ஷாப்பிங் மால், தியேட்டர்களில் கழிப்பறையின் கதவுகளுக்கு கீழ் ஏன் இடைவெளி இருக்கிறது தெரியுமா?
சென்னை: பொது இடங்களில் உள்ள கழிப்பிடங்களில் கதவுகள் சிறியதாக இருப்பதும் கீழே அதிக இடைவெளி இருப்பதும் ஏன் தெரியுமா?
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுக் கழிப்பிடங்களில் கதவுக்கு கீழ் அத்தனை பெரிய கேப் இருக்கும். இதனால் அதன் உள்ளே சென்றாலே யாராவது பார்த்துவிடுவார்களோ என்று கூட சிலர் அஞ்சுவார்கள்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே கழிப்பறை வசதிகள் இருந்தாலும் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மட்டும் அவர்களை விட்டு விலகவில்லை. இதே போன்று கழிப்பறைகளின் கதவுகளை நாம் வீடுகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ பார்ப்பதில்லை.
அது ஏன் ஷாப்பிங் மால், மருத்துவமனை, தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மட்டும் அப்படி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா? இது எதற்கு என்றால் பொதுக் கழிவறையின் தரை பகுதியில் அடிக்கடி அசுத்தமாகும், தண்ணீர் தேங்கும். அதை கழிவறைக்குள் செல்லாமலேயே சுத்தப்படுத்ததான் இந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
வெளியே இருந்தபடியே தண்ணீரை ஊற்றி மாப்பை போடுவார்கள். அது மட்டுமல்லாமல் மால்கள், தியேட்டர்கள் மூடிபடியே சூரிய வெளிச்சம் இல்லாமல் இருக்கும். இதனால் ஏசி வசதி செய்யப்பட்ட நிலையில் பொதுக் கழிப்பறைகள் துர்நாற்றம் வீசக் கூடும். இப்படி கதவுக்கு அடியில் கேப் இருந்தால் அந்த துர்நாற்றம் வீசுவதும் குறையும்.
மேலும் வீடுகளில் கழிப்பறைக்குள் சென்றவர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு அங்கேயே விழுந்துவிட்டால் நமக்கு எப்படியும் தெரிந்துவிடும். ஆனால் ஷாப்பிங் மால்களில் கழிப்பறைக்குள் போனவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டாலோ அரை கதவு வழியாக தெரிந்து விடும். மேலும் கதவுகளை அவ்வப்போது திறப்பது, மூடுவது என இருப்பதால் கதவின் கீழ் பகுதி சேதமடையும். அதிலிருந்து தவிர்க்கவும் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.
உள்ளே மாட்டிக் கொள்வோருக்கு உதவி தேவைப்பட்டால் கூட நாம் அந்த கதவுகளின் கேப்களின் வழியாக ஏதாவது செய்யலாம். அது போல் கழிப்பறைக்குள் சென்றதும் ஆள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட பார்க்காமல் சிலர் கதவை திறக்க முயல்வார்கள். இதே இது போன்ற கழிப்பறைகளில் கீழே கால்கள் தெரிவதை வைத்து உள்ளே ஆள் இருப்பதை தெரிந்து கொள்வர்கள். மேலும் பொதுக் கழிவறைக்குள் போதை மருந்து பயன்படுத்துவது, வன்முறையில் ஈடுபடுவது, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவை தெரிந்துவிடும். இதனால் அவர்கள் அச்சப்பட்டு அதை செய்ய மாட்டார்கள்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications