கிளம்பி வர்றாரா எடப்பாடி பழனிசாமி? அடுத்த லோக் ஆயுக்தா தலைவர் அவரா? இன்று நடக்கிறது ஆலோசனை கூட்டம்
சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவா், இரண்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா: தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் பொறுப்பு வகித்து வந்தார்.. ஆனால், அவா் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இதையடுத்து, லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவா் மற்றும் நீதித்துறை சாராத 2 உறுப்பினா்களை நியமனம் செய்வதற்கான தெரிவுக் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
தமிழக அரசு: ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் இடம் பெற்ற தேடுதல் குழுவை தமிழக அரசு அமைத்தது.. இந்த குழுவினர், இப்பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பம் www.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தது.
அதன்படியே, ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையிலான இந்தக் குழுவிடம் தகுதியுள்ள நபா்கள் சாா்பில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன... இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த நீதிபதி குழு, தமிழக அரசிடம் தன்னுடைய பரிந்துரைகளை அளித்துள்ளது.
பரிந்துரைகள்: இதையடுத்து, இப்பரிந்துரைகள் தொடா்பாக தமிழக அரசு இன்றைய தினம் சென்னையில் ஆலோசனை நடத்த போகிறது.. தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவா் மு.அப்பாவு இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும், இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், லோக் ஆயுக்தா அமைப்பின் புதிய தலைவா், உறுப்பினா்கள் யாா் என்பது இறுதி செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது... ஆனால், அரசின் அழைப்பை ஏற்று, எடப்பாடி இதில் பங்கேற்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை..
ஆளுநர் ரவி: தமிழக அரசின் சாா்பில் நடைபெறும் இன்று ஆலோசனைக் கூட்டத்தில், லோக் ஆயுக்தா அமைப்புக்கு புதிய தலைவா், உறுப்பினா்கள் பெயா் இறுதி செய்யப்பட்டுவிடும்.. பிறகு இந்த பெயா்கள், ஆளுநா் ரவிக்கு அனுப்பி வைக்கப்படும்.. அதனை ஏற்றுக்கொண்டு, லோக் ஆயுக்தா அமைப்பின் புதிய தலைவருக்கு பதவியேற்பு உறுதிமொழியை ஆளுநர் செய்து வைப்பாா்.
தற்சமயம், லோக் ஆயுக்தா அமைப்பின் பொறுப்பு தலைவராக மு.ராஜாராம் செயல்பட்டு வரும் நிலையில், புதிய தலைவர் யார் என்பதில் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications