கண்டிஷன் போட்டு சாதித்த எடப்பாடி? சைலெண்டாக காய் நகர்த்திய அமித்ஷா! ஒரே நாளில் மாறிய அரசியல் களம்
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது அதிமுக பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளது. அண்ணாமலை மாற்றப்படும் வரை காத்திருந்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவின் அழுத்தத்திற்கு பாஜக அடிபணிந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறும் நிலையில், மற்றொரு தரப்பினர் இது அமித்ஷாவின் பக்காவாக தேர்தல் வியூகம் என்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆனால், இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளும் காய் நகர்த்தல்களும் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக அதிமுக- பாஜக கூட்டணி இப்போது உறுதியாகியுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரை கடந்த 2021 சட்டசபை தேர்தலை இரு தரப்பும் ஒன்றாகவே எதிர்கொண்டன. இருப்பினும், அதன் பிறகு இரு தரப்பிற்கும் இடையே வரிசையாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பாஜக கூட்டணி முறிந்து போனது.
அதிமுக பாஜக கூட்டணி
இடையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என தகவல் வந்தபோது எல்லாம் அதிமுக தலைவர்கள் அதை கடுமையாக மறுத்தனர். இனிமேல் பாஜக உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற அளவுக்கும் கூட அதிமுக தலைவர்கள் பேசினர். எடப்பாடி பழனிசாமியும் கூட முதலில் அந்த டோனை தான் எடுத்தார். இருப்பினும், கடந்த சில வாரங்களாக அவரது நிலைப்பாட்டில் மாற்றம் தெரிந்தது.
திமுகவை வீழ்த்த எந்தக் கட்சி உடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வேறு கூட்டணி வேறு என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் அமைந்தது. அப்போது அவர் திடீரென அமித் ஷாவை சந்தித்து பேசினார். இருப்பினும், அப்போது கூட்டணி குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அழுத்தம் கொடுத்த எடப்பாடி
இந்தச் சூழலில் தான் சென்னை வந்திருந்த அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது. இருப்பினும், இந்த விஷயத்தில் நாம் இரு விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும். அதாவது அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் தொடர போவதில்லை என்பது உறுதியான பிறகே எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்க புறப்பட்டார். இதன் காரணமாகவே அமித் ஷா பிரஸ் மீட் என்பது மதியம் 12 மணி என சொல்லி பிறகு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகே எடப்பாடி பழனிசாமி கிளம்பினார்.
அண்ணாமலை
அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் பல சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அவரது பங்கு முக்கியமானது. அதேநேரம் பாஜகவை தாண்டி அண்ணாமலைக்கும் மாநிலத்தில் கணிசமான ஆதரவு இருந்தது. இதன் காரணமாகவே இன்று கமலாலாயத்தில் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் தொடர வேண்டும் என கோஷமிட்டனர். ஆனாலும், தமிழகத்தில் கூட்டணி முக்கியம் என்பதால் அண்ணாமலை தலைவர் பதவியில் மாற்றப்படுகிறார்.
அதேநேரம் தேசிய தலைமையின் ஆதரவு அண்ணாமலைக்கு தொடர்ந்து இருக்கிறது. பிரஸ் மீட்டில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதும், இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் தற்போதும் அண்ணாமலையே பாஜகவின் மாநில தலைவராக இருப்பதாக அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். மேலும், அண்ணாமலையை தேசிய பணிக்காக அழைப்பதாகவும் கூட அமித் ஷா கூறியிருந்தார். இதன் மூலம் பாஜகவின் தேசிய தலைமையின் ஆதரவு அண்ணாமலைக்கு இன்னும் இருப்பது தெளிவாக தெரிகிறது.
இதனால் அதிமுக வியூகம்
பாஜகவின் ஆதரவை அதிகரித்து வைத்திருந்த அண்ணாமலையை மாற்றத்தின் பின்னணியில் பாஜகவின் வியூகம் உள்ளதா, அல்லது பணிந்துவிட்டதா என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. இப்போதைக்கு கூட்டணி இணைந்து செயல்பட அண்ணாமலை மாற்றம் அவசியம் என்ற போதிலும் அமித் ஷாவுக்கே எடப்பாடி கண்டிஷன் போட்டு சாதித்துள்ளதை பாஜக மனதில் வைத்திருந்து தேவைப்படும்போது பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சும் இருக்கிறது.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக்












Click it and Unblock the Notifications