கையில் "ஆதாரம்" சிக்கியது.. நேரா லஞ்ச ஒழிப்பு துறைக்கே கிளம்பிட்டாரு "தலைவர்".. கலக்கத்தில் அதிமுக
சென்னை: அதிமுகவுக்கு அடுத்த தலைவலி கிளம்பி உள்ளது.. மாஜி அமைச்சர் குறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு உள்ளது.. கடந்த வருடம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனையை நடத்தினர்..

அதாவது, ஒரே நேரத்தில் 49 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 963 சவரன் தங்கம், கிலோ கணக்கில் வெள்ளிப் பொருட்கள், ரூ.41 லட்சம் கணக்கில் வராத பணத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். அப்போது, அதிமுகவின் மூத்த தலைவர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.
காமராஜ்: அதில், "2017ம் ஆண்டே புகார் தந்துவிட்டேன்.. ரொம்ப நாளாக இந்த வழக்கு பெண்டிங்கில் இருந்தது.. திமுக ஆட்சி வந்த பிறகும் நடவடிக்கை இல்லை. அதனால் நான்தான் லெட்டர் எழுதினேன். ஊழல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் காமராஜர், அண்ணா, ஜெயலலிதா போன்றவர்கள்... ஆனால், காமராஜர் பெயரை வைத்துக்கொண்டு என்ன கொடுமை இது? காமராஜ் என்று இவர் பெயர் வைத்திருக்கிறார். அந்த பெயரை மாற்றிக் கொண்டால் எனக்கு சந்தோஷமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இதே வழக்கு தற்போது துரிதமாகி உள்ளது.. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகியிருக்கிறார்.
புகழேந்தி: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் குற்றச்சாட்டை புகழேந்தி சுமத்தியிருந்த நிலையில், இது குறித்த புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினரை தனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் புகழேந்தி.
அந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், புகழேந்தியின் புகார் மீது கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான், காமராஜுக்கு எதிரான ஊழல் வழக்கு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க, புகழேந்தியிடம் சம்மந்தப்பட்ட புகார் தொடர்பாக விசாரிக்க முடிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. அதற்காக நேரில் ஆஜராக அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
எகிறும் எதிர்பார்ப்பு: அந்த கடித உத்தரவின் படி ஆஜராகியிருக்கிறார் புகழேந்தி. தம்மிடம் விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம், காமராஜுக்கு எதிரான தனது ஊழல் புகார் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களுடன் ஆஜராகியுள்ளாராம் புகழேந்தி.
ஏற்கனவே பல வழக்குகள் பரபரப்பை தந்துவரும்நிலையில், இந்த வழக்கும் அதிமுகவுக்கு தலைவலியை தந்து வருகிறது. இதன் வழக்கின் உத்தரவுகள் பாதகமாக இருந்தால், அது அதிமுகவுக்கு மேலும் சிக்கலை தந்துவிடும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications