"மொய்" வைத்தால், 101, 501 என்று 1 ரூபாய் சேர்த்து வைக்கிறோமே.. இதுக்கு காரணம் தெரியுமா.. இதை படிங்க
சென்னை: சில செயல்களுக்கு காரணமே தெரியாமல், காலம் காலமாகவே செய்து வருகிறோம்.. அதில் ஒன்றுதான் இந்த மொய்ப்பணம்.. மொய் செய்யும்போது, 1 ரூபாய் கூடுதலாக சேர்த்து செலுத்துகிறோமே? ஏன் தெரியுமா?
கல்யாணம், காது குத்து, கிரகப்பிரவேசம், மஞ்சள் நீராட்டு விழா, இப்படி எந்த சுப நிகழ்ச்சிகளின்போதும் மொய் செய்வது நம்முடைய முன்னோர்களின் பழக்கம்..

என்ன காரணம்?: அப்படி மொய் செய்யும்போது 100, 500, 1000 என்று மொய் செய்யாமல் அதனுடன் ஒரு ரூபாயையும் சேர்த்து வைத்து மொய் செய்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றுக்குமே முன்னோர்கள் ஒரு காரணத்தை வைத்துள்ளதைப்போல, இதற்கும் சில காரணங்களை வைத்திருக்கிறார்கள்..
அதாவது, அந்தக்காலத்தில் எல்லாம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் கிடையாது.. பணம் என்பது பொன் மற்றும் வெள்ளி போன்ற மதிப்புமிக்க உலோகத்தில் நாணயங்கள் வடிவத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன.. இவைகள்தான் புழக்கத்திலும் இருந்து வந்தன... இவைகளை கொண்டுதான் மொய்ப்பணம் தந்து வருகிறார்கள்..
பொன்: ஒரு வராகன் பொன் என்பது 32 குண்றி எடை (குண்டுமணி) அந்த 32 என்பது, முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை குறிப்பதாகும்.. அதனால்தான், இது தர்மம் தவறாது சம்பாதித்த நாணயமாக முன்னோர்கள் கருதினார்கள்.
அதுபோலவே, நீங்களும் தர்மம் வழுவாமல் இந்த பணத்தை செலவிடுங்கள் என்பதை நினைவூட்டும் வகையில்தான், மதிப்புமிக்க உலோக நாணயங்களை, மொய்ப்பணமாக தந்தார்களாம்.. மொய் செய்பவருக்கும்தான் ஒரு மதிப்புமிக்க பொருளை அன்பளிப்பாக கொடுத்ததாக ஒரு மனநிறைவு கிடைக்குமாம்.. இதற்கு பிறகு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.. எனினும், உலோக நாணயங்களை போல் நோட்டுத்தாள்கள் உண்மை மதிப்பு கொண்டவை கிடையாது.
மொய்ப்பணம்: ரூபாய் தாளை மொய்ப்பணமாக தருபவர் மனதிலும், உண்மையான மதிப்பு கொண்ட பணத்தை மொய்யாக செய்யவில்லை என்ற மனக்குறை இருக்கவே செய்யும்.. இவைகளெல்லாம் முற்றிலும் நீங்கும் வகையில்தான், மொய்ப்பணமாக எத்தனை ரூபாய் கட்டுக்கள் வைத்தாலும், அதனுடன், நிஜமான மதிப்பு கொண்ட, ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொடுக்கும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர்..
அதுமட்டுமல்ல, மதிப்புமிக்க வெள்ளியில்தான் நாணயங்களும் உருவாக்கப்பட்டன.. அதனாலேயே மொய்ப்பணத்தில், 101, 501, 1001 என்று ஒரு ரூபாய் சேர்த்து வைக்கும் பழக்கம் மரபானது என்கிறார்கள்..
இன்னொரு காரணத்தையும் இதற்கு சொல்கிறார்கள்.. 100, 500 , 1000 என்று ரூபாய் நோட்டுக்களை மொய்யாக வைக்கும்போது, அந்த உறவுகளுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட எண்ணாக தோன்றிவிடும்.. மொய் செய்பவர் - மொய் பெறுபவர் என இரு தரப்புக்குமே உறவு நீடிக்கும் விதமாகவே, 101 501 1001 ரூபாய்களை தருகிறார்கள்.. இதனால், உறவுகள் வளர்ந்து கொண்டே செல்லும் ஒரு எண்ணம் ஏற்படுமாம்..
விசேஷம்: மற்றொரு காரணத்தையும் இதற்கு சொல்கிறார்கள்.. அதாவது, ஒற்றைபடை எண் எப்போதுமே சற்று விசேஷமான நம்பர்தான்.. சிலருக்கு சென்ட்டிமென்ட்டாகவும் இது கருதப்படுகிறது.. அதனாலேயே இரட்டை இலக்கம் இல்லாமல், ஒற்றை இலக்கத்தில் மொய் செய்யப்படுகிறதாம்.
இன்னொரு காரணத்தையும் இதற்கு சொல்கிறார்கள்.. மொய் எழுதும்போது எப்போதுமே, கல்யாண பந்தலில் கூட்டம் முந்தி தள்ளும்.. அதனால், பணம் தருபவரின் பெயர்களை அவசர அவசரமாக குறித்து கொண்டு, மொய்ப்பணத்தையும் அங்கிருப்பவர்கள் குறித்து வைத்து கொள்வார்கள்.. பெரும்பாலும், 100, 1000 என்று இரட்டை இலக்கமாகவே இருந்தாலும், கவனக்குறைவால் மொய்ப்பணத்தில் பிழை ஏற்பட்டுவிடும்..
50 அல்லது 100 ரூபாயின் கடைசி இலக்கம் பூஜ்ஜியமாகும். ஆனால் அதனுடன் 1 ரூபாய் சேர்ந்தால் அது 51 மற்றும் 101 ஆக மாறும்.. ஆதுமட்டுமல்ல, மொய் செய்தவரின் தொகை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஒற்றை படை இலக்கத்தில் மொய் செய்கிறார்களாம்.
வழியும் அன்பு: எனினும் இந்த மொய்ப்பணம் வெறும் பணம் மட்டுமே கிடையாது.. சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித்தேவைக்கு உதவும் ஈகை மட்டுமே கிடையாது.. வட்டியில்லா முதலீடு மட்டுமே கிடையாது.. அனைத்தையும் தாண்டி, அன்பளிப்புடன் பகிரும் அன்பு..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications