Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிவண்ணனும் மனைவியும், ஜோடியா தண்ணி அடிப்பாங்களாம்.. சென்னையில் கணவனை குவார்ட்டரில் "முடித்த" மேடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிவண்ணனுக்கு இப்படியொரு மனைவியா என்று அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. யாரிந்த மணிவண்ணன்? என்ன நடந்தது சென்னையில்?

நம்முடைய தமிழ்நாட்டில் "மதுவிலக்கு" என்பது கனவாகவே கலைந்து, காற்றிலும் கரைந்து போய்க் கொண்டிருக்கிறது.. மதுக்கடைகளை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு நேரங்களில், பலமுறை பெண்களே ஒன்றுகூடி போராட்டத்தை தமிழகத்தில் நடத்தியிருக்கிறார்கள்.

Chennai Manivannan

டாஸ்மாக்: டாஸ்மாக்குகளுக்கு எதிராக முற்றுகை போராட்டம் முதல் கலெக்டரிடம் மனு கொடுப்பதுவரை பல்வேறு நிகழ்வுகளும் நடந்துள்ளன.. எனினும், சில பெண்களே மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவதும், தலைக்கேறிய போதையுடன் பொதுவெளியில் விழுந்து கிடக்கும் சம்பவங்களும், பெரும் கவலையை உண்டுபண்ணி வருகின்றன. இதில், சில பள்ளி மாணவிகளும், தங்கள் கையில் மதுபாட்டிலுடன் வீடியோக்களில் தென்படுவது அதற்கு மேல் பீதியை தந்து கொண்டிருக்கிறது.

பெண்களின் இந்த மதுபோதையானது, உயிர்களையும் பறிக்கும் விபரீதத்துக்கு சென்றுவிட்டது, ஒட்டுமொத்த பேருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இந்த சென்னை சம்பவத்தை பாருங்கள்.

சென்னை சம்பவம்: சென்னை திருவல்லிக்கேணி, எஸ்.எம் நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிவண்ணன்... இவரது மனைவி பெயர் நாகம்மாள்... ஆனால், நாகம்மாளுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது. நாகம்மாளுக்கு தண்ணி அடிக்காமல் இருக்க முடியாதாம்.. தினமும் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்திருக்கிறார்.. குடித்துவிட்டு இவர் செய்யும் அமர்க்களத்தை பார்த்து, பயந்துபோன கணவர், நாகம்மாளை விட்டு ஓடிவிட்டாராம்.

ஆனாலும் நாகம்மாள் அசரவில்லை.. இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.. நாகம்மாளுக்கு 2வதாக வாக்கப்பட்டார் மணிவண்ணன்.. இதில் மணிவண்ணனும் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால், இருவருக்குமே "ராசி" ஒர்க் அவுட் ஆகிவிட்டது.. கடந்த 6 வருட காலமாகவே, தம்பதிகள் இருவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.. இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. 2 பேருமே ஒன்றாகவே சேர்ந்து தண்ணி அடிப்பார்களாம்... 2 பேருமே போதையில் ஊரெல்லாம் சுற்றி வருவார்களாம்.

மணிவண்ணன்: இந்நிலையில், நேற்றைய தினம் நாகம்மாளுக்கு மணிவண்ணன் மதுபானம் வாங்கி தரவில்லையாம்.. சரக்கு எங்கே? என்று கேட்டு மணிவண்ணனிடம் தகராறு செய்திருக்கிறார் நாகம்மாள்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நாகம்மாள், மணிவண்ணனின் கழுத்தை இறுக்கி பிடித்து நெரித்துவிட்டார்.. இதில் மணிவண்ணன் மூச்சுத்திணறி விழுந்து இறந்துவிட்டார்.

கணவர் பேச்சுமூச்சில்லாமல் விழுந்திருப்பதை கண்டதுமே, மணிவண்ணனின் குடும்பத்தினருக்கு தகவல் தந்துள்ளார் நாகம்மாள்.. இதைக்கேள்விப்பட்டு அவர்கள் பதறியடித்து கொண்டு வந்து, மணிவண்ணனை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.. ஆனால், மணிவண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இதையடுத்து, போலீசார் இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்..

விசாரணை: இதுகுறித்து நாகம்மாளிடம் விசாரித்தனர்.. அதற்கு நாகம்மாள், "கணவர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொலை செய்தேன்" என்று சொல்லியிருக்கிறார்.. ஆனால், உறவினர்களோ, மதுபானம் வாங்கி கொடுக்காத காரணத்தால் மணிவண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். இதையடுத்து, நாகம்மாளிடம் போலீசார் துருவித்துருவி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று, கையில் தாலிக்கயிற்றுடன் மனைவிகள் போராட்டம் நடத்திய தமிழகம் இது... ஆனால், மதுபானம் வாங்கி தராததால், கணவனையே கழுத்தை நெரித்து கொன்றிருக்கும் இந்த சம்பவத்தை எப்படி நாம் பார்ப்பது???? பூரண மதுவிலக்கு வரவே வராதா???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+