கட்டிடங்களின் மேற்கூரையில் ‘சோலார்’ அமைக்க ஆசையா? தமிழ்நாடு மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு
சென்னை: 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு "சாத்தியக்கூறு ஒப்புதல்" பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளை (சோலார் பேனல்) அமைக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த திங்கள் கிழமை அன்று 'பிரதமரின் சூர்யோதயா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போதைய நிலையில் சோலார் மூலம் மின்சாரம் பெறும் திட்டம் மின்சாரம் விநியோகிக்க முடியாத மலைப்பகுதிகளில் அதிக அளவில் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் விரைவில் சோலார் பேனல்கள் பொறுத்தி, அவர்களின் மின்சாரத்தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் நிலை உருவாக்கலாம். ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும் என்று தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதன் காரணமாகவே ஏராளமான மின்சக்தி நிறுவனங்கள், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின்சார வாகனங்களின் பேட்டரிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு "சாத்தியக்கூறு ஒப்புதல்" பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சார துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தியை (சோலார்) மேம்படுத்த அனைத்து நடவடிக்கைளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் சூரிய மின் உற்பத்தியின் நிறுவப்பட்ட திறன் 7 ஆயிரத்து 372 மெகாவாட்டாக உள்ளது. இவற்றில் 526 மெகாவாட் கட்டிட மேல் கூரையில் பொருத்தப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களாக அமைக்கப்பட்டு உள்ளது.
நமது மாநிலத்தில் கட்டிட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தாழ்வழுத்த மின் இணைப்புகளில் மேல்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக செயலாக்கப்படுகின்றன.
இந்த செயல் முறையை மேலும் விரைவுபடுத்த, 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு ''சாத்தியக்கூறு ஒப்புதல்'' பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தங்கள் மின் இணைப்பு உள்ள கட்டிடங்களின் மேல் கூரையில் சூரிய மின் நிலையங்கள் நிறுவ விரும்பும் நுகர்வோர் விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்து இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை: 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு "சாத்தியக்கூறு ஒப்புதல்" பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளை (சோலார் பேனல்) அமைக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த திங்கள் கிழமை அன்று 'பிரதமரின் சூர்யோதயா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போதைய நிலையில் சோலார் மூலம் மின்சாரம் பெறும் திட்டம் மின்சாரம் விநியோகிக்க முடியாத மலைப்பகுதிகளில் அதிக அளவில் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் விரைவில் சோலார் பேன்கள் பொறுத்தி, அவர்களின் மின்சாரத்தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் நிலை உருவாகலாம். ஆனால் அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும் என்று தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் சோலார் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதன் காரணமாகவே ஏராளமான மின்சக்தி நிறுவனங்கள், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின்சார வாகனங்களின் பேட்டரிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு "சாத்தியக்கூறு ஒப்புதல்" பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சார துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரிய மின் உற்பத்தியை (சோலார்) மேம்படுத்த அனைத்து நடவடிக்கைளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது, தமிழ்நாட்டில் சூரிய மின் உற்பத்தியின் நிறுவப்பட்ட திறன் 7 ஆயிரத்து 372 மெகாவாட்டாக உள்ளது. இவற்றில் 526 மெகாவாட் கட்டிட மேல் கூரையில் பொருத்தப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களாக அமைக்கப்பட்டு உள்ளது.
நமது மாநிலத்தில் கட்டிட மேல் கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்து சூரிய மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தாழ்வழுத்த மின் இணைப்புகளில் மேல்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக செயலாக்கப்படுகின்றன.
இந்த செயல் முறையை மேலும் விரைவுபடுத்த, 3 கிலோ வாட் வரையிலான சூரிய மின் சக்தி திறன் அல்லது மின் இணைப்பில் அனுமதிக்கப்பட்ட மின் திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு ''சாத்தியக்கூறு ஒப்புதல்'' பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தங்கள் மின் இணைப்பு உள்ள கட்டிடங்களின் மேல் கூரையில் சூரிய மின் நிலையங்கள் நிறுவ விரும்பும் நுகர்வோர் விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்து இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Click it and Unblock the Notifications