உலகின் மூத்த மொழி தமிழ்தான்.. கன்னடம் பிறகு வந்தது.. கொட்டி கிடக்கும் ஆதாரங்கள்!
சென்னை: உலகின் மூத்த மொழி தமிழ்.. கன்னடத்தை விட மூத்தது தமிழ்... ஆனால் இதை கன்னடர்கள் பலரும் ஏற்றுக்கொள்வது இல்லை. மாறாக கன்னடமே மூத்த மொழி என்று அவர்கள் பதில் வாதங்களையும் ஆதாரம் இன்றி வைப்பது உண்டு.
சமஸ்கிருதம் இல்லாமல் தனித்து இயங்கும் திறன் பெற்றது தமிழ். ஆனால் கன்னடம் அப்படியில்லை. சமஸ்கிருத வார்த்தைகள் நிறைய உண்டு. கன்னடம் உள்ளிட்ட திராவிட மொழிகளாக இருந்தாலும் சரி.. வடஇந்திய மொழிகளாக இருந்தாலும் சரி.. அதில் இருந்து சமஸ்கிருதத்தை எடுத்துவிட்டால் அதன் பயன்பாடு கடினம் ஆகிவிடும். ஆனால் தமிழ் அப்படி இல்லை.
தமிழ் சமஸ்கிருதம் இல்லாமல் இயங்குகிறது.. இனியும் இயங்கும். ஹிந்தி வார்த்தைகள் நிறைய கன்னடத்திலும் பொதுவாக உண்டு. தெலுங்கும் அப்படித்தான். மலையாள மொழியோ முழுக்க முழுக்க சமஸ்கிருதம் - தமிழ் கலப்பு மட்டுமே. கன்னடம் 30 சதவிகிதம் சமஸ்கிருத உதவியுடன்தான் இயங்குகிறது. ஆனால் இதை கன்னடர்கள் பெரிதாக ஏற்றுக்கொள்வது இல்லை. இப்போது நடிகர் கமல்ஹாசன் "Thug Life" விழாவில் கன்னடம் தமிழில் இருந்து வந்தது என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உள்ளனர் கன்னட மக்கள். எங்கள் மொழியே பழையது என்று ஏற்காமல் கூறி வருகின்றனர். உண்மையில் தமிழ் ஏன் பழைய மொழி.. தமிழ் ஏன் உலகின் மூத்த மொழி என்பதற்கான ஆதாரங்களை இங்கே பார்க்கலாம்!

1. ஆரம்பகால கல்வெட்டுகள்
ஒரு மொழி எவ்வளவு மூத்தது என்பதை வாயால் சொல்வதை விட எழுத்து ஆதாரங்கள் மூலம் நிரூபிப்பதே சரியானதாக இருக்கும். அந்த வகையில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் எல்லாம் தமிழ் மொழியின் பழமையை உறுதி செய்கின்றன. அறியப்பட்ட மிகப் பழமையான கல்வெட்டுபடி பார்த்தால்
தமிழ் மொழி - தமிழ்-பிராமி (மாங்குளம், மதுரை) எழுத்துக்கள் - சுமார் கிமு 500-700 பழைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
கன்னட மொழி - ஹல்மிடி எழுத்துக்கள் - சுமார் கிபி 450 பழைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
கீழடி, மாங்குளம், ஆதிச்சநல்லூர் மற்றும் கொடுமணல் ஆகிய இடங்களில் காணப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்கள் கிமு 500-700 ஆண்டை சேர்ந்தவை, இது ரேடியோகார்பன் டேட்டிங் மற்றும் பழங்காலவியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கன்னடத்தின் பழமையானதாகக் குறிப்பிடப்படும் ஹல்மிடி கல்வெட்டு, கிபி 450 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. அதாவது கிட்டத்தட்ட 900 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தவை. இதன் அடிப்படையில் தமிழ் கன்னடத்திற்கு மூத்தது என்பது உறுதியாகிறது. தமிழை விட குறைந்தது 1500 ஆண்டுகள் குட்டிப்பையன்தான் கன்னடம்!
2. காப்பியங்கள் ஆதாரம்
கல்வெட்டுகளோடு நிற்க வேண்டாம். பண்டைய இலக்கிய சான்றுகள் பலவும் கூட இதற்கு துணை சேர்க்கின்றன.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட பழமையான இலக்கியம் - தொல்காப்பியம் (இலக்கணம்) கிமு 500 - கிமு 200 தொல்காப்பியர் எழுதியது.
தமிழ் சங்க கவிதைத் தொகுப்புகள் கிமு 300 - கிபி 300 புறநானூறு, அகநானூறு, முதலியன
ஆனால் கன்னட மொழியில் வந்த கவிராஜமார்க்கம் கிபி 850 - மன்னர் நிருபதுங்க எழுதியது.
தமிழ் இலக்கியம் 2,300 ஆண்டுகளுக்கும் மேலானது, அதே சமயம் கன்னடத்தின் ஆரம்பகால நிலையான இலக்கியப் படைப்பு கிபி 9 ஆம் நூற்றாண்டில்தான் தோன்றுகிறது. தொல்காப்பிய குறிப்புகள் இலக்கண விதிகளையும் கவிதை வடிவங்களையும் நிறுவின, இது ஏற்கனவே முதிர்ந்த மொழியியல் கலாச்சாரத்தைக் குறிக்கிறது. தொல்காப்பியம் மூலம்.. நம்மிடம் கன்னடத்திற்கு மட்டுமல்ல எல்லா மொழிகளுக்கும் முன்பே இலக்கியம் இருந்துள்ளது. அதை எப்படி எழுத வேண்டும் என்ற முறையான இலக்கணமும் இருந்துள்ளது என்பது உறுதியாகிறது.
3. தொல்பொருள் சான்றுகள்
இதெல்லாம் போக தோண்ட தோண்ட மண்ணுக்கு அடியிலேயிலே முன்தோன்றிய மூத்த மொழி தமிழின் ஆதாரங்கள் உள்ளன. தமிழ்நாடு ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிமு 500 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய தமிழ்-பிராமி மட்பாண்டத் துண்டுகள் மற்றும் கலசங்கள் கிடைத்தன.
கீழடி போன்ற தளங்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மட்பாண்டங்களில் மேம்பட்ட நகர்ப்புற குடியிருப்புகள் இருந்ததை உறுதி செய்துள்ளன. அங்கே எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் இருந்ததை என்று ASI அறிக்கைகள் உறுதி செய்கின்றன. மாறாக கன்னடத்திற்கு இப்படியான பழைய ஆதாரங்கள் இல்லை. இன்னும் சிறப்பான விஷயம் என்னவென்றால் கர்நாடகாவில் பல இடங்களில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளில் கூட தமிழே இடம் பிடித்துள்ளன.
4. யுனெஸ்கோ மற்றும் அரசு அங்கீகாரம்
2004 ஆம் ஆண்டு தமிழ் இந்தியாவின் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. கன்னடத்திற்கு 2008 ஆம் ஆண்டு அதே அந்தஸ்து வழங்கப்பட்டது, அதாவது பிற்கால இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையில். அதாவது தமிழுக்கு இருந்தது போல வளமான நீண்ட நெடிய இலக்கிய பார்மபரியம் கன்னடத்திடம் இல்லை. அப்படியே இருப்பதும் கூட சம்ஸ்கிருத கலவைதான். யுனெஸ்கோ 2000+ ஆண்டுகளாக தமிழின் தொடர்ச்சியை அங்கீகரித்துள்ளது. குறிப்பாக சங்க நூல்கள் மற்றும் கல்வெட்டு சான்றுகள் மூலம் இது உறுதியாகின்றன.
5. மொழி வளர்ந்த விதம்
தமிழ் தமிழ்-பிராமி → வட்டெழுத்து → நவீன தமிழ் பிராமி கிமு 600 முதல்
கன்னட கடம்ப எழுத்து → பழைய கன்னட எழுத்து தெற்கு பிராமி ~450 CE முதல் - அதாவது தமிழுக்கு பின் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் கழித்தே வந்துள்ளது கன்னட எழுத்துக்கள்.
6. மொழித் தூய்மை (குறைவான சமஸ்கிருத செல்வாக்கு)
தமிழ்: சங்க கால நூல்கள். 0-1% சமஸ்கிருத செல்வாக்கைக் காட்டுகின்றன. அதே நூல்களை சமஸ்கிருதம் இல்லாமலும் எழுத முடியும்.
கன்னடம்: கவிராஜமார்கம் போன்ற ஆரம்பகால இலக்கியங்களில் கூட, சமஸ்கிருத கடன் சொற்கள் கணிசமாக உள்ளன (ஆரம்பகால படைப்புகளில் 20-25% என மதிப்பிடப்பட்டுள்ளது). அவற்றில் சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டால் அப்படைப்புகளை மேற்கொள்ள முடியாது.
கன்னடத்துடன் ஒப்பிடும்போது தமிழ் மொழியியல் ரீதியாக மிகவும் சுதந்திரமாக இருந்தது என்பதை இது காட்டுகிறது.
அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழ் மொழி 2500 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படுகிறது. சில சில மாற்றங்களுடன் தமிழ் தொடர்ந்து நிலைத்து வருகிறது. கன்னடம் அப்படி இல்ல. மிக தாமதமாக தோன்றி.. சம்ஸ்கிருத கலப்புடன் பிழைத்திருக்கிறது. தமிழ் கன்னடத்தை விட மூத்த மொழி.. அது மட்டுமின்றி கன்னடத்தை விட அதிக இலக்கியம், இலக்கணம் கொண்ட மொழி, கலப்பு இல்லாத மொழி என்பதும் மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் தெரிகின்றது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications