"தட்டி தூக்கிட்டாரே" எடப்பாடி.. ஆஹா, இத்தனை கட்சிகளா.. சைலண்ட்டா நடந்துடுச்சே.. வாடுகிறதா "தாமரை"
புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளாராம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி ஒரு விஷயத்தில் ஸ்ட்டிராங் ஆகி வரும்நிலையில், ஓபிஎஸ் மற்றொரு விஷயத்தில் தீவிரமாகி வருகிறார்.. இதையடுத்து அதிமுகவில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் சூழ்ந்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி - பாஜக இடையேயான கூட்டணி குறித்து இதுவரை வெளிப்படையான அறிவிப்பும், தகவலும் வரவில்லை.. பாஜகவை கூட்டணியில் எடப்பாடி தரப்பு இணைத்து கொள்ள போகிறதா? இல்லையா? பாஜக இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறாரா? என்ற சந்தேகம் எழுந்தபடியே உள்ளது.
எடப்பாடி பழனிசாமியிடம் 95 சதவீதம் நிர்வாகிகள் ஆதரவு இருக்கும் நிலையில், அதிமுகவின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும் என்பதே மேலிட பாஜக எண்ணமாக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது என்றும் தெரிகிறது.

துணியும் பாஜக
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி இல்லாத கூட்டணிக்கும், பாஜக தயாராகியே வருகிறது என்ற தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.. தங்கள் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைப்பு தராவிட்டால், அவரை கழட்டிவிட்டு, மற்றவர்களை ஒன்றிணைத்து தங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கவும், பாஜக துணியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏற்கனவே, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் போன்றோர் தங்களுக்கு ஆதரவாக உள்ள நிலையில், பாமகவும், தேமுதிகவும் தங்கள் பக்கம் நிச்சயம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் பாஜக மேலிடத்துக்கு இருக்கவே செய்கிறது..

ஜிகே வாசன்
நேற்று முன்தினம், தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அக்கட்சி தேசிய தலைவர் நட்டா, எப்படியும், பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர பாருங்கள் என்றும் சொன்னாராம். அதுமட்டுமல்ல, மேலும் சில கட்சிகளையும் தங்களுடன் இணைக்க பாஜக ரெடியாகி வருகிறது.. அந்தவகையில், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், அவைகளுக்கும் வலையை வீசி உள்ளது.. இதில், வாசன் மட்டும் பாஜகவிடம் கூட்டணி வைக்க சம்மதித்துள்ளதாக தெரிகிறது..

பூவை மூர்த்தி
ஆனால், மற்ற கட்சிகள் பாஜகவிடம் கூட்டணி வைக்க மறுத்துவிட்டதாம்.. பாஜக தலைமையில் கூட்டணி அமைக்க விரும்புகிறோம். நீங்கள் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்களாம்.. ஆனால், அந்த கட்சிகளின் தலைவர்களோ, அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கவே விரும்புகிறோம் என்று சொல்லி பாஜகவின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்கள். இது அப்படியே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.. காரணம், கடந்த சில மாதங்களாகவே, கூட்டணியை பலப்படுத்தும் செயல்களை எடப்பாடி சைலண்ட்டாக கையில் எடுத்து வந்தாராம்..

ஜான் பாண்டியன்
அந்த விசுவாசம்தான், தற்போது பாஜக மேலிடம் வரை எதிரொலித்திருக்கிறது என்கிறார்கள்.. இவர்களை தவிர, தமிழக மக்கள் முன்னேற்றம் கழகத்தின் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் கட்சி பூஜை ஜெகன் மூர்த்தி போன்றோரின் ஆதரவையும் எடப்பாடி பழனிசாமி கூடுதலாக பெற்றுள்ளது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒருவேளை இரட்டை இலை முடங்கிவிட்டாலும்கூட, நீங்கள் அனைவரும் தொடர்ந்து தனக்கு ஆதரவு தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இந்த தலைவர்களை கேட்டுக் கொண்டாராம்..

பல்ப் பாஜக
இதையடுத்தே அனைவரும் எடப்பாடிக்கு தங்கள் ஆதரவை தந்ததாகவும், அதன் வெளிப்பாடாகத்தான், கடந்த 19ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், இந்த தலைவர்கள் அத்தனை பேரும் பங்கேற்றிருந்தனர் என்றும் சொல்கிறார்கள்.. எனினும் இந்த நிகழ்வுகளையும் பாஜக மேலிடம் கவனிக்காமல் இல்லை.. கடந்த முறை சட்டசபை தேர்தலின்போது, ஓபிஎஸ் தரப்பின் பெரும்பாலான ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி இப்படித்தான் சைலண்ட் மூவ்களை எடுத்து தன்வசம் வைத்திருந்தார். இப்போது கூட்டணியை பலப்படுத்தவும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்..

ஜரூர் ஸ்பீடு
ஆனால், ஓபிஎஸ் தரப்போ, உட்கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளதாம்.. விரைவில் பொதுக்குழுவை கூட்ட போவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, அடித்தளத்தை பலப்படுத்தி கொள்ள வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறதாம்.. மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து வந்த நிலையில், அடுத்தக்கட்டமாக, ஊராட்சிகளில் கவனம் செலுத்த போவதாக தெரிகிறது.. தமிழகத்தில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.. இந்த ஊராட்சிகளுக்கு செயலாளர்களுக்கு பதவி நியமனத்தை கொண்டு வந்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா..

வீக் பாயிண்ட்
அதன்படி அத்தனை ஊராட்சி செயலாளர்களும் பதவி நியமனமும் செய்யப்பட்டனர்.. இதற்கு காரணம், இப்படி பதவிகளை ஒதுக்குவதால், கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடக்கும் என்பதாலேயே இந்த பதவியை உருவாக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த பதவிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கிவிட்ட நிலையில், மீண்டும் அந்த பதவியை உருவாக்கி, ஓபிஎஸ் முயல்கிறாராம்.. அதிமுகவை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, 12500 ஊராட்சி செயலாளர்களை தேந்தெடுக்கும் பணியும் நடந்து வருகிறதாம். இப்படி கட்சியை வலுவாக்க, அடிமட்டத்தில் இருந்து வேலையை ஓபிஎஸ் கையில் எடுத்துள்ள நிலையில், எடப்பாடியோ, கூட்டணி விஷயத்தை வலுவாக்கி கொண்டிருக்கிறாராம்..!!!












Click it and Unblock the Notifications