Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வணக்கம்" வெச்சிட்டே.. தெருவில் ஓடிய செந்தில்பாலாஜி.. செம.. மொத்த ஈரோடும் "ஆ".. அட செங்கோட்டையன் வேற

செந்தில்பாலாஜி ஓட்டமும் நடையுமாக வீதிகளில் ஓடி ஓடி சென்று வாக்குகளை சேகரித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில், எதிர்க்கட்சிகள் டெபாசிட் வாங்க கூடாது என்ற ரீதியில் திமுக பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளது.. இதே இடைத்தேர்தலில் எப்படியாவது பெருவாரியான வாக்குவங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற ரீதியில் அதிமுக பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளது.. இதற்கு நடுவில், தேமுதிக பிரச்சாரத்தில் ஸ்பீடு எடுக்க, சீமானோ சீறி வருகிறார்..!!!

இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது... இன்னும் தேர்தலுக்கு 13 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் ஈரோடு கிழக்கில் சூடு பிடித்துள்ளது.
தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதி அறிவிப்பு

உதயநிதி அறிவிப்பு

திமுக தலைவர்களும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் வரும் 24ம் தேதி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் அதாவது 15, 16, 167 மற்றும் 24, 26 தேததிகளில் பிரச்சார வேனில் வீதி வீதியாக சென்று தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். உதயநிதி ஸ்டாலினும், வரும் 19 ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.. மநீம தலைவர் கமல்ஹாசனும் 19ம் தேதி பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். தலைவர்கள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், திமுகவின் அமைச்சர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் தொகுதியில் படுபிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்..

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் திமுகவின் செந்தில் பாலாஜியும், அதிமுகவின் செங்கோட்டையனும்தான்.திமுக அரசு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொட்டகை அமைத்து தேர்தல் நடத்தை விதிமுறைக்கு மாறாக செயல்பட்டு வருவதாக செங்கோட்டையன் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.. அந்த புகாரில், "120 இடங்களில் செட் கொட்டகை அமைத்து சேர்களை திமுகவினர் போட்டிருக்கிறார்கள்.. அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள செட்களுக்கான செலவுத் தொகையை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்ஸின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்..

பாஸ் பாஸ்

பாஸ் பாஸ்

இந்த செட்டுகளை அகற்ற வேண்டும்" என்று சலசலப்பை கூட்டி உள்ளார். இதற்கு திமுகவின் மூத்த அமைச்சர் எவ வேலு பதிலடி தந்துள்ளார். "ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் இருந்து 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் உள்ள பறக்கும் படைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது... முறையாக அனுமதி பெற்று இருக்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு நடக்கிறது.. ஏற்கனவே 40 பேருக்கு பாஸ் தரப்பட்டுள்ளது. அவர்கள் தான் கட்சிக் கொடியைக் கட்டிக் கொண்டு போகிறார்கேளே தவிர வேறு யாரும் அப்படி செய்யவில்லை... தோல்வி பயம்தான் இவங்களுக்கு வந்துவிட்டது என்று பதிலடி தந்துள்ளார்.

கிளம்பியது பூகம்பம்

கிளம்பியது பூகம்பம்

நேற்றைய தினம், அதிமுகவின் சிவி சண்முகம், வேறு ஒரு புகாரை கிளப்பிவிட்டிருந்தார்.. தேர்தல் தொடர்பான முறைகேடுகள் நடந்துள்ளது.. இந்த தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக லிஸ்ட் தரப்பட்டுள்ளது.. அதில் இறந்தவர்கள் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது.. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை... அதேபோல, வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது,. ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை... அதை சரிபார்க்கும்போது அவர் ஏற்கனவே இறந்திருக்கிறார்.. அவர் பெயரும் நீக்கப்படவில்லை.. ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர், மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி நிறைய குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.

அராஜகங்கள்

அராஜகங்கள்

ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் லிஸ்ட் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் லிஸ்ட்டை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும்.. மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது இந்த திமுக.. போலீசாரோ, திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார்கள்..

