பிஎப் அட்வான்ஸ் எடுக்க முடியலையா.. பிஎப் கணக்கில் நீண்ட காலமாக சிக்கலா.. சட்டென சரியாக வேண்டுமா?
சென்னை: சிலர் அடிக்கடி நிறுவனம் மாறுவார்கள்.. வேலை செய்யும் நிறுவனத்தை அடிக்கடி மாற்றினால், முறையாக ஒவ்வொரு கம்பெனியில் இருந்து விலகுவதுதான் நல்லது. அப்படி விலகி கையோடு உடனே, அந்த நிறுவனத்தின் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு மாற்றுவது நல்லது.. இதை பற்றி முழுமையாக பார்ப்போம்..
epfo (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிஎப் பணம் சேமிப்பு என்பது மாதச் சம்பளம் வாங்குவோரின் முக்கியமான இரும்பு பெட்டியாகும். கஷ்டம் வரும் போது எல்லாம்.. அதாவது யாருமே கை கொடுக்காத நிலையில், எல்லா சூழ்நிலைகளும் நமக்க எதிராகவும் இருந்தால், அப்போது கண்ணை மூடிவிட்டு பிஎப் கணக்கை திறந்து பார்த்தால் நிச்சயம் நமக்கு கைகொடுக்கும்..

பிஎப் பணத்தை பொறுத்தவரை மிகமோசமான சூழ்நிலைகளில் மட்டுமே எடுக்க வேண்டும்.. அடிக்கடி எடுக்கக்கூடாது.. முடிந்தவரை எடுக்காமல் இருப்பதே நல்லது. அப்படி இருந்தால் மட்டுமே பின்னாளில் இடம் வாங்க அல்லது வீடு கட்ட அல்லது ஓய்வு காலத்தில் சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்க, மகன் அல்லது மகள் உயர்கல்வியை சிறப்பாக பயில உதவும்..
சரி விஷயத்திற்கு வருவோம்.. பிஎப் எனப்படும் epfo அக்கவுண்டில் ஒரு uan நம்பர் தான் ஒருவருக்கு இருக்கும்.. ஆனால் எத்தனை பிஎப் கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். நீங்கள் கடைசியாக பணியாற்றும் நிறுவனத்திற்கு ஒரு பிஎப் கணக்கு, அதற்கு முந்தைய நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிஎப் கணக்கு இருக்கும்..
அடிக்கடி நிறுவனம் மாறுவோர்.. முடிந்த வரை அப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது.. அப்படி மீறி மாறித்தான் ஆக வேண்டும் என்றால், கண்டிப்பாக முறைப்படி வெளியேற வேண்டும். ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறுகிறீர்கள் என்றால், அங்கு உங்கள் பிஎப் கணக்கு தொடங்கிய தேதியையும் (வேலையில் சேர்ந்த தேதி), நீங்கள் வேலையைவிட்டு நின்ற தேதியையும் (பிஎப் கணக்கு நிறைவுநாள்) அந்த குறிப்பிட்ட பிஎப் கணக்கில் அந்த நிறுவனத்தின் ஹெச்ஆர் குறிப்பிட்ட வேண்டும். முறைப்படி வெளியேறினால் தான் அதனை பிஎப் கணக்கில் தனியார் நிறுவனங்கள் குறிப்பிடும்..
அப்படி குறிப்பிட்டால் மட்டுமே இப்போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பிஎப் கணக்கு பணத்தை மாற்ற முடியும். பிஎப் கணக்கை வேலையைவிட்டு நின்ற உடனேயே மாற்றி விடாவிட்டால், பின்னாளில் சிக்கல் வரும்.. எனவே பழைய பிஎப் கணக்கில் உள்ள பணத்தை கையோடு புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கிற்கு மாற்றுவதற்கு பிஎப் இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். ஒரு வேளை அதற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், பழைய நிறுவனம் நீங்கள் வேலையைவிட்டு நின்றதை குறிப்பிடாமல் விட்டுள்ளது என்று அர்த்தம்..
அதை கவனித்து மாற்றி விடுங்கள் . அப்படி நீங்கள் வேலையை விட்டு நின்ற அத்தனை நிறுவனங்களிலும் மாறி ஒரே நிறுவனத்திற்கு பணத்தை மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.. அப்படி மாற்றி வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பிஎப் கணக்கில் பணம் அட்வான்ஸ் எடுக்க முடியும். ஒருவேளை மொத்தமாக வேலையை விட்டு நின்றாலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications