இதயத்தை நொறுக்காத எக்சிட் போல்! எல்லாம் எதிராக வந்தும்.. காங்கிரஸ் நம்பிக்கையாக இருப்பது ஏன்? காரணம்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் எக்சிட் போல் கணிப்புகள் பலவும் பாஜகவிற்கு ஆதரவாக வந்துள்ளன. பெரும்பாலான முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவாக வந்தும் இந்திய கூட்டணி இன்னமும் மனம் தளரவில்லை. காங்கிரஸ் முக்கியமாக மனம் தளரவில்லை.
2024 லோக்சபா தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. 2024 லோக்சபா தேர்தல் 2 நாட்களுக்கு முன் முடிந்தது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. நாளை காலை 11 மணிக்கே கிட்டத்தட்ட முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும்.

இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பது நாளை காலை தெரிந்துவிடும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியா, மற்றவர் தலைமையிலான என்டிஏ ஆட்சியா, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியா அல்லது வேறு ஒருவரை முன்னிறுத்தும் இந்திய கூட்டணி ஆட்சியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும் காலங்களில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணிப்புகள் சொல்வதற்கு எதிர்ப்பு: இந்த லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பாலும் 300+ இடங்களை வெல்லும் என்று தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் என்டிஏ கூட்டணிக்கு 370 இடங்கள் கூட கிடைக்கும் என்று கணித்து உள்ளன. கணிப்புகள் உண்மையாகும் பட்சத்தில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் ஆக பதவி ஏற்பார்.
இப்படி 2024 லோக்சபா தேர்தலில் எக்சிட் போல் கணிப்புகள் பலவும் பாஜகவிற்கு ஆதரவாக வந்துள்ளன. பெரும்பாலான முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவாக வந்தும் இந்திய கூட்டணி இன்னமும் மனம் தளரவில்லை. காங்கிரஸ் முக்கியமாக மனம் தளரவில்லை.
என்ன காரணம்: இதற்கு பின் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் சென்ற சில ரிப்போர்ட்கள்தான் காரணம் என்கிறார்கள்.
அதன்படி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் அதாவது கர்நாடகா டிகே சிவக்குமார் தொடங்கி ராஜஸ்தான், தெலுங்கானா, மஹாராஷ்டிரா என்று பல மாநில தலைவர்கள் கொடுத்த ரிப்போர்ட். இந்திய கூட்டணி கட்சிகள் கொடுத்த மாநில வாரியான ரிப்போர்ட்.
இந்த ரிப்போர்டுகள்தான் காங்கிரஸ் கட்சி அதிக நம்பிக்கையாக இருக்க காரணம் என்கிறார்கள். ஏனென்றால் இந்த ரிப்போர்ட்படி காங்கிரஸ் கட்சி 115 இடங்கள் வரை குறைந்தபட்சம் வெல்லும். மொத்தமாக இந்திய கூட்டணி 295+ இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாம்.
295க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டிப்பாக இந்தியா கூட்டணி வெல்லும் என்றுதான் தனி ரிப்போர்ட் காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வேயிலும் சொல்லி இருக்கிறதாம். இதனால்தான் ரிசல்ட் எதிராக வராது.. எக்சிட் போல் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.. ஆனால் உண்மையான ரிசல்ட் நமக்கு சாதகமாகவே இருக்கும் என்று காங்கிரஸ் - இந்தியா கூட்டணி நம்புகிறதாம்.
அதனால்தான் இதுவரை இந்தியா கூட்டணி உடையவில்லை. இந்த நொடி வரை இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதோடு லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த பின் என்ன செய்யலாம்.. என்ன மாதிரியான திட்டங்களை வகுக்கலாம் என்பது பற்றியும் இந்தியா கூட்டணி ஆலோசனை செய்யும் முடிவில் இருக்கிறது. இதெல்லாம் இன்டர்னல் ரிப்போர்ட் கொடுத்த நம்பிக்கைதான் காரணம் என்கிறார்கள் இந்தியா கூட்டணி வட்டத்தினர்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications