விக்கல் வந்தாலும்.. பிறந்து 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
சென்னை: பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும்தான் தர வேண்டும் என்றும் தண்ணீரை கொடுக்கவே கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்களே அது ஏன் தெரியுமா?
தண்ணீர் என்பதற்கு சுவையோ நிறமோ இல்லை. ஆனால் இந்த தண்ணீரை அதிகமாக குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீரை கட்டாயம் பருக வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உடலில் நீர் சத்து குறையாமல் இருக்கவும் சில உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கவும் இந்த தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும் என்கிறார்கள். மேலும் இந்த தண்ணீரால் உடலின் உஷ்ணம் குறையும். இப்படி தண்ணீருக்கு நிறைய பயன்கள் இருக்க ஆனால் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தண்ணீரை கொடுக்கக் கூடாது என்கிறார்கள். இது ஏன் தெரியுமா?
தாய்ப்பால் அவசியம்: பொதுவாக குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். சிலர் ஒரு வயது, 2 வயது வரை கூட தாய்ப்பால் கொடுக்கிறார்கள். ஆனால் 6 மாதம் வரை தாய்ப்பாலை தவிர குழந்தைகளுக்கு வேறு எதையும் கொடுக்கக் கூடாது மருத்துவர்கள் என்கிறார்கள். தாய்ப்பால் சுத்தமானது, அதோடு அந்த தாய்ப்பால் குழந்தைக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையை கூட்டுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: எலும்புகளை வலுப்படுத்துகிறது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தாய்ப்பால் அதிகரிக்கிறது. பால் சுரக்காதவர்களுக்கு வேண்டுமானால் பசும் பாலோ ஊட்டச்சத்து பானங்களையோ மருத்துவர்கள் பரிந்துரைப்பர். குழந்தைகளுக்கு உணவு என்பது தாய் உண்ணும் உணவிலிருந்து பாலாக செல்கிறது. அதற்குதான் தாய்மார்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
தாய்ப்பால் போதும்: குழந்தைகளுக்கு உணவு தாய்ப்பால் என்றால் அதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டாமா என்ற சந்தேகம் எழும், அது போல் விக்கல் எடுக்கும் நேரங்களில் நாம் தண்ணீர் கொடுப்பதை போல் குழந்தைகளுக்கும் தண்ணீர் கொடுக்கலாமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பாலே போதுமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிறுநீரகங்கள்: பிறந்தது முதல் சில மாதங்கள் வரை பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் தண்ணீரை ஜீரணிக்க செய்ய தயாராக இருக்காது என்பதால்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் தருவதில்லை. அவர்களுக்கு சிறுநீரகங்கள் வளர்ச்சியடையாமல் இருக்கும். எனவே தண்ணீர் கொடுத்தால் ஊட்டச்சத்து இழப்பு ஏற்பட்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். பெரியவர்களை போல் குழந்தைகளின் சிறுநீரகங்கள் தண்ணீரை பிரித்தெடுக்கும் திறன் இல்லை. பிறந்த குழந்தையின் வயிற்றில் 5 முதல் 10 மில்லி வரை மட்டுமே பானங்கள் அருந்துவதற்கு இடமிருக்கும்.
விக்கல் வந்தாலும்: எனவே குழந்தைகளுக்கு தண்ணீரை கொடுத்து அதன் வயிற்றை நிரப்புவது தேவையில்லாதது. தண்ணீரில் எந்த சத்துகளும் இல்லை. மேலும் குழந்தைகளின் வளர்ச்சியையும் இது பாதிக்கும். குழந்தைகள் 6 மாதம் ஆன பிறகு அவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதாது. அதனால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கூடுதல் உணவுகளை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது தினமும் அரை கப் தண்ணீரை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கவே கூடாது. விக்கல் எடுத்தாலும் தாய்ப்பாலையே கொடுக்கலாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications