சென்னையில்.. பெண்ணின் மூளையை வறுத்து சாப்பிட்ட நபர் சிக்கியது எப்படி? பின்னணி தகவல்கள்
சென்னை: சென்னை சூட்கேஸ் கொலை விவகாரத்தில், கொலையாளி எப்படி சிக்கினார்? என்ன வாக்குமூலம் தந்தார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.. இந்த கொலைக்காரர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் வருகிறார்கள்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில், ஒரு சூட்கேஸ் கிடப்பதாகவும், அதில் ரத்தக்கறைகள் இருப்பதாகவும் துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீஸ் விசாரணை: இதனால், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சூட்கேசை திறந்து பார்த்தனர்.. அப்போது, இளம்பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் கொடூரமாக இருந்துள்ளது.. மேலும் உடல் பாகங்கள் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது.. எனவே, சூட்கேஸைப் பறிமுதல் செய்த போலீஸார் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையையும் துவங்கினார்கள்.
அந்த பெண் யார் என்று தெரியாததால், தமிழகம் முழுவதும் காணாமல் போன இளம் பெண்களின் லிஸ்ட்டை எடுத்து விசாரித்தனர்.. மற்றொருபக்கம் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.
இளைஞர் புகார்: இந்த நேரத்தில், தன்னுடைய அக்காவை காணவில்லை என்றும், அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், "மைன்ட் டிவைஸ்" என்ற செயலி மூலம் பார்த்ததில் துரைப்பாக்கத்தில் கடைசியாக செல்போன் செயல்பாட்டில் இருந்ததாக தெரிகிறது என்று இளைஞர் ஒருவர் துரைப்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார்.
இதனால் இளைஞர் அக்குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்தபோது, தங்கள் மகள் தீபாவை 2 நாட்களாக காணவில்லை என்றும், ஊதுபத்தி குடோன் ஒன்றில் வேலை செய்து வருவதாக தங்களிடம் சொன்னதாகவும், பெற்றோர் தரப்பில் சொன்னார்கள்.
சகோதரி சடலம்: இதையடுத்து, சூட்கேஸில் கைப்பற்றப்பட்ட பெண் சடலம் மற்றும் சகோதரியை காணவில்லை என இளைஞர் ஒருவர் அளித்த புகார் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் சூட்கேசில் இறந்து கிடந்தவர் மாதவரத்தை சேர்ந்த தீபா என்ற பெண் என்பது உறுதியானது. இதனால், கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு வந்த செல்போன் அழைப்புகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போதுதான் மணிகண்டன் என்ற நபர் பெயர் அடிபட்டது.
மணிகண்டன்: அவருடன்தான், தீபா கடைசியாக பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த தகவலின் அடிப்படையில், மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவராம்.. தற்போது துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. தன்னுடைய மாமா வீட்டில் தங்கியிருந்து, சென்னையில் உள்ள கார் கம்பெனியில் பணியாற்றி வருகிறாராம் மணிகண்டன்.
சம்பவத்தன்று துரைப்பாக்கம் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன், தீபாவை போனில் தொடர்பு கொண்டு உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார்.. அப்போது ஏற்பட்ட பணத்தகறாலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது.. இதுவே கொலை வரை சென்றதாகவும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது..
துரைப்பாக்கம்: இதுகுறித்து துரைப்பாக்கம் போலீஸ் தரப்பில் சொன்னபோது, "தீபாவை 2 நாட்களாக காணவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை தேடிவந்தபோது, துரைப்பாக்கத்தில் அவரது செல்போன் சிக்னல் காட்டியதால், துரைபாக்கத்தில் தேடியிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான், தீபாவை மணிகண்டன் கொலை செய்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட பணத்தகராறில், தீபாவை சுத்தியலால் அடித்து கொன்று, சடலத்தை அந்தப்பகுதியில் புதிதாக கட்டிவரும் கட்டிடத்தின் புதருக்குள் வீசியிருக்கிறார்.
சடலத்தை அங்கே மறைத்துவிட்டு, அதற்கு பிறகு சடலத்தை வேறு இடத்திற்கு எடுத்து செல்வதற்காக, புதிதாக சூட்கேஸ் ஒன்றையும் வாங்கியிருக்கிறார்... சூட்கேஸூக்குள் தீபாவின் சடலம் வைக்க முடியாது என்பதால், சடலத்தை துண்டு துண்டாக வெட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. தீபாவை கொலை செய்த குற்றத்துக்காக மணிகண்டனை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
கொலை பகீர்: இதையடுத்து, நேற்று முழுவதுமே மணிகண்டனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, இந்த கொலை குறித்த பகீர் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார் மணிகண்டன்.
அதாவது பாலியல் தொழிலாளியான தீபாவுக்கு 35 வயதாகியும் இன்னும் கல்யாணமாகவில்லை.. மணிகண்டனுக்கு, பெண் சபலம் இருந்து வந்துள்ளது.. அதனால் சம்பவத்தன்று தீபாவை தன்னுடைய வீட்டுக்கு மணிகண்டன் வரவழைத்துள்ளார்.. கடந்த 18ம் தேதி இரவு பாலியல் தொழிலாளியான இளம்பெண்ணை மணிகண்டன் துரைப்பாக்கம் பகுதிக்கு வரவழைத்துள்ளார். தன்னுடைய வீட்டில் 3 நாட்களுக்கு யாரும் இல்லை என்று சொல்லி, தீபாவை அழைத்திருக்கிறார்..
கொலை : அழைப்பதற்கு முன்பு 6000 ரூபாய் கேட்டதாகவும், பின்னர் 12,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என அப்பெண் மணிகண்டனிடம் சண்டை போட்டதாகவும் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே நடைபெற்ற தகராறு ஏற்பட்டது. இதில் கோபத்தில் சுத்தியலால் தீபாவின் தலையில் அடித்ததுமே அவர் உயிரிழந்து விட்டார்.
இதை மணிகண்டன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. .அதனால், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார்.. அதற்கு பிறகுதான், சூட்கேஸ் வாங்கி, அதில் வெட்டி போட்டுள்ளார்.. நேற்று முன்தினம் இரவில் சூட்கேஸை கொண்டுபோய் வீசிவிட்டு, மறுபடியும் வீட்டிற்கு வந்து நிம்மதியாக தூங்கியிருக்கிறார்.
அதிர்ச்சி: நேற்று காலை சூட்கேஸ் விவரம் விஸ்வரூபமெடுக்கவும், போலீசாரிடம் வசமாக சிக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, தீபாவை துண்டு துண்டாக வெட்டியபோது, அவருடைய மண்டையை பிளந்து மூளையை வெளியே எடுத்து வறுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.. இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ந்து போயுள்ளார்கள்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications