சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ.. ஸ்ட்ரெயிட்டா ஓபிஎஸ்.. பாக்யராஜ் ஏன் எடப்பாடி கிட்ட போகல..இதான் காரணமா.. இப்படி ஒரு மேட்டர் ஓடுது

பாக்யராஜ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தர காரணம் என்ன

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவே ஒன்றாக இணைய முடியாமல், இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், அந்த அதிமுகவில் இணைந்துள்ளார் பாக்யராஜ்... ஆமா.. எடப்பாடியை சந்திக்காமல் பாக்யராஜ், ஓபிஎஸ் சந்தித்து ஆதரவு தர காரணம் என்ன?

அதிமுக விவகாரம் 3 மாத காலமாக நடந்து, இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.. இருவரில் ஒருவர்கூட, விட்டுத்தருவது போலவும் தெரியவில்லை.
அரசியல் கட்சியின் உட்பிரச்சனைகளை, ஒரு நீதிமன்றம் தீர்த்து வைப்பது என்பது அந்த அளவுக்கு சுலபமில்லை.. அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கான தீர்வை, அரசியல் கட்சிக்குள்ளேதான் தேட முடியும் என்பதை நம்மால் மறுக்க முடியாது.

இன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதிஇன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

 ஏடாகூடம்

ஏடாகூடம்

எனினும் அப்பீலுக்கு சென்றுள்ளதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.. பொதுக்குழுவில், அவசரப்பட்டு ஏடாகூடமான தீர்மானங்களை நிறைவேற்றி, எக்கச்சக்கமான சட்ட சிக்கலில் எடப்பாடி மாட்டிக் கொண்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே அவர் பதற்றத்துடன் இருப்பதாகவும் தெரிகிறது.. நீதிமன்ற உத்தரவுகளில் அடுத்தடுத்த பின்னடைவுகள், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் தரப்பில் விரிக்கப்படும் வலை, பாஜகவின் பாராமுகம், போதாக்குறைக்கு, ஊழல் வழக்குகள், கொடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை அறிக்கை என இக்கட்டுகள் ஏற்பட்டுள்ளன..

பாக்யராஜ்

பாக்யராஜ்

இதற்கு நடுவில், ஆறுக்குட்டி பறந்து போய் திமுகவுக்கு ஆதரவு தந்தது.. பாக்யராஜ் பாய்ந்து போய் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்தது என எடப்பாடிக்கு மேலும் கடுப்பை தந்து வருகிறது.. இதில் பாக்யராஜ் விவகாரம் சற்று குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. அதிமுகவே இப்போது இரண்டாக திண்டாடி கொண்டிருக்கும்போது, இந்த நெருக்கடியான நேரத்தில் வந்து சேர்ந்துள்ளார் பாக்யராஜ்.. இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்ற வியூகங்களும், விவாதங்களும் கிளம்பி விட்டன.

"குறைபிரசவம்"

இத்தனை காலமாக, அரசியலில் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, திடீரென ஒருநாள், பிரதமர் மோடி குறித்து பாக்யராஜ் ஒரு கருத்தை ஆதரவாக சொல்லி, அந்த "குறைபிரசவ" விமர்சனத்தில் வசமாக சிக்கி கொண்டார்.. அவரால் அந்த விமர்சனங்களை ஒருநாள்கூட பொறுக்கவில்லை.. சோஷியல் மீடியாவில் வெடித்த வசவுகளை, காதுகொடுத்து கேட்க முடியவில்லை.. மறுநாளே கருத்தில் பின்வாங்கி, மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிட்டார்.. ஆனால், அந்த சமயத்தில், ஓபிஎஸ் பாக்யராஜிடம் பேசி, ஆதரவு கேட்டதாகவும், இதையடுத்தே நேற்றைய தினம், பாக்யராஜ் ஓபிஎஸ்ஸுக்கு தன் முடிவை தெரிவித்ததாகவும் சொல்கிறார்கள்.

 யூகம் + 1

யூகம் + 1

இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. பாக்கியராஜ் பாஜக ஆதரவாளர்... அதனால்தான், அவரையும் மீறி, திராவிட அரசியலில் இத்தனை காலம் பயணித்து வந்துள்ளோம் என்பதையும் மறந்து, பிரதமர் மோடியை புகழ்ந்து ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்... இப்போது, அதிமுகவில் ஓபிஎஸ் கை ஓங்கி வருகிறது. பாஜக மேலிடமும் அதாவது டெல்லி மேலிடம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அண்ணாமலை மட்டும்தான் எடப்பாடி ஆதரவாக இருந்து வருகிறார். இதன் காரணமாக பாஜக மேலிடத்தின் உத்தரவு அல்லது மறைமுக தூண்டுதலின் பேரில் ஓபிஸ் பக்கம் பாக்கியராஜ் திரும்பியிருக்க வாய்ப்புண்டு.

 யூகம் + 2

யூகம் + 2

இன்னொன்றும் சொல்கிறார்கள்.. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட பாக்யராஜை எடப்பாடி தரப்பு மரியாதை கொடுத்து பழகியதாக தெரியவில்லை... எடப்பாடியோ, வேலுமணியோ யாரும் பாக்யராஜை ஒரு பொருட்டாக கூட கருதுவதாக தெரியவில்லை.. அண்ணாமலையும் கூட கண்டு கொண்டது போல தெரியவில்லை. அதை விட முக்கியமாக மோடியை புகழ்ந்து பேசி, பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட விவகாரத்திலும் கூட அண்ணாமலையோ, அதிமுக தலைவர்களோ பாக்யராஜுக்கு சப்போர்ட்டாக பேசியதாக தெரியவில்லை... இதனாலும் கூட அவர் அப்செட்டாகி ஓபிஎஸ் பக்கம் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

 யூகம் + 3

யூகம் + 3

இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. ஓபிஎஸ் பொதுவாகவே, யாரையும் மரியாதையுடன் அணுகக் கூடியவர்.. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்பதாலும், எடப்பாடியாருக்கு அப்படியே நேர்மாறான இமேஜ் இருப்தாலும் கூட பாக்யராஜ் ஓபிஎஸ்ஸை தேர்வு செய்திருக்கலாம். ஓபிஎஸ்ஸின் பணிவும், கனிவும், பாசமும்தான் பாக்யராஜை அவர் பக்கம் ஈர்த்திருக்கலாம். கட்சிக்குள் போதுமான ஆதரவு எடப்பாடிக்கே இருக்கும்நிலையில், இந்த சமயத்தில் ஓபிஎஸ் பக்கம் நிற்கலாம் என்றுகூட பாக்யராஜ் யோசித்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்..

 யூகம் + 4

யூகம் + 4

இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. தென்மண்டலத்தில் பெருத்த செல்வாக்குடன் வலம் வரும் ஓபிஎஸ்ஸால், கொங்குவில் அப்படியான ஆதரவை பெற முடியவில்லை.. பாக்யராஜ் போல ஒரு கொங்கு பிரபலம், தன்னுடன் இருக்கும்போது, தன் தரப்பு நியாயங்களை கொங்கு மண்டலத்தில், பிரச்சாரம் செய்யவும், பாக்யராஜை களமிறக்கலாம், அதனாலும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்கிறார்கள்..

 யூகம் + 5

யூகம் + 5

இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. அடிப்படையிலேயே அதிமுக மீது பாக்யராஜுக்கு இணைபிரியாத பிரியம் இருப்பதால், கட்சி இன்றைக்கு இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டதே என்ற கவலையும், ரத்தத்தின் ரத்தங்கள் போல அவருக்கும் உண்டாகி இருக்கலாம்.. அந்தவகையில், எடப்பாடி, ஓபிஎஸ் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியிலும் கூட ரகசியமாக இவர் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பும் உண்டு என்கிறார்கள்..

சப்போர்ட்

சப்போர்ட்

இப்படி ஏகப்பட்ட யூகங்கள் வலம் வருகிறது என்றாலும், எம்ஜிஆரின் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர் பாக்யராஜ்... எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, ஜானகி அணியை ஆதரித்தார்.. ஆனால் அதில் தொடரவில்லை.. பிறகு தனிக்கட்சி தொடங்கிப் பார்த்தார்.. அதையும் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.. பிறகு திமுகவில் இணைந்தார்.. அங்கேயும் நீடிக்கவில்லை.. பிறகு, திடீரென மோடிக்கு சப்போர்ட் செய்தார்.. அதிலும் ஒரே நாளில் முடிவை மாற்றிக் கொண்டார்.. கடந்த ஒரு வருடமாக அதிமுக தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், இப்போது ஓபிஎஸ் பக்கம் வந்துசேர்ந்துள்ளார்..

அதிமுக + திமுக + பாஜக

அதிமுக + திமுக + பாஜக

அதிமுக + திமுக + பாஜக = என இத்தனை கலர்கள் பாக்யராஜ் அரசியலில் பதிந்துள்ள நிலையில், எடப்பாடி, ஓபிஎஸ் பஞ்சாயத்தை இவர் எப்படி தீர்த்து வைக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன.. அப்படி ஒரு இனிய சம்பவம் நடந்தால், அது அதிமுகவை ஆழமாக நேசித்து கொண்டிருக்கும், கடைகோடி தொண்டர்களுக்கு நெஞ்சில் பால் வார்த்தது போல் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.. பார்ப்போம்..!

English summary
Does Bhagyaraj fix AIADMK internal conflict and why did he support OPS Team பாக்யராஜ் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தர காரணம் என்ன
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X