Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம.. விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நேத்ரா பொறியியல் தர வரிசையில் முதலிடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் திருச்செந்தூரை சேர்ந்த நேத்ரா முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் விஜய் வழங்கிய கல்வி விருது விழாவிற்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டவர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

Do you know Who is Nethra ranking first in Engineering rank list?

அதன்படி 2023 - 2024 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அது மட்டுமல்லாமல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 31,445 பேர் விண்ணப்பித்தனர்.அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6 ஆம் தேதி ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அது போல் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் படி 28,425 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது. தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.

தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

இந்த விழாவில் தகுதியும் திறமையும் இருந்தாலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற நிறைய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் பிளஸ் 2 தேர்வில் 600- 598 மதிப்பெண்களை பெற்ற நேத்ரா , மாநில அளவில் 2 அல்லது 3 ஆவது இடத்தை பிடித்தும் கூட அவர் விஜய் மக்கள் இயக்கத்தினரால் புறக்கணிக்கப்பட்டார். அதே வேளையில் புறக்கணிக்கப்பட்ட நேத்ரா பொறியியல் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+