இதுதான் ஹைலைட்.. முருகன் வீட்டுக்குள்.. பிரதமர் மோடி நுழைஞ்சதுமே.. படக்குனு பார்த்த திராவிட கட்சிகள்
சென்னை: பிரதமர் மோடி கொண்டாடிய பொங்கல் விழாவைதான், தமிழக அரசியல் கட்சிகள் உற்றுநோக்கி வருகின்றன.. அதுவும் ஒரு முக்கியமான விஷயம் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வீடு டெல்லியில் உள்ளது.. இந்த வீட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது... இதில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பித்திருந்தார்.. புது மண்பானையில் எல்.முருகனும், அவரது மனைவியும் பொங்கல் வைத்தனர்...

அப்போது, பிரதமர் மோடி பச்சரிசியை, பானையில் போட்டார்.. பானை பொங்கியதுமே, "பொங்கலோ பொங்கல்" என்று உற்சாகமாக அனைவரும் குரல் எழுப்பினார்கள்.. அங்கு கட்டப்பட்டிருந்த மாட்டுக்கு, பிரதமர் மோடி மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்: பிறகு, தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்டவற்றை மோடி மிகுந்த ஆர்வதோடு கண்டு களித்தார். தமிழ் மொழி மீது பிரதமர் மோடிக்கிருக்கும் அக்கறை, இந்த பொங்கல் நிகழ்வின்போதும் அபரிமிதமாகவே வெளிப்பட்டதை காண முடிந்தது..
"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று தமிழில் வாழ்த்து சொல்லிவிட்டுதான், தன் பேச்சை துவங்கினார் பிரதமர் மோடி. அதுமட்டுமல்ல, காசி தமிழ் சங்கம், விவசாயிகள், தமிழ் இலக்கியங்களை தன்னுடைய உரையில் பெருமைப்படுத்தி பேசியிருக்கிறார்.
முக்கியமாக, "தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு" என்ற திருக்குறளை தவறாமல் மேற்கோள் காட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் இந்த தமிழ் ஆர்வத்தைதான் பலரும் வியந்து பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ராமநாதபுரம்: சில மாதங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்... இந்த முறை ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கவும், அதுகுறித்து நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்..
இதில் ஹைலைட் என்னவென்றால், பொங்கல் விழாவில் கருப்பு சட்டை, வெள்ளை வேட்டி, வெள்ளை அங்கவஸ்திரம் அணிந்து வந்திருந்தார் பிரதமர் மோடி. பாரம்பரிய உடையில் வந்திருந்தாலும், கருப்பு கலரில் சட்டை அணிந்து வந்ததுதான், பலராலும் உற்று கவனிக்கப்படுகிறது.. பொதுவாக பண்டிகை நாளில் கருப்பு சட்டை அணிபவர்கள் குறைவு.. எனினும், பிரதமர் மோடி கருப்பு சட்டை அணிந்திருந்தது, தமிழகத்துக்கு ஏதோ மெசேஜ் சொல்கிறார் என்றும் கமலாலயத்தில் ஒரே பேச்சாக இருக்கிறதாம்.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. வடமாநிலங்களில் பாஜகவின் கோட்டையான ஒருசில இடங்களில் சறுக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.. இந்த சறுக்கல்களை தென்மாநிலங்களில் பெறப்போகும் வெற்றியால் ஈடுகட்ட முயன்று வருகிறது மேலிட பாஜக. இதற்காகவே தமிழகத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும, இதன்காரணமாகவே, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரபரத்து வருகின்றன.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் நம்முடைய "ஒன் இந்தியா" தமிழுக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார். அதில், பிரதமர் மோடிக்கு, தமிழ்மொழியின் ஈடுபாடு குறித்தும், ராமநாதபுரத்தில் பிரதமர் போட்டியிடுவது குறித்தும் தன்னுடைய கருத்துக்களையும் நம்மிடம் ப்ரியன் பகிர்ந்திருந்தார்.
தமிழ் மொழி: அப்போது, "பிரதமர் மோடியை பொறுத்தவரை தமிழகத்தில், தனக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் இருப்பதாக கருதுகிறார். அதனால்தான், தமிழை எடுத்து அடிக்கடி பேசுகிறார்.. தமிழ் போல பழைய மொழி இல்லை என்கிறார். தமிழ் பழமையான மொழி என்று, மோடி சொல்லித்தான் நமக்கெல்லாம் தெரியுமா என்ன? ஆனால், இப்படி அவர் சொல்லிட்டே, சமஸ்கிருதத்தக்கு மட்டும் 700 கோடி ரூபாய் தந்துட்டு இருக்கார். தமிழுக்கு வெறும் 20, 30 கோடி ரூபாயுடன் நிறுத்திவிட்டார்.
பிரதமர் மோடிக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. தான் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் கிடையாது, தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நமக்கு எதிர்ப்புகள் நிறைய இருக்கிறது. அதனால் இதை சரிசெய்ய வேண்டுமானால், ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் என்று மோடிக்கு யாராவது ஆலோசனை சொல்லியிருக்கலாம்.
தோல்வி: எழுதி வெச்சுக்குங்க.. இவர்கள் என்னதான் இந்துத்துவா பிரச்சாரத்தை முன்வைத்தாலும், என்னதான் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு இருந்தாலும், ராமநாதபுரத்தில் மோடியின் வெற்றி என்பது கேள்விக்குறிதான். வரப்போகும் தேர்தலில், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால், நிச்சயம் தோற்பார்" என்று அறுதியிட்டு ப்ரியன் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications