ஹைவேயில் உள்ள போர்டு பச்சை நிறத்தில் மட்டுமே இருக்கே.. ஏன் தெரியுமா? சீக்ரெட் மேட்டர் இதுதானாம்
சென்னை: தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது வழிகாட்டி பலகைகளை பார்த்திருப்போம். அந்த போர்டுகள் எல்லாம் பச்சை நிறத்திலும் அதில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர் மட்டும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். ஆனால் அது ஏன் பச்சை நிறத்தில் மட்டும் போர்டுகள் இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது வழி நெடுக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு இருக்கும். எடுத்துக்கட்டாக நெல்லையில் இருந்து சென்னை வருகிறீர்கள் என்றால் மதுரைக்கு எவ்வளவு தூரம் உள்ளது, திருச்சிக்கு எவ்வளவு தூரம் உள்ளது? சென்னைக்கு எவ்வள்வு தூரம் உள்ளது என்று ஆங்காங்கே வழிகாட்டி பலகைகள் இருப்பதை நிச்சயம் பார்த்து இருப்பீர்கள்..

வழிகாட்டி பலகைகள்: இந்த வழிகாட்டி பலகைகள் எல்லாம் சொல்லி வைத்தால் போல பச்சை நிறத்தில் இருக்கும். எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். ஏன், வேறு வேறு வண்ணங்களில் வைக்கலாம் தானே.. பச்சை நிறத்தில் மட்டுமே இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா.. அதே நேரத்தில் பல இடங்களில் நீல நிறத்திலான வழிகாட்டி பலகைகளும் இருக்கின்றன..
ஏன் பச்சை நிறத்தில் மட்டும்?: ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பச்சை நிறத்தை மட்டுமே காண முடியும். பச்சை நிறத்தில் மட்டுமே இருப்பதற்கு பின்னால் சில காரணமும் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நெட்டிசன் ஒருவர் இது தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தெளிவாக கூறியிருக்கிறார். அவர் கூறிய தகவல் வருமாறு:-
சிவப்பு நிற போர்டு: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய தகவல் என்றால் அதை சிவப்பு நிற போர்டில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது தவறான ரூட்.. உடனே தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் என்றால் அது சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் இருந்தால் சாலையில் கவனம் செலுத்துவதில் இருந்து sign board -மீது கவனம் செலுத்தும் வகையில் சிவப்பு நிறம் இருக்கும். இதனால், தவறான பாதை அங்கு வழி இல்லை, ஸ்டாப் என்பது போன்ற முக்கிய தகவல் என்றால் சிவப்பு போர்டில் வைக்கிறார்கள்.

கவன சிதறல் ஏற்படாது: அதேபோல, அதி முக்கியம் இல்லாத பொதுவான தகவல் அதாவது, நகரங்களுக்கு செல்லும் தொலைவு போன்றவை பச்சை நிறத்தில் உள்ளது. பச்சை நிறத்தை பொருத்தவரை அமைதியான மற்றும் ஊடுருவாத வண்ணமாக கருதப்படுகிறது. அதாவது, வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதற வைக்காது. எனவே தான் பச்சை நிறத்தில் இத்தகைய குறியீடுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அமெரிக்காவின் அரிசோனா சாலை போக்குவரத்து அமைச்சகம் நடத்திய ஆய்வில், பச்சை நிறம் என்பது சுற்றுப்புறத்தின் வண்ணத்தோடு ஒட்டி இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் எற்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பச்சை நிறத்தில் சைன் போர்டு இருப்பதற்கான காரணம் இதுதானாம்..
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications