சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பூனையை மடியில்".. கோட்டைக்கு பறந்த "வீடியோ".. ஸ்டாலின் யாரை சொல்கிறார் தெரியுதா.. சபாஷ்

: பத்திரிகையாளர் மணி ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் திமுக குறித்து கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் என்ன என்பது குறித்த வாதம், வெடித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

எம்பி தேர்தலுக்கு தயாராகி வரும் தமிழக பாஜக, திமுக அரசை மட்டுப்படுத்த, எல்லாவித காய்களையும் நகர்த்த துவங்கிவிட்டது.. இதற்கான வேலைகளை கடந்த 6 மாத காலமாகவே, பாஜக முனைப்புடன் பார்த்து வருகிறது.

இன்னும் இதுபோன்ற பல லிஸ்ட்கள், ஒவ்வொரு துறை குறித்தும், ஒவ்வொரு மாதமும் அம்பலப்படுத்துவோம் என்று கூறியிருந்தார்..

 அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்! அசோக் கெலாட் மீது அதிருப்தி.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் கவனத்தை பெறும் 3 தலைவர்கள்!

 ஃபைல்கள்

ஃபைல்கள்

அதேபோல, ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்கள் குறித்த ஃபைல்கள், ரிப்போர்ட்கள், ஆதாரங்களை திரட்டி ஆளுநர் ரவியிடமும், பாஜக மேலிடத்துக்கும் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதுபோக, மேலும் சில அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து, கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த ஜேபி நட்டாவிடமும் சீக்ரெட் ஃபைல்களாக தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இவைகளை வைத்து கொண்டு, பாஜக மேலிடம் இனி மெல்ல மெல்ல தன்னுடைய அரசியல் கணக்கை ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.

 லாக்கப் டெத்

லாக்கப் டெத்

அடுத்ததாக, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த விவகாரங்களை பாஜக கையில் எடுத்தது.. இதில் முதலில் உள்ளது லாக்கப் மரணங்கள், அடுத்துள்ளது கஞ்சா புழக்கம், இதற்கடுத்தபடியாக உள்ளது பள்ளி மாணவிகளின் மரணங்கள்.. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆதாரப்பூர்வமாக திரட்டி, அத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் வீடியோக்களையும் இணைத்து மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக, இதையும் பாஜக அரசியலாக்கும் என்கிறார்கள்.

டேமேஜ்

டேமேஜ்

இதனிடையே இன்னொரு தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.. சில முக்கிய அமைச்சர்களுக்கு பாஜக குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.. இவர்கள் ஏதாவது சர்ச்சையாக பேசினால், அதைவைத்தே அவர்கள் மீது வழக்குகள் தொடுப்பது அல்லது பொதுவெளியில் விமர்சனத்தைக் கிளப்பி அவரது மதிப்பை குலைத்து, ஒட்டுமொத்த திமுகவுக்கும் டேமேஜ் ஏற்படுத்துவது என்பதுதான் பாஜகவின் முக்கிய அஜெண்டாவாகவே உள்ளதாம்.. அதற்கேற்றபடி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரின் பேச்சு தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது..

 பறந்த மெசேஜ்

பறந்த மெசேஜ்

இதுபோன்ற சில அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகள் கோட்டைவரை முதல்வர் காதுக்கு சென்றதாகவும், அதை கேள்விப்பட்டு, ஸ்டாலின் மிகவும் வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.. அதிலும் சில அமைச்சர்கள் பேசிய சர்ச்சை வீடியோக்களை, நேரடியாகவே முதல்வரிடம் போட்டுக் காட்டப்பட்டதாம்.. அப்போதுதான் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் என்றுகூட செய்திகள் கசிந்தன.. அதனால்தான் பாஜக பேசுவது போல எதற்கும் இடம் தந்துவிடாதீர்கள் என்று மறைமுக உத்தரவு ஒன்றும் திமுக தலைகளுக்கு பறந்ததாம்.

 சிலுப்பும் உருவம்

சிலுப்பும் உருவம்

இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, அரசியல் கட்சிகளையும் தாண்டி, தமிழக மக்களால் பெரிதும் உற்றுநோக்கப்பட்டன.. "சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்புசிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்துமேற்கொள்ள வேண்டி இருக்கிறது" என்று ஸ்டாலினின் வார்த்தைகள் எதிர்க்கட்சியை ரொம்பவே அசைத்துவிட்டது. இந்த அறிக்கை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, முதல்வரின் எச்சரிக்கை குறி யாரை நோக்கி உள்ளது என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணி, ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் விரிவாக தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

 சாஃப்ட் அட்வைஸ்

சாஃப்ட் அட்வைஸ்

நம் முதல்வர் சாஃப்ட் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. ஆனால், பினராயி விஜயன், அந்த நச்சு சக்திகள் யார் என்று பெயர்களுடனேயே விவரித்துவிட்டார்.. ஆர்எஸ்எஸ், கவர்னர், பாஜக என பெயரை குறிப்பிட்டே அறிக்கை வெளியிட்டார் பினராயி விஜயன்.. அதேபோல, நம் முதல்வர் சொல்லும் நச்சு சக்திகள் யார் என்பது நமக்கு நமக்கு நல்லாவே தெரியும்.. பெயரை குறிப்பிட்டும் நம் முதல்வர் சொல்லியிருக்கலாம்.. ஆனால், சபை நாகரீகம் கருதி, பதவியில் இருப்பதால் இவ்வாறு முதல்வர் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம்.. எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் ஒருவேளை பெயர்களை சொல்லியிருக்கலாம்..

 வெட்டி + ஒட்டி

வெட்டி + ஒட்டி

அதேசமயம், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கும் முக்கிய அறிவுரையை தந்திருப்பதையும் கவனமாக அணுக வேண்டி உள்ளது.. ஒருவர் பேசுவதை தவறாக வெட்டி ஒட்டி சித்தரிப்பு செய்வதை குறிப்பிடுகிறார்.. ஆ.ராசா அன்று பேசியது நமக்கு தெரியும்.. அவர் மனுஸ்மிருதியில் உள்ளதைதான் எடுத்து சொல்கிறார் என்று எல்லாருக்குமே தெரியும்.. ஆனாலும், கட்சிக்காரர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தால், "தவிர்க்க வேண்டும்" என்று அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்ல வருகிறாரோ என்றே அர்த்தம் கொள்ளப்பட நேரிடுகிறது.

 பொன்முடி உளறல்

பொன்முடி உளறல்

'அமைச்சர்கள்' என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.. அரசாங்கத்தின் கொள்கைகளால் நேரடியாக பலன்பெறக்கூடியவர்களை பார்த்து, நீங்க ஓ.சியில் போறீங்க என்கிறார் பொன்முடி.. எப்போதுமே பொன்முடி இதுபோன்ற நிறைய உளறல்களை செய்யக்கூடியவர்.. பொன்முடி போன்ற அமைச்சர்களுக்கான அறிவுரையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.. இன்றைய காலகட்டத்தில் தேவைப்படக்கூடிய அறிவுரையாக, அறிக்கையாக இது உள்ளது..

 வார்னிங்

வார்னிங்

இன்னும் சொல்லப்போனால் முதல்வரின் இந்த அறிக்கைக்கு பிறகுதான், வெகுஜன ஊடகங்களில் இது பற்றின விவாதமே நடக்க ஆரம்பித்துள்ளது.. அதுவரை முதல் 2 நாட்களும், பிஎப்ஐ ரெய்டு, பெட்ரோல் குண்டுவீச்சுகள் சம்பவங்களைகூட வெகுஜன ஊடகங்கள் விவாதிக்க மறுத்தன.. ஆனால், முதல்வர் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டதுமே, அதுதான் ஊடகங்களில் விவாதமாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.. அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது இந்த அறிக்கை.. ஒருபக்கம் எதிர்தரப்புக்கு வார்னிங் தந்துகொண்டே, திமுக தரப்பினருக்கும் கடிவாளம் போட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.

English summary
Does CM MK Stalins statement gain significance and what is the reason, Explains Journalist Mani: Special Interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X