கோயம்பேட்டில் பாஷ்யம் நினைவிருக்கா? அமித்ஷா வீட்டில், எடப்பாடி கிட்ட யாரந்த விஐபி? சென்னை புள்ளியா?
சென்னை: தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது.. இதையடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. எனினும் சில சலசலப்புகள் கூட்டணிக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றன.. இதில் அமித்ஷாவை சென்று எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருந்தது மிகப்பெரிய அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டது.. தற்போதுகூட அந்த சந்திப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடித்து வருகிறது.
இந்த கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மறுபடியும் சேர்க்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதற்கு வழக்கம்போல், எடப்பாடி பழனிசாமியும் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்டு, தொடர்ந்து பாஜக புறக்கணித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி. தினகரன் அதிரடியாக அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக மேலிடம், பிரிந்து சென்றவர்களை கூட்டணிக்குள் மீண்டும் இணைக்க முயற்சித்து வருகிறது.
அதிமுக-பாஜக சலசலப்பு
இதே கோரிக்கையை வலியுறுத்தி போர்க்கொடி தூக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதவி பறிக்கப்பட்டது.. இதையடுத்து, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி, எடப்பாடி மீது புகார்களை அடுக்கியதுடன், அதிமுகவை ஒன்றிணைக்க கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, எடப்பாடியும் கடந்த 16ம் தேதி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்... அப்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் இல்லாததால், 45 தொகுதிகளை நாம் இழக்க நேரிட்டது, எனவே அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அமித்ஷா சொன்னதற்கு, அவர்களை மறுபடியும் சேர்த்தால் கட்சிக்குள் தேவையில்லாத குழப்பம் தான் வரும், என்னையே கவிழ்க்க பார்ப்பார்கள் என்று சொல்லி, அமித்ஷா கோரிக்கைக்கு எடப்பாடி மறுத்து விட்டாராம்.
எடப்பாடி பழனிசாமியின் 20 நிமிடம்
இதற்கு பிறகு முகத்தை கர்சீப்பால் மூடிக்கொண்டு எடப்பாடி காரிலிருந்து கிளம்ப, அப்போதிருந்தே அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு குறித்த பரபரப்பு அடங்கவில்லை.. மாஜி அமைச்சர், எம்பிக்கள் உட்பட எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் 1 மணி நேரம் சந்திப்பை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக அமித்ஷாவிடம் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஒரு முக்கிய புள்ளி இருந்துள்ளார்.. அவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.. பாஷ்யம் கட்டுமான நிறுவன தலைவர் அபினேஷ் என்பவர்தான், அந்த முக்கிய புள்ளியாம்.
அமித்ஷா வீட்டில் அபினேஷ்
கடலூரை சேர்ந்த அபினேஷ், முன்னாள் அமைச்சர் எம்.பி.சம்பத்தின் நெருங்கிய உறவினர்.. அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், ஆகியோருக்கு நெருங்கிய நட்பில் உள்ளவர்.. எப்போதுமே அமித்ஷாவின் வீட்டில்தான் இருப்பாராம். அதனால்தான் எடப்பாடி சென்றபோதும், அமித்ஷா வீட்டில் அபினேஷ் இருந்துள்ளார்.. கடந்த முறை அமித்ஷா வீட்டிற்கு சென்றபோதும் அபினேஷ் அங்குதான் இருந்தாராம்.
அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி தமிழில் பேசியதை இந்தியில் மொழி பெயர்த்து அமித்ஷாவிடமும், அமிஷ்தா இந்தியில் சொன்னதை தமிழில் எடப்பாடியிடமும் மொழிபெயர்த்து சொன்னது அபினேஷ்தானாம்.. தொழிலதிபர் அபினேஷ் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர், அதேபோல அமித்ஷாவுக்கும் மிகவும் பரிச்சயமானவர்.. அதனால்தான், இவரை மொழிபெயர்ப்பாளராக வைத்து சந்திப்பை முடித்தாராம் எடப்பாடி பழனிசாமி.
பாஷ்யம் - மெட்ரோ பெயர் நினைவிருக்கா?
கடந்த அதிமுக ஆட்சியின்போது, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் மேம்பாலங்களில் 'பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ'என பெயர் மாற்றப்பட்டு இரவோடு இரவாக எழுதப்பட்டிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.. எதிர்க்கட்சிகள் இதற்கு போர்க்கொடி உயர்த்தின..
மேலும், அரசின் விதிமுறைகளுக்கு முரணாக அவசர அவசரமாக அரசு நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்துக்கு தாரை வார்த்துள்ளதாக புகாரும் எழுந்தது.
இதற்கு பிறகுதான், கோயம்பேடு மெட்ரோ மீண்டும் புணரமைக்கப்பட்டபோது, " பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ " என்ற பெயர் பலகை நீக்கம் செய்யப்பட்டு, கோயம்பேடு மெட்ரோ என்று மீண்டும் பெயர் பலகை மாற்றப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications