யாரு.. அண்ணாமலையை நம்பியா? அதிமுக மாஜியின் சிரிப்பு.. அட.. கூட்டணியில் இருப்பதே இதுக்காக தானாம்!
சென்னை : அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக, தேமுதிக, தமாகா மற்றும் உதிரி கட்சிகளைச் சேர்த்து ஒரு அணியை கட்டமைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, "அண்ணாமலையை நம்பியா அவர்கள் வந்து சேருவார்கள்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக 2019 முதல் தொடர்ச்சியாக தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வரும் சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அண்ணாமலையின் கணக்குகளும், பேச்சுகளும் மாறியுள்ளன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், மாநில தலைவர் பதவியை விட்டே விலகுவேன் என்றும் கூறி பரபரக்க வைத்தார் அண்ணாமலை.

அதை தேசிய தலைமை சால்வ் செய்தாலும், இப்போதும் கூட அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையிலேயே பேசி வருகிறார். அமித் ஷா அதிமுக கூட்டணி உறுதி சென்று சொல்லவில்லை எனத் தெரிவித்து வருகிறார். இதனால், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை விட்டுவிட்டு ஒரு கூட்டணியை கட்டமைக்க விரும்புவது உண்மைதானோ என்ற யூகம் எழுந்துள்ளது.
அண்ணாமலையை நம்பியா? : இந்நிலையில், நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுகவின் செம்மலை, "யார்.. அண்ணாமலையை நம்பியா? இவரா இப்படி ஒரு கூட்டணியை உருவாக்கப் போகிறார்? ஒருவேளை தேசிய தலைமை இப்படி ஒரு கூட்டணி அமைவதை விரும்பினால் அப்படியே செய்து கொள்ளட்டும். அதிமுகவுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். நாங்கள் தேசியக் கட்சியோடு ஏன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்றால், வரும் 2024 தேர்தல், பிரதமருக்கான தேர்தல்.
அந்த தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றால், எங்களுக்கும் ஒரு தேசியக் கட்சியுடன் தோழமை இருக்க வேண்டும். எங்களுக்கு அரசியல் எதிரி திமுக. திமுக காங்கிரஸ் எனும் தேசியக் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறது. திமுகவை எதிர்ப்பதற்காக மற்றொரு பலமான தேசியக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
பாஜகவுடன் கூட்டணி ஏன்? : பிரதமர் மோடியுடன் ஏன் நாங்கள் நன்றி பாராட்டுகிறோம் என்றால், முல்லை பெரியாறு அணையை 152 அடியாக அதிகர்ப்படுத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி, நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த ஒரே வாரத்தில் பிரதமர் மோடி மத்திய அரசிதழில் ஏற்றினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது, பிரச்சார மேடையில் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது, அதே மேடையில், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவித்து ஒரே வாரத்தில் உத்தரவு போட்டா. டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை கேட்டபோது அதையும் கொடுத்தார் பிரதமர் மோடி. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்தார். நான்கரை ஆண்டு காலம் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்.
அதிமுகவில் இருந்த குழப்பமான சூழல் இடைவெளிக்கு மத்தியில் அண்ணாமலை தன்னை பிரபலமான தலைவராகக் காட்டிக்கொண்டார். இனி அதுபோன்ற ஒரு சூழ்நிலை நிச்சயமாக வராது. பாஜக தொண்டர்களை திருப்தி படுத்துவதற்காக தனது விருப்பத்தை சொல்லிக் கொண்டிருக்கலாமே தவிர தேசிய தலைமையுடன் தான் எங்கள் அதிமுக தலைமை பேசும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications