காவேரி மருத்துவமனைக்கு திமுகவினர் ஏன் செல்கிறார்கள் தெரியுமா? அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த விளக்கம்!
சென்னை: கருணாநிதியை கண்ணும் கருத்துமாக 30 நாட்கள் காவேரி மருத்துவமனையில் கவனித்துக்கொண்டார்கள் என்றும் அதனால் தான் திமுகவினரின் நம்பிக்கையையும், நன் மதிப்பையும் பெற்ற மருத்துவமனையாக அது திகழ்கிறது எனவும் கூறினார்.
எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் அப்போலோ மருத்துவமனை என்றால் யாருக்கும் தெரியாது என்றும் எம்.ஜி.ஆர் சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தான் அந்த மருத்துவமனையின் பெயரே வெளியே தெரிய ஆரம்பித்தது என்றார் அமைச்சர் நேரு.

அது போல் தான் காவேரி மருத்துவமனையும் என்றும் கருணாநிதியை அவரது இறுதி நாட்களில் கண்களை இமைகாப்பது போல் மிக அக்கறையோடு கவனித்துக்கொண்ட மருத்துவமனை என உருகினார். அதனால் தான் காவேரி மருத்துவமனை என்றால் நமது மருத்துவமனை என திமுகவினர் நினைக்கிறார்கள் என்றார்.
இதனிடையே காவேரி மருத்துவமனை அமைச்சர் நேருவுக்கு சொந்தமானது என ஒரு தகவல் உலா வந்துக் கொண்டிருக்கும் சூழலில் அவரது இத்தகைய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்று காவேரி மருத்துவமனை. கடந்த் 2018ஆம் ஆண்டுக்கு முன்பாக சென்னை மக்கள் மத்தியில் மட்டும் பரிச்சயம் பெற்றிருந்த இந்த மருத்துவமனை கருணநிதிக்கு சிகிச்சை அளித்த காரணத்தால் தமிழகம் முழுவதும் பரிச்சயம் ஆகத் தொடங்கியது.

கருணாநிதியின் இறுதி நாட்கள் காவேரி மருத்துவமனையில் கழிந்ததால் நொடிக்கு நொடி ஊடகங்களில் பேசு பொருளாகவும், தலைப்புச் செய்தியாகவும் காவேரி மருத்துவமனை இடம்பெற்றது.
இதனிடையே திருச்சி, காரைக்குடி, என பல இடங்களில் தற்போது இம்மருத்துவமனை கிளை பரப்பியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அளித்த பேட்டியில், காவேரி மருத்துவமனையை 7 பேர் சேர்ந்து கூட்டாக நடத்தி வரும் நிலையில், அந்த மருத்துவமனையை தன்னுடையது என கூறினால் அதற்கு என்ன அர்த்தம் என அமைச்சர் கே.என்.நேரு வினவியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications