Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் "உயிரோடிருக்கிறார்".. ஈரம் கசியும் அந்த மனசு இருக்கே.. கோவையே நெகிழுது.. யார் பெற்ற மகனோ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் கடந்த 2 நாட்களாகவே ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை.. ஆனால், பொதுமக்கள் தங்கள் நெகிழ்ச்சி கலந்த நன்றியையும், வாழ்த்தையும் இந்த இளைஞருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையடுத்து அவருக்கு பல நடிகர்கள், நடிகைகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பல தரப்பினர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Do you know who is this kovai Young man and feeds poor freely hiding identity like Vijayakanth

விஜய் டிவி: அந்தவகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் புகழ், விஜயகாந்த் நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் புகழ் பேசியபோது, "விஜயகாந்த் ஐயா, பசின்னு வந்த எல்லாருக்கும் வயிறார சாப்பாடு போட்டு இருக்காரு. அதனால் இன்றிலிருந்து, மதியம் பசின்னு வந்தவர்களுக்கு நான் சாப்பாடு போடப்போறேன். கேகே நகரில் உள்ள என்னுடைய ஆபீசில் தினமும் 50 பேருக்கு தினமும் சாப்பாடு போடப்போறேன். பசின்னு இருக்கற யார் வேண்டுமானாலும் அங்கு வந்து சாப்பிடலாம். கேப்டன் ஐயாவுக்கு நான் செய்யப்போகிறது இது மட்டும் தான்.

சாப்பாடு: எனக்கு பிறகு அடுத்து இருப்பவர்கள் அதை பின்பற்றுவார்கள்... நீங்களும் உங்களுக்கு தெரிந்த யாராவது பசியில் இருப்பதை உணர்ந்தால் அவர்களுக்காக சாப்பாடு வாங்கி கொடுங்கள்" என்று புகழ் கூறியிருந்தார்.

புகழ் இப்படி சொன்னதையடுத்து, நடிகர் சென்ராயனும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.. பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஐயா விஜயகாந்தை போலவே, என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்வேன் என்றார்..

இதுபோலவே, தன்னார்வர்கள், கட்சி நிர்வாகிகள் என பல பேர் விஜயகாந்த் போலவே, பசியில் உள்ளவர்களுக்கு சாப்பாடு போட போவதாக முடிவெடுத்துள்ளனர்.. அதன்படியே, அந்த பணிகளையும் துவக்கிவிட்டனர்.

மொத்த அடையாளம்: இதில் ஒருவர்தான் இந்த கோவை இளைஞர்.. தன்னுடைய மொத்த அடையாளத்தையும் மறைத்து கொண்டு, முழுநேர சேவையில் இறங்கியிருக்கிறார் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இந்த இளைஞர்.

ஒட்டுமொத்த கவுண்டம்பாளையத்தில் ஒருத்தர்கூட பசியாக இருக்கக்கூடாது என்பதே இவரது நோக்கமாக உள்ளது.. தன்னைய யார் என்று கூட வெளிப்படுத்தி கொள்ளாமல், சொந்த செலவில் "நம்ம வீட்டு சாப்பாடு" என்ற திட்டத்தை துவங்கி, தினமும் 40 முதல் 50 பேருக்கு இலவச உணவு வழங்கி வருகிறார். உணவில்லாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் கனவாம்.. ஆனால் போதுமான நிதிவசதி இல்லாததால், அதனை இத்தனை நாளும் செயல்படுத்த முடியாமல் இருந்துள்ளார்.

விஜயகாந்த்: இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயகாந்த் மறைவின்போது, ஒருவர் டிவி பேட்டியில் பேசும்போது, தான் வேலை இல்லாமல் இருந்தபோது, சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டதாகவும், விஜயகாந்த்தின் ஆபீசுக்கு சென்று சாப்பிட்டு வந்ததாகவும் கண்ணீர் மல்க சொல்லியிருந்தார்.. அந்த நொடியே, இலவச உணவு திட்டத்தை வழங்க முடிவு செய்துவிட்டாராம் சம்பந்தப்பட்ட இளைஞர்.

இதற்காகவே கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், ஒரு தனியார் திருமண மண்டப உரிமையாளர் உதவியுடன் குறைந்த வாடகைக்கு மண்டபத்தை வாடக்கைக்கு எடுத்திருக்கிறார்.. இந்த மண்டபத்தில் தினமும் 40 முதல் 50 பேருக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை 'நம்ம வீட்டு சாப்பாடு' என்ற பெயரில் தொடங்கியுள்ளார்.. பசியால் அவதிப்படுபவர்கள், நேராக இந்த மண்டபத்தை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.. வயிறும், மனசும் நிறைந்து சென்று கொண்டுமிருக்கிறார்கள்.

வீட்டு சமையல்: சாப்பாடு, குழம்பு, ரசம், தயிர், கலவை சாதம், முட்டை, பால் போன்ற உணவுகளை வீட்டு சமையல் போலவே செய்து பரிமாறுகிறாராம். முக்கியமாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வேலை இல்லாதவர்கள் போன்றோர்கள், இங்கு வந்துசாப்பட்டு செல்கிறார்கள்.. இதில் ஹைலைட் என்னவென்றால், மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் வேலை தந்து, சாப்பாடும் தந்து இந்த சேவையை செய்து கொண்டிருக்கிறார் இளைஞர்..

இங்கு சாப்பிட வருபவர்கள், தங்களால் முடிந்த தொகையை அங்கு வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டு செல்கிறார்கள்.. பணம் இல்லாதவர்கள் இலவசமாகவே சாப்பிட்டு செல்கிறார்கள்.. இந்த திட்டத்தை இன்னும் பல இடங்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார் அந்த இளைஞர்..

யார் பெற்ற மகனோ: இந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை.. தன்னை எங்குமே அவர் அடையாளப்படுத்தி கொள்ளவுமில்லை.. ஆனால், ஈரம் கசியும் மனசுள்ள "விஜயகாந்த்"கள் ஒவ்வொருவராக வெடித்து வெளிவர துவங்கிவிட்டார்கள்.. இனி விஜயகாந்த்துக்கு என்றுமே மரணமில்லை..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+