ஆணித்தர பதிவு

ஆணித்தர பதிவு

தேர்தல் நடத்தும் அலுவலர்களும் முறையாக செயல்படவில்லை என்று கூறியிருந்தார். தினம் தினம் ஒவ்வொரு நிர்வாகிகளும், திமுக அரசு மீது புகார்களை கிளப்பி வருவது, தொகுதிக்குள் திமுகவுக்கு எரிச்சலை கூட்டி வருகிறது.. எனினும், திமுக நிர்வாகிகள் தீயாய் இறங்கி வேலையை பார்த்து வருகின்றனர்.. இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பை மூத்த அமைச்சர் நேருவும், செந்தில்பாலாஜியும் முன்னின்று கவனித்து கொண்டிருக்கிறார்கள்.. காரணம், இந்த இடைத்தேர்தல் வெற்றியானது, தமிழக மக்களின் மத்தியில் ஆணித்தரமாக பதியும் அளவிற்கு மெஜாரிட்டி வாக்குகளை பெறுவதுடன், திமுகவின் செல்வாக்கு கொஞ்சமும் சரியவில்லை என்பதை நிரூபிக்க வகையில் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தகவல்கள் பரபரத்தன.

ஓட்டமும் நடையுமாய்

ஓட்டமும் நடையுமாய்

அந்தவகையில், பலரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.. இதில், செந்தில் பாலாஜி, உச்சக்கட்ட ஸ்பீடில் பிரச்சாரம் செய்து வருகிறாராம்.. அதிலும் ஓடி ஓடி வாக்கு சேகரிப்பதை பார்த்து மக்களே வாயடைத்து போனார்களாம்.. தெரு ஒன்றிற்குள் வாக்கு கேட்க சென்ற செந்தில்பாலாஜி, வீடுகளின் வாசலில் நின்றிருந்த மக்களிடம் ஓடிக்கொண்டே வாக்கு கேட்டார்.. செந்தில் பாலாஜி ஓடுவதை பார்த்த, மற்ற நிர்வாகிகளும், அவர் வேகத்துக்கு அவருக்கு பின்னாடியே ஓட துவங்கினார்கள்.. அந்த தெருக்களில், மாடி வீடுகளில் இருந்தவர்களை பார்த்து, செந்தில்பாலாஜி ஓடிக்கொண்டே "வணக்கம்" வைத்தார்..

கப்சிப் மோடு

கப்சிப் மோடு

இதையெல்லாம் பார்த்து, , திமுக மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியினரே ஆச்சரியப்பட்டு போனார்கள்.. அதேசமயம், திமுக சீனியர்கள் எல்லாருமே இப்போதைக்கு கப்சிப் மோடில் இருக்கிறார்களாம்.. "காலை, மாலை என 2 வேளையும் பிரச்சாரத்திற்கு போவோம், பின்னணி தேர்தல் யுக்திகளை செந்தில்பாலாஜியே பார்த்து கொள்ளட்டும்" என்ற அளவிற்கு அதீத நம்பிக்கையுடன் அவர்கள் இருப்பதாகவும் தெரிகிறது.. செந்தில் பாலாஜி தொகுதிக்குள் தெருவுக்குள் ஓட்டமும் நடையுமாக, ஓடி ஓடி சென்று ஓட்டு கேட்ட வீடியோக்கள்தான் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது..!!!

சாணிபவுடர் கோலம்

சாணிபவுடர் கோலம்

முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி வீரப்பன்சத்திரம் பகுதியில் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரை வரவேற்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் கோலங்கள், வண்ணபலூன்களால் அலங்காரம் மற்றும் மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.... ஒவ்வொரு வீதிகளிலும் கைச்சின்னமும், உதயசூரியன் சின்னமும், வண்ணமலர்கள் உள்ளிட்ட கோலங்கள் இடப்பட்டிருந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்ட சாலை முழுவதும் சாணி பவுடரால் மஞ்சள் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது... கிட்டத்தட்ட குடும்பவிழா போன்று திமுக பிரசாரம் அமைந்திருந்தாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது... அதுமட்டுமல்ல, ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுவிட்டால் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கில் மேலும் ஒரு படி உயர்ந்து விடுவார் என்று இப்போதே பெருமிதத்துடன் சொல்கிறார்கள் ஈரோடு திமுகவினர்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+