ஏசி அல்லது ஏர் கூலர்... சென்னைக்கு உகந்தது எது? இபிக்கு ஓகே.. ஆனால் ஏர் கூலரில் உள்ள பெரிய சிக்கல்
சென்னை: சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் ஏர்கூலர் நிஜமாகவே பலனளிக்கிறதா? பலரும் வேஸ்ட் என தூரப்போடுகிறார்களே ஏன் தெரியுமா? இதற்கு பின்னணியில் அறிவியல் ரீதியான காரணமே பிரதானமாக உள்ளது. கடற்கரையை ஒட்டிய நகரங்களில் ஏர் கூலர் ஏன் செட்டாவது இல்லை என்பதை பார்ப்போம்.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில்,, பகல் முழுக்க வெயில் கொளுத்துகிறது. இரவில் அனல் காற்றுவீசுகிறது. அதிகாலை 6 மணிக்கு கூட ஃபேன் இல்லாமல் ஐந்து நிமிடம் கூட இருக்க முடியாத நிலை இருக்கிறது. ஏர்கண்டிஷனர் இல்லாமல் பலர் தூங்குவதே இல்லை. பகலில் கூட ஏசியை ஆன் செய்துவிட்டு உறங்குகிறார்கள்.. சென்னையில் ஏசியை பலரும் விரும்பும் நிலையில், ஏர்கூலரை அந்த அளவிற்கு விரும்புவது இல்லை. ஏர்கூலரை வாங்கியவர்களும் வேண்டாம் என்று தூரப்போடும் நிலை இருக்கிறது. இதற்கு காரணம் சென்னையில் நிலவும் கால நிலை தான்.

பொதுவாக நாம் கோடைக்காலத்தில் வெயிலைச் சமாளிக்க ஏர் கூலர் அல்லது ஏசியை வாங்குவதை விரும்புவோம். ஆனால் ஏசியைவிட ஏர்கூலர் விலை குறைவு . மேலும் ஏசியைக் காட்டிலும் ஏர் கூலர் பராமரிப்பும் குறைவுதான். ஆனால் ஏர்கூலர் சென்னைக்கு ஏற்றதாக இருப்பது இல்லை. அதனாலயே பலரும் வாங்குவது இல்லை.
ஏர் கூலர் எப்படி வேலை செய்கிறது: ஏர் கூலர் வேலை செய்யும் தொழில் நுட்பம் மிகவும் எளிமையானது.வெயில் காலத்தில் ஜன்னல்களில் ஈரத் துணியை நனைத்து எப்படி கட்டிவிடுகிறார்களோ அந்த தொழில் நுட்பத்தில் வேலை செய்யும்.. அதாவது ஏர் கூலர் காற்றின் ஈரப்பதத்தின் அடிப்படியில் வேலை செய்வதாகும். நமது வீடுகளில் எக்ஸாஸ்ட் ஃபேன் எப்படி அறைக்குள் உள்ள வெப்பக்காற்றை எப்படி வெளியே தள்ளிவிடுகிறதோ அதே மாதிரி வெளிக்காற்றை உள்ளே இழுத்துக் குளிர்விக்கிறது ஏர் கூலர்.
அதேநேரம் காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் ஏர் கூலரின் செயல்பாடு உடல் நலத்துக்கு நல்லதல்ல என்பது மருத்தவர்களின் கருத்தாக உள்ளது. ஈரப்பதம் குறைவாக உள்ள ஊர்களுக்கே இவை ஏற்றதாக உள்ளது. குறிப்பாக கடற்கரையை ஒட்டிய நகரங்களுக்கு ஏர் கூலர் ஏற்றது அல்ல..
சென்னையை பொறுத்தவரை சராசரி ஈரப்பத அளவு 70 சதவீதக்கும் அதிகமாக இருக்கிறது ஏர் கூலர் ஈரப்பதத்தை அதிகரிக்கும் இயல்புடையது என்பது தான் சென்னைக்கு சிக்கல். ஏற்கனவே 70 சதவீதக்கும் அதிகமான சென்னையில் ஈரப்பதம் அதிகமானால் பாதகமான விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சென்னை உள்பட உலகின் எந்த கடற்கரைப் பகுதிகளிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அம்மாதிரியான ஊர்களில் ஏர் கூலர் பயன்பாடு சரியானதாக இருப்பது இல்லை..
அதுமட்டுமல்ல ஏர் கூலர் வேலை செய்வதற்கு அதற்குள் தண்ணீர் நிரப்பிவைப்பது அவசியம். இதனால் இதை அடிக்கடிச் சுத்தமாக்க வேண்டியது அவசியம் ஆகும். இல்லையெனில் இதில் கிருமிகள் உற்பத்தியாக வாய்ப்பு அதிகம். அதை சுத்தமாக்காமல் பயன்படுத்தும்போது அது ஆரோக்கியத்துக்குத் தீங்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ஏர் கூலர் ஈரப்பத சதவீதம் குறைவாக உள்ள ஊர்களுக்கு ஏற்றவை. ஏர்கூலரை பயன்படுத்தும்போது, அறைக்குள் இருக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகும். இந்தக் காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தைகளுக்கு வீசிங் அல்லது ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஏர்கூலர் பயன்படுத்துவோர் ஜன்னலை திறந்துவைத்துத் தூங்குவது நல்லது என்கிறார்கள்.
ஏர் கூலர் சென்னைக்கு ஏற்றது இல்லை என்பதால் அதனை வாங்க சென்னை மக்கள் பெரும்பாலும் விரும்புவது இல்லை..சென்னை ஆண்டு முழுவதும் வெப்பநிலை அதிகமாக உள்ள நகரமாக இருப்பதால் ஏசி பயன்படுத்துவதே சிறப்பானதாக இருப்பதாக சொல்கிறார்கள். அதேநேரம் ஹைதராபாத் போன்ற நகரத்தில் ஏசியை விட ஏர் கூலர் சாமானிய மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.. அங்கு கோடைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் வெயில் குறைவாவே இருக்கும். குளுகுளு கால நிலை குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். எனவே அதிகபட்சம் 3 மாதம் மட்டுமே அங்கு வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் அங்கு ஏர் கூலரை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
அதேநேரம் சென்னை மக்களால் அதிக விரும்பப்படும் ஏசியை பொறுத்த ஈரப்பதம் அதிகம் உள்ள மற்றும் ஈரப்பதம் அதிகம் இல்லாத என இரண்டு கால நிலைக்கும் ஏற்றது. ஏர் கூலரின் ஒப்பிட்டால் தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஏர் கூலரின் தண்ணீர் நிரப்ப வேண்டிய வேலை இருக்கும்... ஆனால் ஏசியில் சுவரில் பொருத்துவதால் இட நெருக்கடி கிடையாது. ஏர் கூலர் வைப்பதற்குத் தனி இடம் வேண்டிய நிலை ஏற்படும். கூலிங் ஏசியில் இருக்கும் அளவிற்கு ஏர் கூலரில் இருக்காது என்பதே சென்னை மக்கள் ஏர் கூலரை வாங்கமறுக்க காரணமாக உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications