துள்ளுது திமுக.. அப்ப பாஜக பட்ட பாடெல்லாம் போச்சா.. ஸ்கோர் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.. புது புயல்
சென்னை: அதிமுக கூட்டணிக்குள் என்னதான் நடக்கிறது? பாஜகவுடன் கூட்டணி சாத்தியமாகுமா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. அத்துடன் திமுக தரப்பு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மெகா கூட்டணியை அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன.. இன்னும் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...

சுருக்கமாக சொல்லப்போனால், அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதியாகி உள்ளது.. அதுகூட மேலிடத்தில் இருந்து மட்டுமே, உறுதி வெளிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, மாநில அளவில் வெளிப்படையாக யாரும் பேசவில்லை.. இன்னும் சொல்லப்போனால், வார்த்தை போர்கள் வலுப்பெற்று வருகின்றன.
கூட்டணி முறிவு: கடந்த சில நாட்களாகவே இந்த வார்த்தை போர்கள், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.. "கூட்டணியை முறிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணாமலை செயல்படுகிறார், அதிமுக வெற்றிபெற கூடாதென திமுகவின் கைக்கூலியாக பேசுகிறார்" என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.
"வசூல் செய்து யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்தார்களோ, அவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதே தெரியாது" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சிவி சண்முகத்துக்கு பதிலடி தந்துள்ளார்.. இதற்கு பின்னணியில் என்ன நடக்கிறது? ஏன் இந்த வார்த்தை போர்கள் சூழ்ந்துள்ளன என்பது குறித்து சில பிரத்யேகமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
அதாவது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜகவின் தேசிய தலைமை சீரியஸாக இருக்கும் நிலையில், அதிமுகவை சீண்டும் வகையில் அடிக்கடி அண்ணாமலை சர்ச்சைகளை உருவாக்குவது பாஜகவின் சீனியர் லீடர்களையும் மாநில நிர்வாகிகளையும் அதிர்ப்தியடைய வைத்துள்ளதாம்.. இந்த அதிருப்திகளை அண்ணாமலையிடம் சொல்வதற்கு தயங்கும் அவர்கள், அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்திடம் சென்று புலம்பியிருக்கிறார்கள்.
விருப்பமில்லை: கேசவ விநாயகமோ, "உங்களை போலவே நானும் தான் அதிருப்தியில் இருக்கிறேன். ஆனா, அவரிடம் (அண்ணாமலை) சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லை... ஏன்னா, நாம் சொல்வதை அவர் கேட்கவா, போகிறார்? தான் நினைப்பதும் பேசுவதும்தான் அரசியல் என அவர் நினைக்கிறபோது நாம் என்னத்த சொல்வது? தேசிய தலைமைக்கு உங்க குமுறல்களை தெரியப்படுத்துங்கள். என்னிடம் கேட்டால் நானும் டெல்லிக்கு சொல்கிறேன்" என்று நிர்வாகிகளிடம் சொல்லி விடுகிறாராம் கேசவ விநாயகம்.
சமீபத்தில் அறிஞர் அண்ணாவை பற்றி தவறான கருத்தை அண்ணாமலை வெளிப்படுத்தியதில், தமிழக பாஜகவினர் உச்சக்கட்ட அதிருப்தியில் உள்ளார்களாம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ தொடங்கி அதிமுக சீனியர்கள் பலரும் அண்ணாமலைக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.
கூட்டணி முறிந்து போகுமோ என்கிற அளவுக்கு அதிமுகவின் கொந்தளிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையிலும், தனது கருத்தினை வாபஸ் பெறாமல் விளக்கமளிக்கிறேன் என்கிற பேரில் அண்ணாமலை மீண்டும் சீண்டியிருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஏகத்துக்கும் கோபமடைந்துள்ளாராம்.
அமித்ஷா - எடப்பாடி: அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு அண்மையில் நடந்து கொண்டிருந்த நிலையில், அண்ணாவை பற்றி அண்ணாமலை சீண்டிய சம்வத்தை எடப்பாடியின் கவனத்துக்கு ஜெயக்குமார் கொண்டு சென்றாராம்.. அதற்கு எடப்பாடி, "கடுமையாக ஆட்சேபியுங்கள்' என அவருக்கு அறிவுறுத்தினார்.. அதேபோல, சி.வி.சண்முகத்திடமும், அண்ணாமலை கடுமையாக அட்டாக் பண்ணுங்கள் என்றும் கேட்டுக்கொண்டாராம் எடப்பாடி. அதனால்தான் சி.வி சண்முகம், அண்ணாமலையை கொந்தளித்து பேசியிருந்தார்
அண்ணாமலையின் தன்னிச்சையான சர்ச்சையான கருத்துக்களும், அதிமுகவை சீண்டுவதுமான அவரின் பேச்சில் அதிருப்தியடைந்த தமிழக பாஜகவினர், தங்களின் மேலிடத்துக்கு அண்ணாமலைக்கு எதிராக புகாரளித்து வருகிறார்களாம்.. ஏற்கனவே, தமிழக பாஜகவில் சீனியர்கள் பலரும் அண்ணாமலையின் தன்னிச்சை போக்கால் அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போதுள்ள முக்கிய நிர்வாகிகளும் அதிருப்திக்கு ஆளாகி வருகிறார்களாம்.
தன்னிச்சை முடிவு: போகிற போக்கை பார்த்தால், பாஜக - அதிமுக கூட்டணியில் நிரந்தர விரிசல் வந்தாலும் ஆச்சரியமில்லை, அப்படி கூட்டணி பாதித்தால், தமிழக தலைமைதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பொருமல்கள் வெடித்து கிளம்பி உள்ளதாம்.. டெல்லி வரை விவகாரம் சென்றுள்ளதால், அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், கூட்டணி விரிசல்கள் யாவுமே, திமுகவுக்கு பலமாக சென்றுவிடும் என்றும் அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.
அதனால், இந்த நிமிடம்வரை சுமூக முடிவு இரு தரப்பிலுமே எட்டப்படவில்லை என தெரிகிறது. தற்சமயம், அதிமுக - பாஜக தலைவர்களிடம் நடந்துவரும் கருத்து மோதலை பார்க்கும்போது, 3 அணியாக பாஜக உருவெடுத்துவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. அதற்கேற்றவாறு, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அறிவித்துவிட்டார்..
இது ஜெயக்குமாரின் தனிப்பட்ட கருத்தா? அல்லது அதிமுகவின் ஒட்டுமொத்த கருத்தா என்று தெரியவில்லை.. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லப்போகிறார்? என்பதைதான் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி உள்ளன.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications