சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி கிட்ட நெருங்கி.. மோடி கேட்ட வார்த்தை.. ஐயா அப்பாவு அவ்ளோ கெஞ்சினாரே.. சொல்றது யார் பாருங்க

எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்து புகழேந்தி பேட்டி ஒன்றை தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும், மதுரை ஏர்போர்ட்டில் ஒன்றாக நின்ற சம்பவம் குறித்து, மூத்த தலைவர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்ற நிலையில், ஓபிஎஸ் அருகே தான் சிரித்த முகத்துடன் எடப்பாடி பழனிசாமி நிற்கும் போட்டோ ஒன்று இணையத்தில் விரைவாக பரவியது.. அரசியல் களத்திலும் நிறைய சலசலப்பை உண்டு பண்ணியது.

இந்நிலையில், தன்னுடைய முடிவில் மாற்றம் இல்லை என்று ஆர்பி உதயகுமாரை விட்டு விளக்கம் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தெரிகிறது..

’மெயின்’ தலையே சொல்லிருச்சு! நாங்க அப்பவே அப்புடி.. கெத்தாகப் பேசிய ஓபிஎஸ்! கடுப்பான எடப்பாடி டீம்! ’மெயின்’ தலையே சொல்லிருச்சு! நாங்க அப்பவே அப்புடி.. கெத்தாகப் பேசிய ஓபிஎஸ்! கடுப்பான எடப்பாடி டீம்!

 ஹவ் ஆர் யூ

ஹவ் ஆர் யூ

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், "நாங்கள் வரவேற்க சென்றபோது பிரதமர் மோடி உற்சாகமாக வந்தார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகே வந்தபிறகு மகிழ்ச்சியுடன் "ஹவ் ஆர் யூ?" என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதை அருகில் நின்று நான் கேட்டேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "ஐயம் ஃபைன்" என்றார். 42 பேர் வரை வரிசையில் பலர் நின்றாலும் வேறு யாருடனும் பேசவில்லை" என்று விளக்கம் தந்திருந்தார். இந்நிலையில், ஒரு பிரபல டிவி சேனலுக்கு புகழேந்தி தந்துள்ள பேட்டியில் இதுகுறித்து விமர்சித்துள்ளார்.. புகழேந்தி அதில் பேசியதன் சுருக்கம் இதுதான்:

 கெஞ்சிய அப்பாவு

கெஞ்சிய அப்பாவு

"அன்று சட்டசபையில் எங்க அண்ணன் சபாநாயகர் எவ்வளவோ கெஞ்சினாரே.. ஆனாலும், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி விவகாரத்தில், கருப்பு சட்டையை அணிந்து கொண்டு, மாவீரர்கள் போல வந்து எடப்பாடி பழனிசாமியினர் நின்று கத்திக் கொண்டே நின்றார்கள்.. ஓபிஎஸ் இருக்கையை காலி செய்ய வேண்டும், ஒழிக என்றெல்லாம் சத்தம் போட்டார்கள்.. அதற்கு சபாநாயகர் அப்பாவு, "ஐயா, இது கேள்வி நேரம்.. ஒரு மணி நேரம் அமைதியாக இருங்க.. இந்த பதவி விவகாரத்தில் தலையிட முடியாது.. சட்டத்தில் இடமில்லை.. தயவுசெய்து அமைதி காக்க வேண்டும், உங்கள் கோரிக்கையை எடுத்துக் கொள்கிறேன், விவாதிக்கலாம், இந்த துணை தலைவர் பதவி என்பது அதிகாரத்தில் இல்லாதது என்பது உங்களுக்கே தெரியும் என்று எவ்வளவோ கெஞ்சினாராம்..

 ஜாலியா பக்கத்தில்

ஜாலியா பக்கத்தில்

அதற்கு எடப்பாடி, "முடியாது, நாங்கள் விடமாட்டோம், இப்படித்தான் ஆர்ப்பாட்டம் செய்வோம், ஓபிஎஸ்ஸை பக்கத்தில் உட்காரவே விடமாட்டோம், இங்கே பாருங்கள் கருப்பு சட்டை என்று எடப்பாடி குதித்து, கலாட்டா செய்தாரே? இப்ப என்ன ஏர்போர்ட்டில் போய் 2 பேரும் ஜாலியா பக்கத்தில் பக்கத்தில் நிக்கறாங்க? ஒன்னுமே புரியலயே.. இதே பழனிசாமி எல்லாரிடமும் என்ன சொல்லி வருகிறார்? "ஓபிஎஸ்ஸிடம் கட்சி இல்லை, நிர்வாகிகள் இல்லை, பொதுக்குழு இல்லை, தொண்டர்கள் அவரிடம் இல்லை.. யாருமே இல்லாமல் வெறும் 4 பேரை மட்டும் வைத்துக் கொண்டு, அம்போன்னு தனியா நிக்கிறார் என்று சொன்னவர்தானே எடப்பாடி..

 துப்பியிருப்பாங்க

துப்பியிருப்பாங்க

அப்படி இருக்கும்போது, ஓபிஎஸ்ஸை பாஜக ஏன் சமமாக நிற்க வைக்கிறது? சபாநாயகரிடம் அன்று கேட்ட கேள்வியை, ஏர்போர்ட்டில் அவரை பார்த்து கேட்க வேண்டியதுதானே? நான்தான் அதிமுக, ஓபிஎஸ்ஸை ஏன் சேர்க்கறீங்க? தொடர்ந்து நான் எல்லா தேர்தலிலும் தோற்றாலும் இப்படித்தான் பேசுவேன் என்று அங்க பார்த்து சொல்ல வேண்டியதுதானே.. அப்படி மட்டும் எடப்பாடி சொல்லியிருந்தால், காரித்துப்பி இருப்பாங்க..

 ஹவ் ஆர் யூ

ஹவ் ஆர் யூ

ரவீந்திரநாத்தை நீக்கிவிட்டோம், ஆகவே அவரை நீக்குங்கள் என்று டெல்லி சபாநாயகருக்கு கடிதம் எழுதினாரே, இதேபோல கருப்பு சட்டையை போட்டுக் கொண்டு, டெல்லியில் போய் போராட்டம் பண்ண வேண்டியதுதானே.. ஹவ் ஆர் யூன்னு எடப்பாடியை பார்த்து கேட்டாராம் மோடி.. இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? இன்னும் ஜெயிலுக்கு போகலையா நீ? கொள்ளை அடிச்சிட்டு, எல்லா வேலையும் பண்ணிட்டு, இன்னமும் நடமாட்டிதான் இருக்கியா, ஹவ் ஆர் யூ" என்று கேட்டிருப்பார்.. இவங்க அதுக்கு வேற அர்த்தம் எடுத்துக் கொண்டார்கள்" என்றார் புகழேந்தி.

நெளிந்த எடப்பாடி

நெளிந்த எடப்பாடி

அன்றைய தினம் சட்டசபையில் ஓபிஎஸ் + எடப்பாடியும் நெளிந்தபடியே உட்கார்ந்திருந்தனர்.. அடுத்த நிமிடமே சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட எடப்பாடி ஆரம்பித்துவிட்டாலும், இவர்கள் ஒன்றாக உட்கார்ந்திருந்தது ஒருசில நிமிடங்களே இருந்தன.. இந்த அளவுக்கு எடப்பாடியை சங்கடத்தில் ஆழ்த்திய நிகழ்வை, பிரதமர் மோடி அசால்ட்டாக செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.. பிரதமரை சந்தித்தாக வேண்டிய நெருக்கடிதான், ஓபிஎஸ்ஸுடன் எடப்பாடியை ஒன்றாக அருகருகே நிற்க வைக்கும்படியான சூழலை உருவாக்கி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.

நெளிந்த எடப்பாடி

நெளிந்த எடப்பாடி

அதேசமயம், இந்த ஏர்போர்ட் நிகழ்வினால், ஓபிஎஸ்ஸுக்கு எந்தவிதமான சங்கடமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.. காரணம், அவர்தான் கட்சி இணைய வேண்டும் என்று அப்போதுமுதல் இப்போது வரை அழைப்பு விடுத்து காத்துக் கொண்டிருப்பவர்.. அதனால், இந்த சங்கடம் எடப்பாடிக்கு இருந்து வந்துள்ள நிலையில், மோடியின் ஒரே ஒரு கண்ணசைவு, எடப்பாடியின் மொத்த இறுக்கத்தையும், பிடிவாதத்தையும் தளர்த்திவிட்டது என்ற கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில்தான், இந்த நிகழ்வினை விமர்சனமும் செய்ய துவங்கி உள்ளனர் புகழேந்தி போன்றவர்கள்..!!

English summary
Do you know why Modi asked Edappadi Palanisamy how are you, explains Sr Leader Pugazhendhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X