வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா?
சென்னை: வீட்டு உபயோகத்துக்கான கேஸ் 14.2 கிலோ எடையில் ஏன் விற்கப்படுகிறது? 14 கிலோ அல்லது 15 கிலோ என்ற எடை பிரிவில் ஏன் விற்பனை செய்யப்படுவது இல்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்தியாவில் கேஸ்சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் வணிக சிலிண்டர் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏன் 14.2 கிலோ
வீட்டு உபயோகத்துக்கான கேஸ்சிலிண்டர் வினியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,. வணிக பயன்பாட்டுக்கான கேஸ்19 கிலோ எடையில் விற்பனை செய்யப்படும்போது, வீட்டு உபயோகத்துக்கான கேஸ்14.2 கிலோ எடையில் ஏன் விற்கப்படுகிறது? 14 கிலோ அல்லது 15 கிலோ என்ற எடை பிரிவில் ஏன் விற்பனை செய்யப்படுவது இல்லை என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான பதிலை பார்ப்போம்.
பர்மா ஷெல் நிறுவனம்
இந்தியாவில் வீட்டு பயன்பாட்டுக்கு கேஸ் (எல்.பி.ஜி.) பயன்படுத்துவது 1950-களில் தொடங்கியது. அப்போது பர்மா ஷெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் 14.2 எடையிலேயே கேஸ்வினியோகம் செய்தது. பின்னர் இந்த நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கழகமாக உருவெடுத்தது. ஆனாலும் கேஸ் எடையில் எந்த மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை.
சிலிண்டர் எடை
பர்மா ஷெல் நிறுவனம் 14.2 கிலோ எடையில் கேஸ்விற்பனை செய்யும் முடிவை எடுத்ததன் பின்னணியில் 3 காரணங்கள் உள்ளது. அதில் ஒன்று கேஸ்சிலிண்டரை எடுத்து செல்லுதல். சிலிண்டர் மற்றும் அதில் நிரப்பப்படும் 14.2 கிலோ கேஸ் சேர்த்தால் சுமார் 29 முதல் 30 கிலோ எடை வரும். அந்த காலகட்டத்தில் சராசரி மனிதன் இந்த எடையை எளிதாக தூக்கக்கூடியதாகும். ஏனெனில் 30 கிலோவையும் தாண்டி இருந்தால் சிலிண்டரை கையாளுவது சற்று கடினமாக இருக்கும்.
கேஸ் எவ்வளவு நாட்கள் வரும்
2-வதாக நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குடும்பத்தினருக்கு சமையல் செய்ய எவ்வளவு கேஸ்செலவாகும் என்பதை வைத்து முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் 14 கிலோ எடையுடைய கியாஸ், ஒரு சாதாரண குடும்பத்துக்கு சமையல் செய்ய 30 முதல் 45 நாட்கள் தாராளமாக வருவதாக கண்டறியப்பட்டது. ஒரு குடும்பம் ஒரு முறை கேஸ்சிலிண்டர் வாங்கினால் ஒரு மாதம் முழுமைக்கும் எரிபொருள் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இதனால் 1 மாதம் அல்லது இரண்டு மாதத்தில் ஒரு குடும்பத்துக்கு டெலிவரி செய்யும் வகையில் கேஸ்நிறுவனங்களுக்கான பணி எளிமையானது.
அழுத்தம்
மூன்றாவது மிகவும் முக்கியமான தொழில்நுட்ப காரணம் ஆகும். ஏனென்றால் சிலிண்டரின் உள்ளே கேஸ் அழுத்தத்துடன் நிரப்பப்படுகிறது. இந்த அழுத்தத்தை தாங்கும் வகையிலேயே இரும்பு சிலிண்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் 14.2 கிலோ எடையை விட அதிகமாக கேஸ்நிரப்ப முயற்சித்தால் வெடிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே கேஸ்நிரப்ப இதுவே சரியான அளவு என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.எல்.பி.ஜி. என்பது புரோபேன் மற்றும் பியூட்டேன் ஆகிய வாயுக்களின் கலவையாகும். இதன் எடை மற்றும் அடர்த்தி ஆகியவை வேறுபடும். எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் வெற்று இடம், எரிவாயு நிரம்பிய பகுதி மற்றும் அழுத்தம் ஆகியவற்றை கணக்கிட்டே 14.2 கிலோ எரிவாயு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதன்பிறகு வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோவிலும், சிறிய அளவிலான தேவைக்கு பயன்படுத்த கையில் எடுத்துச் செல்லும் வகையிலான 2 கிலோ மற்றும் 5 கிலோ, 10 கிலோ எடை பிரிவிலும் கேஸ்விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications