சுதந்திர போராட்ட பெருமை தெரியாத ஆளுநர்.. சங்கரய்யாவுக்கு தடைபட்ட டாக்டர் பட்டம்! திருமாவளவன் ஆதங்கம்
சென்னை: மக்களுக்காகப் போராடிய மாபெரும் ஆளுமை தோழர் என்.சங்கரய்யா நினைவாக மணிமண்டபம் அமைத்திடவும் வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைவெய்தியது தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம். பகத்சிங் தூக்கில் இடப்பட்ட செய்தியை அறிந்து தமிழ்நாட்டில் வெடித்த போராட்டங்களில் தனது ஒன்பதாவது வயதிலேயே பங்கேற்றவர் தோழர் சங்கரய்யா அவர்கள். கல்லூரி மாணவராக இருந்தபோது அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

அதனால் அவரது பட்டப்படிப்பு முழுமை பெறாமல் நின்று போனது. பல மாதங்கள் சிறையிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி தனது போராட்ட வாழ்வில் சுமார் 9 ஆண்டு காலம் அவர் சிறையில் கழித்திருக்கிறார். பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட நேரத்தில் அதை நிறுவிய தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டவர். மக்கள் போராட்டங்களில் என்றைக்கும் முன்னணியில் நின்றவர். எளிய வாழ்க்கை, சமரசமற்ற கொள்கைப் பற்று, அடக்குமுறைக்கு அஞ்சாத போர்க்குணம் ஆகியவற்றுக்கு சான்றாகத் திகழ்ந்தவர். காமராஜர், அண்ணா, எம் ஜி ஆர், கலைஞர் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு மூத்த தலைவர்களோடு அரசியல் பணியாற்றியவர். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து அவர்களது கோரிக்கைகளுக்காகப் பாடுபட்டவர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றிப் போராடியவர்.
தோழர் சங்கரய்யாவின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தோழர் சங்கரய்யா அவர்களுக்குத் 'தகைசால் தமிழர்' என்கிற விருதினை அளித்துப் பெருமைப்படுத்தினார். அவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க எடுக்கப்பட்ட முயற்சி சுதந்திரப் போராட்டத்தின் பெருமை அறியாத ஆளுநரால் தடைபட்டுப் போனது. தோழர் என்.சங்கரய்யா அவர்களை அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது நினைவாக சென்னையில் மணிமண்டபம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்
மறைந்த தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கதைச் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
என்னை அவர் அடித்ததில் மகிழ்ச்சி! திருமாவளவன் அறைந்தது குறித்து இளைஞர் விளக்கம் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications