தூள் தூளாகிறது.. "சென்னைக்கு உடனே வாங்க".. அண்ணாமலை கிளப்பிய திடீர் அதிரடி.. ஆரம்பமானது பாஜக கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை இன்று கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை.. இது அரசியல் களத்தின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. அதில், "பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. வட மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த இடங்கள் வராது என்ற ஒரு பிரச்சாரத்தை, நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ற பெயரி்ல் முன்னெடுத்துள்ளனர்.

Do you know why Tamil Nadu BJP Leader Annamalai is holding a meeting with executives today and what are the Reasons

"இந்தியா"கூட்டணி கட்சிகளைவிட அக்கூட்டணி வெற்றிக்கு நடுநிலையாளர்கள் போர்வையில் உலா வருபவர்கள் அதிகம் உழைக்கிறார்கள். பாஜகவுக்கு எதிராக நாள்தோறும் அவதூறுகளை, கட்டுக்கதைகளை பரப்பி வருகிறார்கள். மக்கள் சக்திக்கு முன்பு எந்த பொய்ப்பிரச்சாரமும் எடுபடாது.

பிரதமர் மோடி: மக்களின் பெரும் ஆதரவோடு எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை எல்லாம் தூள் தூளாக்கி பிரதமர் மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்றுள்ளதை போல, மக்களவை தேர்தலிலும் பிரதமர் மோடி தலைமையில் பாஜக 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது உறுதி" என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

அதாவது, லோக் சபா தேர்தலுக்கு முன்பிருந்தே, 400 + இடங்களை வென்றாக வேண்டும் என்று மேலிட பாஜக தலைவர்கள், அசைன்மென்ட்டை முன்னெடுத்திருந்தனர்.. அதனால்தான், இப்போதுவரை அண்ணாமலை முதல் வானதி வரை 400 இடங்களில் வெற்றி என்பதையே நம்பிக்கையுடன் கூறிவருகிறார்கள்.. இதே டார்கெட்டை முன்னெடுத்தே, சட்டசபை தேர்தலையும் சந்திக்க தமிழக பாஜக தயாராகி வருகிறதாம்.

அண்ணாமலை: இறுதியாக, 7-ம் கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பிறகுதான், ஜூன் 4-ம் தேதி ரிசல்ட் வருகிறது.. எனினும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும், சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை இப்போதே துவக்கிவிட்டார்.. 4 நாட்களுக்கு முன்புகூட, கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக்கூட்டத்தை நடத்திய அண்ணாமலை, சில அறிவுரைகளையும் அவர்களுக்கு தந்திருந்தாராம்.

தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளதால், அதற்கு தயாராக இருக்க வேண்டும். வட மாநிலங்களில் தேர்தல் பணிகள், வெற்றிக்கான வியூகம், களத்தில் பணியாற்றுவது உள்ளிட்டவைகளை அங்குள்ள பாஜகவினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு பலனளிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு கிடைத்த தகவல்களின்படி பூத் கமிட்டி நம்மிடம் பலவீனமாக இருப்பதால், அதனை வலிமைப்படுத்துங்கள்" என்றாராம் அண்ணாமலை.

பொறுப்பாளர்கள்: இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தமிழக பாஜக சார்பில், இன்றைய தினம், கட்சி நிர்வாகிகளின் கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.. முக்கியமாக, மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது..

சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகியிருக்கிறது.. இதில், பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பரபரப்பு: ஆனால், எதற்காக இந்த கூட்டம் என்று தெரியவில்லை என்றாலும், பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். அத்துடன், நிர்வாகிகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.. அந்தவகையில், இன்று நடந்துவரும் பாஜக கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+