சாந்தமாக பேசுவார்! 18 மணி நேரம் கூட ஓவர் டைம் பார்ப்பார்! தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி! யார் தெரியுமா?
சென்னை: சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் தாக்கப்பட்ட மருத்துவர் தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவர் பாலாஜி ஜெகநாதன், பேராசிரியர் & HOD, மருத்துவ புற்றுநோயியல் துறையில் உள்ள இவர் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முன்னேறி வருகிறார். பொதுவாக சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் ஒரு நாளுக்கு 3 நோயாளிகளை குறைந்தபட்சம் பார்க்க வேண்டும். அதற்கு மேல் பார்க்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

ஆனால் மருத்துவர் பாலாஜி ஜெகநாதன் ஒரு நாள் முழுக்க 120க்கும் அதிகமான நோயாளிகளை பார்க்க கூடியவர். சில நாள் ஓவர் டைம் பார்த்து 200 நோயாளிகளை கூட பார்க்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் மிக மிக சாந்தமாக, கண்ணியமாக பேச கூடியவர் என்றும் கூறப்படுகிறது. யாரிடமும் அவ்வளவு எளிதாக கோபம் அடைய கூடியவர் இல்லை.
அதேபோல் மருத்துவமனைக்கு தினமும் சரியான நேரத்தில் வரக்கூடியவர். ஒரு நாளைக்கு 120 நோயாளிகளை பார்ப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்த மருத்துவரை தாக்கிய விக்னேஷ் குடும்பத்திற்கு நோயை பற்றி எந்த தெளிவும் இல்லை. முக்கியமாக புற்று நோய் சிகிச்சைக்கு.. கீமோதெரபி கொடுத்தால் உறுப்புகள் பாதிக்கப்படும் என்பது தெரியவில்லை.
இது தெரியாமல் மருத்துவர்கள்தான் இப்படி எல்லாம் செய்துவிட்டார்கள் என்று இப்போதும் கூட விக்னேஷ் குடும்பம் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறது. கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது?: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விக்னேஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாலின் அறிக்கை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். போலீசார் கைப்பற்றி கத்தி.. காய்கறி கட் செய்ய பயன்படுத்தப்படும் கத்தி ஆகும். இதில் தீயில் வாட்டிய மார்க் இருந்துள்ளது. இதனால் இதை தீயில் வாட்டி அதை சூடு படுத்தி இருக்கலாம்.. அதன் பின் அதை கூர்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம்












Click it and Unblock the Notifications