அசிங்கமா போயிடுச்சே.. ஆசை ஆசையா மாலையோடு மணப்பெண்ணிடம் நெருங்கிய மாப்ளை.. அதுக்குள்ளே அந்த "சம்பவம்"
சென்னை: மணமக்கள் இருவருமே மணமேடையில் பூரிப்பும், மகிழ்ச்சியுமாய் நின்று கொண்டிருந்தனர்.. அப்போதுதான் திடீரென இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது வீடியோவாகவும் வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
எத்தனையோ திருமணங்கள் தாலி கட்டுவதற்கு கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன. அதிலும் வடமாநிலங்களில் திருமணங்களை, மணப்பெண்களே நிறுத்தி விடுகிறார்கள். இதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு மாப்பிள்ளை வாய்ப்பாட்டை சொல்லாதது, உருது வார்த்தைகளை சொல்லாதது என்ற வினோத காரணங்களை மணமகள்கள் அடுக்குகிறார்கள். சில சமயம், மணமகனோ அல்லது மணமகளோ ஓடிப்போய்விடுவதால், திருமண வீடே, களேபரமாகி, கல்யாணம் நின்றுபோன சம்பவங்களும் உண்டு.
திருமணங்கள்: இப்படித்தான் கடந்த வருடம் டெல்லியில் ஒரு கல்யாணம் நடந்தது.. மணமேடையில், மணமகள் வெட்கத்தில் நிற்க, மாப்பிள்ளையோ மணமகளுக்கு, ஸ்வீட் எடுத்து ஊட்ட முயன்றார். ஆனால், மணப்பெண்ணோ, தனக்கு ஸ்வீட் வேண்டாம் என்று சொல்லி, மணமகனை தடுத்தார்.. மாப்பிள்ளையோ விடவில்லை.. வலுக்கட்டாயமாக ஸ்வீட் எடுத்து, மணப்பெண்ணின் வாய்க்குள் திணிக்க முயன்றார்..
அடுத்த செகண்டே ஆவேசம் அடைந்த மணப்பெண், மாப்பிள்ளையை பளார் என்று ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.. இதை மாப்பிள்ளை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. உடனே அவரும் பதிலுக்கு மணமகளின் தலைமுடியை பிடித்து இழுத்து, பளார் பளார் என 4 அறை விட்டார்.. மணப்பெண்ணும் மாப்பிள்ளையின் சட்டையை பிடித்து இழுத்து அடித்தார். இவ்வளவும் மணமேடையில், எல்லார் கண்முன்பும் அரங்கேறியது.. இவர்கள் 2 பேரையுமே யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல், கடைசியில் கல்யாணம்தான் நின்றுபோனது.
திருமண நிகழ்வு: இப்போது இன்னொரு திருமண நிகழ்வு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. எப்போது இந்த சம்பவம் நடந்தது என்றும் தெரியவில்லை.. ஆனால், ஏதோ ஒரு வடமாநிலத்தில் நடந்திருக்கிறது.
மணமக்கள் இருவருமே மேடையில் ஆடை அலங்காரத்துடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.. மணமக்களை சுற்றிலும், அவர்களது நண்பர்களும் குடும்பத்தினரும் சூழ்ந்துள்ளனர்.. அப்போது மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆரம்பமானது. இதில், அங்கிருந்த உறவினர்களில் ஒருவர் திடீரென்று பின்பக்கத்திலிருந்து மணப்பெண்ணை பிடித்துள்ளார்.
மாப்பிள்ளை அதிர்ச்சி: தொடர்ந்து பின்புறமிருந்து பிடித்து இழுக்கவும், பொறுமை இழந்த மணமகள் டக்கென திரும்பி அந்த நபரின் கன்னத்தில் பளார் விட்டார்.. அப்போதும் ஆவேசம் அடங்காமல், மறுபடியும் மறுபடியும் கன்னத்தில் அறைந்தார்..
அந்த நபரை பார்த்து, ஆத்திரத்துடன் கத்திக்கொண்டே இருந்தார்.. மணமகளுக்கு ஆசையாக மாலை போடுவதற்காக நின்றிருந்த மணமகன், பெண்ணின் இந்த ஆக்ரோஷத்தை பார்த்ததுமே வெலவெலத்து போய்விட்டார்..
கமெண்ட்கள்: ஒட்டுமொத்த பேரும் பெண்ணையே அதிர்ந்து பார்த்தனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகிறது.. ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கோபம் கூடாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.. மேலும் சிலரோ, இதுபோல முறையின்றி நடந்துகொள்வதற்கு, மணப்பெண் செய்ததுதான் சரி என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்ததா? என்றே கடைசிவரை தெரியவில்லை.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications