீபகாலமாகவே விஜயகாந்த் பேசுவதை கேட்க முடியவில்லை.. கடந்த 2019 தேர்தலின்போது, விக்கிரவாண்டிக்கு பிரச்சாரம் செய்ய வந்தார்.. விஜயகாந்த் பார்ப்பதற்கு அப்போது, ஓரளவு தெளிவாக காணப்பட்டார். பிரச்சார வேனில் ஏறி கொஞ்சம் நேரம் நின்று கொண்டிருந்தார். கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தார்.. கைகளை கூப்பி வணக்கம் சொன்னார். பின்னர், பிரச்சார வேனுக்குள் உட்கார்ந்து கொண்டார். நிறைய பேசுவார் என்று மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் அதிகம் பேசிவில்லை..

மைக் பிடித்த கேப்டன்
"இரட்டை இலை சின்னத்தில் முத்தமிழ் செல்வனுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்" என்று மட்டும் கேட்டுக் கொண்டார். 2 மைக் பிடிக்கப்பட்டும், அவரது குரல் கம்மி இருந்தது.. இதைக் கேட்டு தொண்டர்கள் அதிர்ந்து போனார்கள்.. அதற்கு பிறகு வெளியிடங்களில் அவர் பேசுவது குறைந்தே உள்ளது.. ஆனால், அத்திப்பூத்தாற்போல் எப்போவதாவது வெளியே வருகிறார்.. அப்படியே வந்தாலும் அவரால் பேச முடிவதில்லை.

சாயங்காலம்
நடந்து முடிந்த தேர்தலின்போது, ஓட்டுப்போடுவதற்குகூட விஜயகாந்த் வரவில்லை.. எப்போதுமே தேர்தல் என்றாலே, குடும்பத்துடன் வந்து ஓட்டுப்போட்டு விட்டு போவார்.. ஆனால், இந்த முறை வரவில்லை.. "அப்பா எங்கே? ஓட்டுப்போட விஜயகாந்த் வருவாரா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. "தலைவர் சாயங்காலம் வந்து ஓட்டுபோடுவார்" என்று அவரது மகன் சொல்லிவிட்டு போனார்.. அதனால் சாயங்காலம் எப்படியாவது விஜயகாந்த்தை பார்த்துவிட வேண்டும் என்று தொண்டர்கள் காத்திருந்தனர்.. கடைசிவரை அவர் ஓட்டுப்போட வரவேயில்லை.

ஆபரேஷன் + கால் விரல்
இதற்கிடையே நீரிழிவு நோய் காரணமாக சமீபத்தில் அவரது வலது கால் விரல்கள் அகற்றப்பட்டன.. நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது விரல் அகற்றப்பட்டது... இப்படி பல உடல்நலக் கோளாறுகள் விஜயகாந்த்துக்கு இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஒரு அறிவிப்பு தேமுதிக சார்பில் வெளியானது.

வாய்விட்டு அழுதனர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றுவார் என்று தெரிவிக்கப்படவும், தொண்டர்கள் உற்சாகமானார்கள்.. காலையில் இருந்தே விஜயகாந்தை பார்ப்பதற்காக கோயம்பேடு ஆபீசில் குவிய தொடங்கிவிட்டனர்.. கட்சி அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்த், 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார். விஜயகாந்த்தை பார்த்த தொண்டர்கள், அப்படியே ஒரு கணம் உறைந்து போய்விட்டனர்.. நம்ம கேப்டனா இது? இவருக்கா இந்த நிலைமை? என்று வாய்விட்டு கதறி அழுதே விட்டனர்.

கேப்டன் + கூலிங் கிளாஸ்
அதேசமயம், இந்த சம்பவம் விஜயகாந்த் ரசிகர்களிடையே வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.. விஜயகாந்த்தை இந்த நிலைமையில் வெளியே அழைத்து வர வேண்டுமா? என்ற கேள்விகளும் கிளம்பி உள்ளன.. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், வேனில் விஜயகாந்த் உட்கார்ந்துள்ளார்.. பிரேமலதா விஜயகாந்த் தோளை ஒருகையில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். தேசிய கொடி ஏற்றும்போது, இரு கைகளாலும் ஏற்ற முயன்றார்.. அப்போது விஜயகாந்த் அப்படியே சாய்ந்து விழ போனார்..

கூலிங் கிளாஸ்
இதனால், பதறிப்போன பிரேமலதா, ஒரு கையால் விஜயகாந்த்தை இழுத்து பிடித்து கொண்டு இன்னொரு கையால் கொடியேற்றினார்.. பிறகு, விஜயகாந்த் கூலிங் கிளாஸ் போட முயன்றார்.. அந்த கூலிங் கிளாஸைகூட விஜயகாந்த்தால் போட்டுக் கொள்ள முடியவில்லை.. பிரேமலதாதான் கண்ணாடியை எடுத்து அவருக்கு மாட்டிவிடுகிறார்.. ஆனால், பெரும் சிரமத்துக்கு இடையில்தான் கூலிங் கிளாஸ் மாட்டிவிடப்படுகிறது. ஆனால், விஜயகாந்த்தால் நேராக, நிமிர்ந்து உட்காரமுடியவில்லை.. கடைசிவரை அவரை கீழே விழாதவாறு பிடித்துக் கொண்டேதான் நின்றார் பிரேமலதா.

விட்ருங்க ப்ளீஸ்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கொந்தளித்துவிட்டனர்.. "அவரை விடுங்க ப்ளீஸ்.. ஏன் அவரை இப்படி பாடுபடுத்தறீங்க.. இதெல்லாம் வன்கொடுமையில் சேராதா? அவரை இப்படி துன்புறுத்தி அரசியல் செய்ய வேண்டுமா? அவரை எங்களால் பார்க்கவே முடியல.. தயவுசெய்து டார்ச்சர் தராதீங்க.. தங்கமான மனுஷன் அவர்.. அவருக்கு போய் இந்த நிலைமையா? எப்படி இருந்த மனிதர்? கட்சியை நடத்தவும், அரசியல் செய்யவும், பொதுஇடத்தில் இப்படி வைத்து கொடுமைப்படுத்தணுமா? அவரால் உட்காரகூட முடியல.. பாவம்.. தயவுசெய்து அவரை விடுங்க" என்று கண்ணீர் கோரிக்கையை விடுத்து வருகின்றனர்.. சீக்கிரம் குணமாகி வந்துடுங்க கேப்டன்..!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications