வீட்டு வாசலில் இருந்த செருப்புகளையும் ஷூக்களையும் நாய்கள் ஏன் கடிக்கிறது? இம்புட்டு உருக்கமான கதையா?
சென்னை: வீட்டு வாசல்களில் விட்டிருக்கும் செருப்புகள், ஷூக்களை அடிக்கடி நாய்கள் கடிப்பது ஏன் தெரியுமா?
நாய் நன்றியுள்ள ஜீவன் என்போம். பாசத்துடனும் பரிவுடனும் பழகும் விலங்கு நாய்தான்! நட்பு என்ற குணம் நாய்களுக்கு இயற்கையாகவே இருக்கிறது என விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாய்களை வளர்த்தாலே நமக்கு வரும் ஆபத்தை அவை எடுத்துக் கொள்ளும். நமக்காக எதையும் செய்யும் நாய்கள். எத்தனையோ இடங்களில் தங்கள் உரிமையாளர்கள் இறந்தாலும் அவர்கள் நினைவாக ஏங்கி தவிக்கும் நாய்களை பார்த்துள்ளோம்.
உரிமையாளரின் உடல் ஏதாவது இயற்கை பேரிடரில் காணாமல் போய்விட்டால் அந்த இடத்தையே நாய்கள் சுற்றி சுற்றி வந்து பார்க்கும். இப்படியாக நாய்களின் பாசத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். நாய்களில் தற்போது நிறைய வெளிநாட்டு இனங்கள் வந்துவிட்டன.
அவற்றை வாங்கி மக்கள் வீடுகளில் வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். நாய்களுக்கு நாம் சொல்வது புரியும். விலங்குகளுக்கு 5 அறிவு என சொல்வது தவறு. நாம் கோபமாக இருக்கிறோமா, இல்லை திட்டுகிறோமா என்பதெல்லாம் அவைகளுக்கு தெரியும். அதற்காக முகத்தை டைப் டைப்பாக மாற்றிக் கொள்ளும்.
நாம் இறங்கி வந்தால் அது முகத்தை கறாராக வைத்துக் கொள்ளும், கோபமாக இருந்தால் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ளும். இப்படியாக நாய்களுக்கு அறிவு அதிகம். இந்த நாய்களுக்கென எத்தனையோ பொம்மைகளையும் விளையாட்டு பொருட்களையும் நாம் வாங்கி கொடுக்கிறோம்.

ஆனால் அவற்றின் கவனம் எல்லாம் கந்தல் துணி அல்லது ஷூக்கள், செருப்புகளில்தான் செல்கின்றன. நாய்கள் ஏன் அவ்வாறு செய்கின்றன தெரியுமா. வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்படும் செருப்புகளை அந்த பகுதியில் வசிக்கும் அல்லது அந்த குடியிருப்புக்கு அடிக்கடி வரும் நாய்கள் தூக்கிக் கொண்டு போய்விடும்.
செருப்பை காணாமல் நாம் ஓடி போய் பார்த்தால் அந்த நாய்கள்தான் கடித்து வைத்திருக்கும். இதற்கு முதல் காரணம் நம் மீதான பாசத்தை நேசிக்கவே அவை இவ்வாறு செய்கின்றன. நமது உடல் வாசனை அந்த நாய்களுக்கு பிடிக்கும் என்பதால் இப்படி செய்து அந்த வாசனையை தக்க வைத்துக் கொள்கிறது. அந்த செருப்புகளுக்கு சொந்தக்காரர்கள் அந்த நாய்களை விட்டு பிரிந்து விட்டாலும் அந்த செருப்பை கடித்து தன் பாசத்தை வெளிப்படுத்தும்.
சில சமயங்களில் பசிக்காகவும் செருப்பை கடித்து சாப்பிட்டிருக்கும். இன்னொரு செருப்பை வைத்து விளையாடுவதற்காகவும் ஷூக்களையும் செருப்புகளையும் கொண்டு சென்றிருக்கும். இதே போல்தான் கந்தல் துணி, துணிகளுக்கும் பொருந்தும். விளையாட்டுக்காகவும் பாசத்திற்காகவும் நாய்கள் இவற்றை கடிக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications