Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக அப்சரா ஞாபகமிருக்கா.. 10 வீடியோ? பிரபல தமிழ் யூடிபர் யாருனு பாருங்க.. சென்னை ஹைகோர்ட் விடலயே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் அப்சரா ரெட்டிக்கு, ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

யார் இந்த அப்சரா? சென்னையை சேர்ந்த திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், பிரபலமான மாடலாகவும் உள்ளார்.

Do you remember who is ADMK Apsara Reddy and Chennai HC orders youtuber to pay rs50 lakh compensation to her

ஆரம்பத்தில், டிவி நிகழ்ச்சி ஏற்கனவே ஒரு தொலைக்காட்சியில் அப்சரா நிகழ்ச்சியை நடத்தி வந்தாலும், ஜெயா டிவியின் டாக்-ஷோதான் பெருமளவு பேசப்பட்டது. அதுபோலவே, அப்சரா ரெட்டிக்கு ஜெயலலிதா மீது தனி ஈர்ப்பும், மரியாதையும் இருந்தது.

தினகரன்: அதனால்தான் ஜெயலலிதா முன்னணியில் கட்சியிலும் தன்னை இணைத்து கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அவர், தினகரன் அணியில் இருந்தார். அதாவது சசிகலா குடும்பத்துடன், இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணபிரியாவின் நெருக்கமான தோழி என்று கருதப்பட்டார்.

தினகரனுடன் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையல், காங்கிரசுக்கு சென்றார்.. மகளிர் அணியான மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் என்ற மிக முக்கிய பொறுப்பை அப்சராவுக்கு ராகுல் காந்தி தந்திருந்தது உண்மையிலேயே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.

காங்கிரஸ்: லண்டனில் படித்திருந்த அப்சரா, கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார். பிறகு அதே ஆண்டு அதிமுக சென்றார்.. அதன்பிறகு அமமுக சென்றார்.. அதன்பிறகு காங்கிரஸ் சென்றார்.. மறுபடியும் அதிமுகவுக்கு வந்துவிட்டார். தற்சமயம், அதிமுக செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த பிரபல மாடலிங் நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், அப்சராவை அவதூறாக பேசி 10-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்சரா ரெட்டி, பிரவீன் மீது மான நஷ்ட வழக்கினை தொடர்ந்தார்.

தன்னை பற்றி வதந்திகளை பரப்பி கொண்டிருக்கும் ஜோ மைக்கேல் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், தன்னை பற்றி வெளியிடப்பட்ட 10 வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். காரணம், யூடியூபர் வெளியிட்ட அவதூறு கருத்துகளால், அப்ராவின் நிறைய நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டதாம்.. இதையும், தன்னுடைய புகாரில் அப்சா தெரிவித்திருந்தார்..

கட்டுப்பாடுகள்: இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி, அப்சராவுக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டுள்ளதுடன், யூடியூபில் கருத்துகளை வெளியிடும் உரிமை நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

Do you remember who is ADMK Apsara Reddy and Chennai HC orders youtuber to pay rs50 lakh compensation to her

இதனிடையே, அப்சரா ரெட்டிக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் ஏற்கனவே நீக்கியதால், நஷ்ட ஈடு வழங்குவதில் இருந்து தப்பியுள்ளது.

என்ன நடந்தது: கடந்த 2019-ல், யூடியூபர் ஜோ மைக்கேல் நடத்தி வரும் மாடல் இதழியலில், தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு அப்சரவை அணுகியதாகவும், அப்சரா இதற்கு மறுத்ததாகவும் தெரிகிறது.. அதனால்தான், ஜோ மைக்கேல் அப்சராவை தாக்கி பேசி வந்ததாக, அப்சரா தரப்பில் சொல்லப்படுகிறது. அப்போதே போலீஸில் இதுகுறித்து அப்சரா புகார் அளித்திருந்த நிலையில், அந்த புகாரின் அடிப்படையில், ஜோ மைக்கேல் பிரவீனை போலீசாரும் அப்போது கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+