ஆசை ஆசையா பாஜகவுக்கு ஓடிய "கோபால்".. திடீர்னு "ரெட் சிக்னல்".. யூடர்ன் போட்டு "அங்கேயே" போயிட்டாராமே
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் காங்கிரஸில் இணைந்தது குறித்த தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: பாஜக - அதிமுக இடையே மனக்கசப்புகள் வெடித்து வரும்நிலையில், பாஜகவில் இருந்து பல அதிருப்தியாளர்கள் அதிமுகவில் இணைந்து வரும்நிலையில், பாஜகவில் இணைவதற்காக, ஒரு அதிகாரி ஆர்வம் காட்டியதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..!!!
கடந்த 3 வருட காலமாகவே, பாஜகவில் பிரபலங்கள் அதிகம் பேர் இணைந்து வருகிறார்கள்.. குறிப்பாக நடிகர்கள், நடிகைகள், பாஜகவில் இணையவே ஆர்வமும் காட்டி வருகிறார்கள்.
பிரதமர் மோடி அரசு மற்றும் வளர்ச்சி அரசியல் மீதான நம்பிக்கை காரணமாகவே, தாங்கள் பாஜகவில் இணைகிறோம் என்ற காரணத்தையும் பூரித்து சொல்கிறார்கள்.

பிரபலங்கள்
ஆர்வத்துடன் பாஜகவில் இணையும் இத்தகைய பிரபலங்களை, தங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு பாஜகவும் நன்றாக பயன்படுத்தி கொண்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும் பலர் பாஜகவில் இணைந்தனர்.. காரணம், அதிருப்தியாளர்களுக்கு வலையை வீசி தங்கள் பக்கம் இழுப்பது, பாஜகவுக்கு கைவந்த கலை.. அந்தவகையில், அதிமுக & திமுகவில் இருந்தும், முக்கிய தலைவர்களை குறிப்பாக குஷ்பு முதல் விபி துரைசாமி வரை தன்பக்கம் கொண்டுவந்ததை மறுக்க முடியாது.. எனினும், பிரபல ரவுடிகளும் பாஜகவில் ஒவ்வொருவராக இணைய ஆரம்பித்தனர்.. இது பேசுபொருளாகவும் வெடித்தது.

அதிருப்தியாளர்கள்
இதுகுறித்து அப்போதைய மாநில தலைவர் எல்.முருகனிடம் செய்தியாளர்களே நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு எல்.முருகன், ரவுடிகளின் பின்னணி பற்றி விசாரித்தே கட்சியில் இணைப்பதாகவும், அவர்கள் திருந்தி வாழ விரும்புவதாகவும், கட்சியில் இணைந்த பிறகு அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்றும் எல்.முருகன் விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.. இந்த விளக்கம் அப்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களாகவே, பாஜகவில் அதிருப்திகள் வெடிக்கவும், அங்கிருந்து கிளம்பி அதிமுகவுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் பாஜக அதிருப்தியாளர்கள்..

ஸ்பெஷல் தகவல்
மாநில தலைமையின் அதிருப்தியால் கட்சியை விட்டு விலகினாலும், திமுக, விசிக, அமமுக என மற்ற கட்சிகளுக்கு செல்லாமல், ஏன் குறிப்பாக அதிமுகவுக்கே செல்கிறார்கள்? அப்படியே சென்றாலும், பாஜகவையும், பாஜகவின் கொள்கையையும் விமர்சிக்காமல் செல்கிறார்களே ஏன்? என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் கேள்விகள் இன்னமும் வலம் வந்தபடியே உள்ளன... இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜகவில் இணைய ஒரு அதிகாரி ஆர்வம் தெரிவித்திருக்கிறார்.. அதுகுறித்து ஸ்பெஷல் தகவல் ஒன்றுதான் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

முட்டுக்கட்டை
தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் முக்கிய பதவியில் இருந்தவரும், தமிழகத்தின் முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராகவும், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆர்.ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.(ஓய்வு) , அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்துஅவரது முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார் ராஜகோபால். அரசியலுக்குள் செல்ல வேண்டும் என விரும்பிய நிலையில் பாஜகவில் சேரவே நினைத்துள்ளார். பன்வாரிலாலுக்கும் ராஜகோபாலுக்கும் நெருங்கிய நட்பு இருந்ததால், அவர் மூலம் பாஜகவில் இணைய அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் ராஜகோபால்.

ரெட் சிக்னல்
இதனை பன்வாரிலாலும் பாஜக தலைமைக்கு தெரியப்படுத்த, அங்கிருந்து ரெட் சிக்னல் போடப்பட்டதாம். இதனை ராஜகோபாலை தொடர்புகொண்டு, "உங்கள் கோரிக்கையை கட்சி தலைமை யோசிக்கவில்லை " என்று நாசுக்காக சொல்லிவிட்டாராம் பன்வாரிலால். ஆனால், இதெல்லாம் நடந்து 6 மாதங்களுக்கு மேலாகிறது என்கிறார்கள். இதனிடையே, "மாநில கட்சியில் இணைவதை நீங்கள் யோசிக்கலாமே" என ஓய்வு பெற்ற அவரது ஐ.ஏ.எஸ். நண்பர்கள் சொல்ல, மாநில கட்சியில் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில்தான், டெல்லியில் உள்ள தனது நண்பர்கள் சிலரின் நட்பின் மூலம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் தொடர்பு ராஜகோபாலுக்கு கிடைத்துள்ளது.

சான்ஸ் சாய்ஸ்
வேணுகோபாலின் முயற்சியில் ராகுல்காந்தியிடமும் பேசும் வாய்ப்பும் ராஜகோபாலுக்கு கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கே.எஸ். அழகிரியை சந்தித்து இணைந்து விடுங்கள். அவரிடமும் சொல்லப்பட்டுவிடும். மற்றதை நீங்கள் டெல்லி வரும் போது பேசிக் கொள்ளலாம் என வேணுகோபால் சொல்ல, அதன்படி கே.எஸ். அழகிரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. அதனையடுத்தே நேற்றைய தினம் அழகிரியை சந்தித்து காங்கிரஸில் இணைந்திருக்கிறார் ராஜகோபால் என்கிறது சத்தியமூர்த்திபவன் வட்டாரம்.. ஆனாலும், பாஜக மேலிடம் ஏன் இவரை தவிர்த்தது?? இதுதான் தெரியவில்லை.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications