Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் யார் தெரியுமா? அடாவடி காட்டிய "அஸ்வினி".. மேலே பறந்த தகவல்.. கைதானது எப்படி? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நரிக்குறவ பெண்மணி அஸ்வினி கைது செய்யப்பட்டது எப்படி? அவரை கைது செய்வதற்கான ஆர்டர் எப்படி போனது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு முழுக்க பிரபலம் அடைந்தவர் நரிக்குறவ இனத்தை சேர்ந்த பெண்மணி அஸ்வினி. மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயிலில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்காக கடந்த ஆண்டு பூஞ்சேரி நரிக்குறவர் பகுதியை சேர்ந்த அஸ்வினி மற்றும் அதே சமுதாயத்தை சேர்ந்த மக்கள் சிலர் சென்றனர்.

Do you know who i am? How did Ashwini arrest by Chennai police in Mamallapuram

ஆனால், அவர்கள் பந்தியில் அமரவிடாமல் கோயில் நிர்வாகத்தினரால் அவமதிக்கப்பட்டனர். இதையடுத்து, மனமுடைந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை இணைய ஊடகம் வாயிலாக தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளத்தில் பரவியது. இந்த வீடியோ இணையம் முழுக்க தீவிரமாக பரவியது.

தமிழ்நாடு அரசும் இதில் நேரடியாக தலையிட்டது. அதன்படி நரிக்குறவப் பெண் அஸ்வினி பேசிய வீடியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றது. இதனைத் தொடர்ந்து,மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அந்தப் பெண் அஸ்வினி மற்றும் நரிக்குறவர் சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து அமைச்சரும் அன்னதானம் சாப்பிட்டார்.

லோன்: அரசின் இந்த நடவடிக்கை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் அதோடு விடாமல் இவர்களுக்கு உதவி செய்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் கூட வெளியிட்டது. அதன் ஒரு கட்டமாக கடந்த ஆண்டு தீபாவளி அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார். நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

என்ன நடந்தது?; ஆனால் அதன்பின் அஸ்வினி தனக்கு அரசியல் கனெக்சன் இருப்பதாக கூறி கடைக்காரர்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மாமல்லபுரத்தில் வியாபாரம் செய்து வரும் இவர்.. அங்கே இருக்கும் ஆட்கள் பலரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

அதாவது எனக்கு அரசியல் கனெக்சன் இருக்கு தெரியுமா? நான் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா என்று மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. உணவு கடைகளுக்கு செல்லும் இவர்.. அங்கே குறைந்த விலைக்கு உணவு கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். நான் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கம்.. என்னையே மிரட்டுகிறீர்களா என்று கூறி இவர் அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது.

அங்கே கடை நடத்தும் பலரிடம் தனக்கு அரசியல் ரீதியாக எனக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறி இவர் மிரட்டி காசு கேட்டதாக கூறப்படுகிறது.

ஆக்சன்: இந்த நிலையில்தான் நேற்று நந்தினி என்ற நரிக்குற பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் மாமல்லபுரத்தில் அவரை அஸ்வினி கத்தியில் குத்தி உள்ளார். விவாதம் சண்டையில் முடிய, அஸ்வினி நந்தினி கையில் கத்தியால் குத்தி உள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய சென்ற போது அஸ்வினி சில முக்கியமான விஷயங்களை கூறி மிரட்டி இருக்கிறார். நான் யார் தெரியுமா? நான் சொன்னால் அமைச்சர்களே இங்கே வருவார்கள்? என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? அந்த பெண்ணை கைது செய்யுங்கள் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மேலிடத்திற்கு உடனே தகவல் சென்றுள்ளது. அஸ்வினியின் இந்த தொடர் செயல்பாடுகள் குறித்து மேலிடத்திற்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து மேலிடத்தில் இருந்து வந்த பதிலில்.. இதை எல்லாம் பார்க்காதீங்க. அவர் தவறு செய்து இருந்தால் கைது செய்யுங்கள். எந்த அரசியல் அழுத்தமும் இல்லை என்று கூறி உள்ளனர். இதையடுத்து போலீசார் அஸ்வினியை கைது செய்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+