சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருவாடு" மீன் ஆகுது போல.. "இங்கே" வர்றாங்களாமே.. கரெக்ட்டா குறி வைக்கும் எடப்பாடி.. திகைக்கும் பாஜக

அதிருப்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒன்றிணைக்க போகிறார் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.. இது குறித்து 2 விதமான உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

இந்த முறை தமிழகத்தில் குறைந்தது 10 சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக களமிறங்கி உள்ளது. குறிப்பாக, தென்மண்டலங்களில் இந்த முறை காலூன்றிவிட வேண்டும் என்ற முனைப்புடனும் இருப்பதாக தெரிகிறது.

தென்மண்டலங்களில் வாக்குகளை கணிசமாக பெறுவதற்கு ஓபிஎஸ், + டிடிவி இருவருடைய பங்களிப்பும் பெருமளவுக்கு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது..

குஜராத் இமாலய வெற்றி.. பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு.. மோடிக்கு வாழ்த்துச் சொன்ன ஓபிஎஸ், ஈபிஎஸ்! குஜராத் இமாலய வெற்றி.. பாஜக நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு.. மோடிக்கு வாழ்த்துச் சொன்ன ஓபிஎஸ், ஈபிஎஸ்!

பிடிவாதம்

பிடிவாதம்

ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும்நிலையில், மேலிடம் குழம்பி போயுள்ளதாகவும் தெரிகிறது.. தமிழகம் வந்திருந்தபோது, பிரதமர் மோடியும் சரி, அமித்ஷாவும் சரி, ஓபிஎஸ்ஸையும், எடப்பாடியையும் தனியாக அழைத்து பேசவேயில்லை.. ஓபிஎஸ் தங்களின் அபிமானி என்றாலும்கூட, அவரைகூட, தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச மேலிடம் டைம் ஒதுக்கவில்லை.. பாஜக தலைவர்கள் நினைத்திருந்தால், எடப்பாடி & ஓபிஎஸ்ஸை தனித்தனியாகவே ஏர்போர்ட்டிலேயே சந்தித்து பேசியிருக்க முடியும்..

 10 நிமிஷம்

10 நிமிஷம்

ஆனால், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதை அழுத்தமாக வலியுறுத்தவே, இவ்வாறு தனித்தனியாக பேசிவிட்டு சென்றதாவும், இருவருமே அதிமுகவில் சரிசமம் என்பதை மறைமுகமாக வலியுறுத்தி விட்டு போனதாகவும் கூறப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம் ஒரு பிரபல டிவி சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்தபேட்டியில், "எடப்பாடியின் அரசியல் பாஜகவுக்கு பிடிக்கவில்லை.. ஒன்றுபட்ட அதிமுகவையே விரும்புகிறார்கள். அதிமுக பெயரை டேமேஜ் செய்து கொண்டே, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும்.. மோடிதான் அதிமுகவின் ஒரே தலைவராக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது..

 டபுள் + டபுள் + டபுள்

டபுள் + டபுள் + டபுள்

7 வருடமாக வருமான விஜயபாஸ்கர் வரி செலுத்தவில்லை என்கிறார்கள்.. 200 கோடி ரூபாய்க்கு வருமானவரி கட்டவில்லையாயானால், அவர் குறைந்தபட்சம் 600 கோடியையாவது சம்பாதித்திருக்க வேண்டும்.. இந்த 600 கோடி எங்கிருந்து அவருக்கு வந்தது? தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை, உடனடியாக வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்.. ஆனால், திரும்ப திரும்ப ரெய்டுகளை மட்டும் திமுக அரசு நடத்துகிறது.. இதே விஜயபாஸ்கரிடம் அத்தனை முறை ரெயிடு நடந்தும் சார்ஜ் ஷீட் போடவில்லையே ஏன்? இதுவரை ஒருத்தரும் கைது செய்யவில்லையே ஏன்? எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வீடுகளில் இன்னும் ரெய்டு நடக்கவில்லையே ஏன்? இதுகுறித்த கேள்விகளும் எழுகின்றன.

 டாக்குமெண்ட்கள்

டாக்குமெண்ட்கள்

அதிமுக கூட்டணியில்தான் இன்னமும் பாஜக இருக்கிறது.. என்டிஏ கூட்டணியில் இருப்பதாக எடப்பாடியும் சொல்கிறார்.. கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் 200 கோடி வரிஏய்ப்பு என்று சொல்வதும், பாஜக அரசுதான்.. அந்த பாஜகவில் உறவு வைத்துள்ளது அதிமுக.. அந்த அதிமுகவில் உள்ளவர் விஜயபாஸ்கர் என்றால் இதைவிட கேலிகூத்து என்ன இருக்கமுடியும்? எடப்பாடி ஆட்சியில் ஊழலில் திளைத்ததை கூட்டணி கட்சியான பாஜகவே கோர்ட்டில் ஆவணமாக தாக்கல் செய்துள்ளது.. அப்படியென்றால், இந்த 2 கட்சியில் உள்ளவர்களும் எப்படி ஒன்றாக சேர்ந்து ஓட்டு கேட்பார்கள்? விஜயபாஸ்கர் அடித்த கொள்ளையில் பாஜகவுக்கும் பங்கு போயிருக்கிறது என்று எடுத்து கொள்வதா?

 டேமேஜ்ஜா

டேமேஜ்ஜா

விஜயபாஸ்கர் எடப்பாடிக்கு எதிராக திரும்புவாரா? அப்படி திரும்பினால் விஜயபாஸ்கர் தப்பித்து விடுவார்.. இரட்டை இலக்கத்துக்கு மேல், சீட் ஒதுக்க வேண்டும், குறைந்த 15 சீட்டுகளையாவது பாஜக எதிர்பார்க்கும்.. இல்லாவிட்டால், இரட்டை இலையை முடக்கக்கூடும்" என்பது உட்பட தன்னுடைய பல அனுமானங்களை அதில் தெரிவித்திருந்தார்.. இந்தநிலையில், ஒரு தகவல் அரசியல் களத்தில் கசிந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதன்படி, பாஜக இல்லாவிட்டாலும், தனித்து களமிறங்கவும் எடப்பாடி பழனிசாமி தயாராகவே இருக்கிறார்கள்..

தம்பிதுரை

தம்பிதுரை

அதனால்தான், 3 நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் மூத்த தலைவர் தம்பிதுரை பேசும்போது, "நாற்பதும் நமக்கே" என்ற ஜெயலலிதாவின் கனவை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் என்கிறார்கள்.. நாற்பதும் நமக்கே என்றால், ஜெ.,பாணியில் எடப்பாடி பழனிசாமி தனித்து போட்டியிட போகிறார் என்று அர்த்தமா? அப்படியானால், நாமக்கல் கூட்டத்தில் மெகா கூட்டணி அமையும் என்று பேசியது ஏன்? என்ற குழப்பமும் அதிமுகவுக்குள் மேலோங்கியிருக்கிறது..

 அன்வர் ராஜா

அன்வர் ராஜா

மற்றொருபக்கம், தனித்து களமிறங்க, பிரிந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் எடப்பாடி பழனிசாமி ஈடுபட உள்ளதாக கூறுகிறார்கள்.. குறிப்பாக, மூத்த தலைவர் கேசி பழனிசாமியை மீண்டும் இணைத்து கொள்ளலாமா? அதேபோல, அன்வர்ராஜா, தம்பிதுரை போன்ற சீனியர்களையும் அழைத்து கொண்டு, கட்சியை பலப்படுத்தலாமா? என்ற யோசனையும் உள்ளதாம்.. இவர்கள் எல்லாம் ஓபிஎஸ்ஸுடன் அவ்வளவாக இணக்கமாக இல்லாத சூழலில், அவர்களை மீண்டும் தன் பக்கம் கொண்டு வருவதுடன், பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் இணைக்கும்போது அது வலுவாக இருக்கும் என்றும் எடப்பாடி நம்புகிறாராம்..

 தினகரன் ஸ்கெட்ச்

தினகரன் ஸ்கெட்ச்

இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. டிடிவி தினகரனை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பதுடன் நிறுத்தி கொள்கிறார்.. மேலும், எடப்பாடியுடன் இணைய வாய்ப்பில்லை என்பதையும் வலியுறுத்தி கொண்டே உள்ளார். .அதேசமயம், எடப்பாடியுடனான கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.. அமமுக என்ற கட்சியை தன்னிடம் வைத்துள்ளதால், அதிமுக தலைமையிலான கூட்டணியிலோ அல்லது ஓபிஎஸ தலைமையிலான அதிமுகவிலோ டிடிவி இணைய வாய்ப்பில்லை என்கிறார்.. ஆனால், இவர்களுடன் கூட்டணியில் போக மாட்டேன் என்றும் சொல்லவில்லை..

 பஞ்ச தந்திரம்

பஞ்ச தந்திரம்

கூட்டணி விவகாரம் இன்னும் எந்த முடிவுக்கும் வராத சூழலில், அதற்கு முன்னதாக, தன் தரப்பிலான அணிகளை, நிர்வாகிகளை, ஒன்றிணைத்து கொள்வது என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.. எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைத்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், அதிமுகவின் அதிருப்தியாளர்களை ஒன்றுசேர்க்க சேர்த்தால், அது தனக்கு பிரதானமாக உதவும் என்றும் நினைக்கிறாராம்.. ஒருவேளை தன் ஆதரவாளர்களில் யாரையாவது, பாஜக மேலிடம் குறி வைத்து, தன்பக்கம் இழுத்துக் கொண்டாலோ, அல்லது தன்னிடம் உள்ள ஆதரவாளர்கள் பாஜக பக்கம் சென்றாலோ, எந்த காரணத்தை முன்னிட்டும் தன்னுடைய அணியை பலமாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ளவே இப்படி ஒரு முடிவை எடுக்க போகிறாராம்.. அடுத்து என்ன நடக்க போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

English summary
Does Edapadi Palanisamy unite the dissidents and What are the new ideas of AMMK TTV Dinakaran
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X